"கடமையைச் செய்தேன்." தாக்கப்பட்ட பாதுகாவல் அதிகாரி சுரேஷ் பெருமாளின் பேட்டி

சுமார் 90 கிலோகிராம் எடையும் 1.7 மீட்டர் உயரமும் உள்ள திரு சுரேஷ் பெருமாளைவிட உருவத்தில் சிறியவர் அவரைத் தாக்கியபோதும் அவர் பதிலுக்குத் தாக்கவில்லை.

கடந்த திங்கட்கிழமை (ஜூலை 4) இரவு, தெம்பனீசில் உள்ள ஜாயன்ட் பேரங்காடியின் வெளியே பாதுகாவல் அதிகாரியான திரு சுரேஷ் தாக்கப்பட்டார்.

46 வயது திரு பெருமாளுக்கு இதுபோன்ற சம்பவங்களின்போது எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதில் பயிற்சி பெற்றவர்.

பதில் தாக்குதல் நடத்தக்கூடாது என்றும் அதிகாரிக்கும் காவல்துறைக்கும் அது பற்றி புகார் அளிக்க வேண்டும் என்று அவருக்குப் பயிற்சி அளிக்கப்பட்டிருந்தது.

தாக்கியவர் தம்மைவிட சிறியவராக இருந்ததால், அவர் கொடுத்த அடிகளில் சிலவற்றைத் தம்மால் தடுக்க முடிந்ததாக திரு சுரேஷ் ;ணுட்ரெய்ட்ஸ் டைம்சிடம் கூறினார்.

சிங்கப்பூரில் பாதுகாவல் அதிகாரியாகப் பணியாற்றிய பத்தாண்டுகளில் தாம் தாக்கப்பட்டது இதுவே முதல்முறை என்றார் திரு சுரேஷ்.

அவர் தாக்கப்பட்ட சம்பவத்தைக் காட்டும் காணொளியை சிங்கப்பூர் பாதுகாவல் சங்கம் பகிர்ந்திருந்தது.

ஆடவரால் தாக்கப்பட்ட திரு சுரேஷ் பெருமாள்

திங்கட்கிழமை இரவு, போக்குவரத்தைக் கட்டுப்படுத்தும் பணியை திரு சுரேஷ் செய்து கொண்டிருந்தார்.

சுமார் 10.20 மணி அளவில் கட்டடத்தின் வாயிலில் முகக்கவசம் அணியாது நின்றுகொண்டிருந்த ஆடவரிடம் முகக்கவசம் அணிந்துவிட்டு உள்ளே செல்லச் சொன்னார் திரு சுரேஷ்.

ஒரு நிமிடம் கழித்து திரு பெருமாளைத் தாக்கிய அந்த ஆடவரை, ஜாயன்ட் பேரங்காடி ஊழியர்களும் பொதுமக்கள் சிலரும் தடுத்தனர்.

தம்மிடம் பணிவன்புடன் நடக்கவில்லை என்று திரு சுரேஷை தாக்கிய ஆடவர் நம்பியதாகத் தெரிந்தது.

சிறிது நேரத்தில் ஆம்புலன்ஸ் வந்தது. காவல்துறை அதிகாரிகளும் வந்துவிட்டனர். திரு சுரேஷ் பரிசோதிக்கப்பட்டார்.

அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படவில்லை; வேலையைத் தொடர்ந்தார்.

மனநல (பராமரிப்பு சிகிச்சை) சட்டத்தின்கீழ் 57 வயது ஆடவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் கூறியுள்ளனர்.

பாதுகாவல் அதிகாரியை வேண்டும் என்றே காயப்படுத்தியதற்காக அவர் மீது விசாரணை நடத்தப்படும்.

திரு சுரேஷுக்கு திருமணமாகி மூன்று மகள்கள் உள்ளனர்.

தமது மனைவி கவலைப்படுவதாகவும் கவனமாக இருக்கும்படி தம்மிடம் சொன்னதாகவும் திரு சுரேஷ் கூறினார்.

அந்த சம்பவம் பயத்தை ஏற்படுத்தியபோதும் பாதுகாவல் பணியைத் தொடரப் போவதாக அவர் குறிப்பிட்டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!