பாலியல் குற்றம்: மேல்முறையீட்டால் தண்டனை குறைக்கப்பட்டது

26 வயது ஆட­வர் ஒரு­வர், இன்­னொ­ரு­வர் அவ­ரது காத­லி­யு­டன் பாலி­யல் ரீதி­யி­லான நட­வ­டிக்கையில் அந்­தப் பெண்­ணுக்­குத் தெரி­யா­மல் ஈடு­பட வாய்ப்­ப­ளித்­ததை ஏற்­றுக்­கொண்­டார்.

இது­தொ­டர்­பான வழக்­கில் ஸ்ரீஹரி மகேந்­தி­ரன் என்ற அந்த ஆட­வ­ருக்கு கடந்த 2020ஆம் ஆண்டு 17 ஆண்டு 10 மாதங்­கள் சிறைத்­தண்­ட­னை­யும் 14 பிரம்­ப­டித் தண்­ட­னை­யும் தீர்ப்­பாக அளிக்­கப்­பட்­டது.

தமக்கு அளிக்­கப்­பட்ட தண்­ட­னையை குறைக்­கும்­படி அந்த ஆட­வர் மேல்­மு­றை­யீடு செய்­தி­ருந்­தார். அந்த மேல்­மு­றை­யீட்டு மனுவை விசா­ரித்த மேல் நீதி­மன்­றம் அவ­ரது சிறைத்­தண்­ட­னையை பதி­னா­றரை ஆண்­டு­க­ளாக நேற்று குறைத்து தீர்ப்­ப­ளித்­தது.

அவ­ருக்கு முன்­ன­தாக அளிக்­கப்­பட்ட பிரம்­ப­டித் தண்­ட­னை­யில் எவ்­வித மாற்­ற­மும் இல்லை.

இன்­னொ­ரு­வ­ரு­டன் உல்­லா­ச­மாக இருப்­ப­தைக் காண வேண்­டும் என்ற தனது கற்­ப­னையை நிறை­வேற்­று­வ­தற்­காக, அந்­தப் பெண்­ணைக் கட்­டி­லில் கட்­டிப்­போட்டு, இந்த ஆட­வரை அவ­ரி­டம் பாலி­யல் உற­வு­கொள்­ளச் செய்­துள்­ளார். எனவே அந்­தப் பெண்­ணின் காத­லனே முக்­கி­ய குற்­ற­வாளி என்­றும் ஸ்ரீஹ­ரி­யின் வழக்­க­றி­ஞர் வாதா­டி­னார்.

ஆனால், அவ­ருக்கு முன்­ன­தாக சிறைத் தண்­டனை அளிக்­கப்­பட்­டது கீழ் நீதி­மன்­றத்­தின் முடிவு. அது சரி­யான முடி­வு­தான் என்று மேல்­மு­றை­யீட்டு நீதி­மன்­றம் தெளி­வு­ப­டுத்­தி­யது.

இந்த வழக்­கில் முக்­கிய குற்­ற­வா­ளி­யா­கக் கரு­தப்­படும் 30 வயது ஆட­வர் 19 ஆண்டு, 11 மாதச் சிறைத்­தண்­ட­னையை அனு­ப­வித்து வரு­கி­றார். இவர் முன்­னாள் துணைக் காவல்­துறை அதி­காரி ஆவார். 2016ஆம் ஆண்டு, பாதிக்­கப்­பட்ட மேற்­கூ­றப்­பட்ட பெண்­ணி­டம் இரண்டு முறை பாலி­யல் வன்­கொடுமை மற்­றும் பாலி­யல் ரீதி­யா­கத் துன்­பு­றுத்­தி­யது உள்­ளிட்ட குற்­றங்­கள் அவர் மீது சுமத்­தப்­பட்­டன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!