ஆஸ்திரேலியாவுடனான விநியோகச் சங்கிலியை வலுப்படுத்த முனைப்பு

சிங்­கப்­பூ­ரும் ஆஸ்­தி­ரே­லி­யா­வும் அவற்­றுக்கு இடை­யி­லான உத்­தி­பூர்வ நம்­பிக்­கை­யின் அடிப்­ப­டை­யில் விநி­யோ­கச் சங்­கி­லியை வலுப்­ப­டுத்த முனை­வ­தாக சிங்­கப்­பூர் வெளி­யு­றவு அமைச்­சர் விவி­யன் பால­கி­ருஷ்­ணன் தெரி­வித்­துள்­ளார். வருங்­கா­லத்­தில் நெருக்­க­டி­கள் ஏதும் ஏற்­பட்­டா­லும் அவற்­றைச் சமா­ளிக்க இம்­மு­யற்சி கைகொ­டுக்­கும் என்­றார் அவர்.

சிங்­கப்­பூர் வந்­துள்ள ஆஸ்­திரே­லிய வெளி­யு­றவு அமைச்­சர் பென்னி வாங்­கு­டன் இணைந்து டாக்­டர் விவி­யன் செய்­தி­யா­ளர் கூட்­டத்­தில் கலந்­து­கொண்­டார்.

உலக விவ­கா­ரங்­களில் ஒரு­மித்த கருத்­து­கொண்ட இரு நாடு­களுக்­கும் இடையே நீண்­ட­கா­ல­மாக நில­வும் பங்­கா­ளித்­து­வத்­தைக் குறிப்­பிட்ட அமைச்­சர், வருங்­கால ஒத்­து­ழைப்­புக்­கான சாத்­தி­யங்­கள் குறித்­தும் பேசி­னார்.

சிங்­கப்­பூ­ருக்கு முதல்­முறை வந்­துள்ள திரு­வாட்டி வோங், விநி­யோ­கம் தொடர்­பில் இரு நாடு­களுக்கும் இடையே நில­வும் நம்­ப­கத்­தன்மை, நம்­பிக்கை ஆகி­ய­வற்­றுக்கு நன்றி தெரி­வித்­தார். இரு நாடு­க­ளுக்­கும் இடை­யி­லான பிணைப்பு மகிழ்ச்­சி­யான தரு­ணங்­களில் மட்­டு­மின்றி சிர­ம­மான வேளை­யி­லும் கைகொ­டுக்­கக்­கூடியது என்று கூறிய அவர், பிர­த­மர் லீ சியன் லூங், துணைப் பிர­த­மர் லாரன்ஸ் வோங் ஆகி­யோ­ரை­யும் சந்­தித்­தார்.

இதற்­கி­டையே, தென்­கொ­ரிய வெளி­யு­றவு அமைச்­சர் டாக்­டர் பார்க் ஜின், தென்­னாப்­பி­ரிக்க வெளி­யு­றவு அமைச்­சர் நலெடி பேண்­டர் ஆகி­யோ­ரும் பிர­த­மர் லீயைச் சந்­தித்­த­னர். இந்­திய வெளி­யு­றவு அமைச்­சர் ஜெய்­சங்­கர் துணைப் பிர­த­மர் லாரன்ஸ் வோங்கைச் சந்­தித்­தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!