செய்திக்கொத்து

தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட் ரயில்பாதையில் மூன்றரை மணி நேரம் சேவைத்தடை

கேல்டிகாட் நிலையத்தில் இணைப்புப் பேருந்துக்குக் காத்திருந்த பயணிகள். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட் ரயில் பாதையில் நேற்றுக் காலை எட்டு மணியளவில் ஏற்பட்ட சமிக்ஞைக் கோளாற்றால் இருவழிகளிலும் சேவை கிட்டத்தட்ட மூன்றரை மணி நேரம் தடைபட்டது.

உட்லண்ட்ஸ் நார்த் ரயில் நிலையத்திலிருந்து கேல்டிகாட் ரயில் நிலையம் வரையிலான ஒன்பது நிலையங்களில் மொத்தம் 19 ரயில்சேவைகள் பாதிக்கப்பட்டதாக 'எஸ்எம்ஆர்டி' நிறுவனம் தெரிவித்தது. நின்றுபோன ஆறு ரயில்களில் பயணிகள் சிலர் சிக்கிக்கொண்டனர்.

மற்ற 13 ரயில்களில் இருந்த பயணிகளுக்கு இணைப்புப் பேருந்துகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. முற்பகல் 11.20 மணியில் இருந்து படிப்படியாக சேவை வழக்கநிலைக்கு மீண்டது. அண்மை மாதங்களில் இந்தப் பாதையில் சேவை தடைபட்டது இது மூன்றாவது முறை.

டோமி கோ, வாங் கொங்வு இருவருக்கும் கௌரவ டாக்டர் பட்டம்

சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகம் நேற்று இரு முதுபெரும் பேராசிரியர்களுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கிச் சிறப்பித்தது.

பேராசிரியர் டோமி கோவுக்கு 'டாக்டர் ஆஃப் லா' பட்டமும், பேராசிரியர் வாங் கொங்வுவிற்கு 'டாக்டர் ஆஃப் லெட்டர்ஸ்' பட்டமும் வழங்கப்பட்டன. இரு கல்விமான்களும் தத்தம் துறைக்கு அப்பாலும் ஆற்றிய பங்களிப்பைக் கௌரவிக்கும் வண்ணம் இந்தப் பட்டங்கள் வழங்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

'தேவைப்பட்டால் வீவக அதன் கொள்கைகளை மறுஆய்வு செய்யும்'

வீடமைப்பு வளர்ச்சிக் கழகக் குடியிருப்புகளில் உள்ள காப்பிக் கடைகளின் விற்பனை, அவற்றில் உணவு விலை ஆகியவற்றைக் கழகம் கண்காணித்து வருவதாக தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ கூறியிருக்கிறார்.

விலை கட்டுப்படியாதல் தொடர்பான பிரச்சினைகள் எழுந்தால் இவை தொடர்பான கொள்கைகளை மறுஆய்வு செய்ய கழகம் தயங்காது என்றார் அவர். இத்தகைய காப்பிக் கடைகள் மில்லியன்கணக்கான வெள்ளிக்கு விற்பனையான தகவல் வெளியானதைத் தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர் லீ எழுத்து மூலம் இவ்வாறு பதிலளித்தார்.

தெம்பனிஸ், ஈசூன் ஆகிய வட்டாரங்களில் சென்ற மாதம், தலா 40 மில்லியன் வெள்ளிக்கும் அதிகமான தொகைக்கு இரண்டு காப்பிக் கடைகள் கைமாறின.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!