சென்ற ஆண்டு திருமணங்கள், விவாகரத்துகள் அதிகரித்தன

இல்­லற வாழ்­வைப் பொறுத்­த­வரை சென்ற ஆண்டு சிங்­கப்­பூ­ரில் இன்ப­மும் துன்­ப­மும் சேர்ந்தே விளைந்­த­தா­கத்­தான் குறிப்­பிட முடி­யும்.

கொவிட்-19 கிரு­மிப்­ப­ர­வலை முன்­னிட்டு 2020ஆம் ஆண்டு அமல்­ப­டுத்­தப்­பட்ட கடு­மை­யான விதி­மு­றை­கள் சென்ற ஆண்டு சற்றே தளர்த்­தப்­பட்­டன. இதைத் தொடர்ந்து பல திரு­ம­ணங்­கள் குதூ­க­ல­மாக நடந்த வேளை­யில், மண­வி­லக்­கு­க­ளின் எண்­ணிக்­கை­யும் அதி­க­மா­கவே பதி­வா­னது.

மொத்­தம் 28,329 தம்­ப­தி­கள் 2021ல் இல்­லற வாழ்­வில் அடி­யெ­டுத்து வைத்­த­னர். அதற்கு முந்­தைய ஆண்­டு­டன் ஒப்­பி­டு­கை­யில் இது 25.1 விழுக்­காடு அதி­கம் என்­பது இனிப்­பான செய்தி.

கிரு­மிப்­ப­ர­வ­லால் 2020ஆம் ஆண்டு முன்­னரே திட்­ட­மிட்­டி­ருந்­தோ­ரும்­கூ­டத் தங்­கள் திரு­ம­ணங்­களை நடத்­த­வில்லை.

புள்­ளி­வி­வ­ரத் துறை நேற்று இந்­தத் தக­வல்­களை வெளி­யிட்­டது.

கொவிட்-19 கிரு­மிப்­ப­ர­வல் தொடர்­பான பாது­காப்பு நிர்­வாக நடை­மு­றை­கள் தளர்த்­தப்­பட்ட பிறகு அதி­க­மா­னோர் திரு­ம­ணம் செய்து­கொண்­ட­தா­கக் கூறப்­பட்­டது.

அதே­வே­ளை­யில் 7,890 தம்­ப­தி­கள் இல்­ல­றப் பிணைப்­பில் இருந்து பிரிந்­த­னர். 2020ஆம் ஆண்­டு­டன் ஒப்­பி­டும்­போது இது 13.4 விழுக்­காடு அதி­கம் என்று கூறப்­பட்­டது.

ரத்து செய்­யப்­பட்ட விவா­கங்­கள், செல்­லாது என அறி­விக்­கப்­பட்ட விவா­கங்­கள் இரண்­டும் இதில் அடங்­கும்.

கிரு­மிப்­ப­ர­வலை முன்­னிட்டு ஏற்­கெ­னவே விசா­ரிக்­கப்­பட்ட சில விவா­க­ரத்து வழக்­கு­கள் ஒத்­திப்­போ­டப்­பட்­டன. சென்ற ஆண்டு அவை மீண்­டும் விசா­ரிக்­கப்­பட்­ட­தா­கக் கூறப்­பட்­டது.

கொவிட்-19 நோய்ப் பர­வ­லைத் தடுப்­ப­தற்­கான நட­வ­டிக்­கை­கள் நடப்­பில் இருந்த கால­கட்­டத்­தில் உயி­ருக்கு ஆபத்து விளை­விக்­கக்­கூ­டி­ய­தாக அஞ்­சப்­பட்ட அதி­முக்­கிய விவா­க­ரத்து வழக்­கு­களை மட்­டுமே குடும்ப நீதி­மன்­றம் கையாண்­டது என்று குடும்ப வழக்­கு­க­ளைக் கையா­ளும் வழக்­க­றி­ஞர்­கள் கூறி­னர். மற்ற வழக்­கு­கள் அனைத்­தும் தள்­ளிப்­ போ­டப்­பட்­ட­தால் பதி­வான விவா­க­ரத்து வழக்­கு­கள், விசா­ர­ணைக்கு வந்த விவா­க­ரத்து வழக்­கு­கள் ஆகி­ய­வற்­றின் எண்­ணிக்கை குறைந்­த­தாக இவர்­கள் கூறி­னர்.

சென்ற ஆண்டு கட்­டுப்­பா­டு­கள் தளர்த்­தப்­பட்­ட­தால் கூடு­த­லா­னோர் வழக்­கு­க­ளுக்­குப் பதிந்­து­கொண்­ட­னர். இருப்­பி­னும் 10 ஆண்­டு­க­ளுக்கு முன்­பை­விட சென்ற ஆண்டு குறை­வான தம்­ப­தி­களே மண­விலக்கு பெற்­ற­தா­கக் கூறப்பட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!