சிஓஇ கட்டணம் புதிய உச்சத்தைத் தொட்டது

'சிஓஇ' என்­ற­ழைக்­கப்­படும் வாகன உரி­மைச் சான்­றி­த­ழுக்­கான பொதுப்­பி­ரி­வுக் கட்­ட­ணம் எப்­போ­தும் இல்­லாத வகை­யில் நேற்று $110,524ஆக உயர்ந்­தது. இந்­தக் கட்­ட­ணம் சிறிய, பெரிய கார்­கள் என எல்­லாப் பிரி­வு­க­ளி­லும் அதி­க­ரித்­துள்­ளது.

வாகன விநி­யோக எண்­ணிக்கை குறைந்­துள்­ள­தால் 'சிஓஇ' இன்­ன­மும் உய­ர­லாம் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

பொதுப்­பி­ரி­வில் பெரிய வாக­னங்­க­ளுக்­கான கட்­ட­ணம், கடை­சி­யாக விடப்­பட்ட ஏலத்­தின்­போது $104,000ஆக இருந்­தது. அது இப்­போது 5.9 விழுக்­காடு அதி­க­ரித்­துள்­ளது.

இதற்­கு­முன் 1994ஆம் ஆண்டு 2,000 சிசி கார்­க­ளுக்­கும் அதற்கு மேற்­பட்ட வாக­னங்­க­ளுக்­கும் ஆன சிஓஇ $110,500ஐத் தொட்­டது.

1,600சிசி என்­ஜின் மற்­றும் அதற்­கும் குறை­வான சக்­தி­கொண்ட என்­ஜின்­க­ளைக் கார்­க­ளுக்­கும் 130பிஎச்பி, 110 கிலோ­வாட்ஸ் மின்­சக்­தி­யால் இயங்­கும் கார்­க­ளுக்­குமான வாகன உரி­மைச் சான்­றி­தழ் கட்­ட­ணம் $74,989ல் இருந்து 78,001 ஆக அதி­க­ரித்­துள்­ளது. இது முன்­னைய கட்­ட­ணத்­தைக் காட்­டி­லும் 4 விழுக்­காடு அதி­கம். பெரிய என்­ஜின்­க­ளைக் கொண்ட சக்­தி­வாய்ந்த கார்­க­ளுக்­கான வாகன உரி­மைச் சான்­றி­தழ் கட்­ட­ணம் 1.7விழுக்­காடு அதி­க­ரித்து $107,800 ஆனது. இது முன்பு $106,001ஆக இருந்­தது.

மோட்­டார்­சைக்­கிள்­க­ளுக்­கான சிஓஇ கட்­ட­ணம் $10,332ல் இருந்து $10,889ஆக அதி­க­ரித்­துள்­ளது. இது முன்­னைய கட்­ட­ணத்­தைக் காட்­டி­லும் 5.7 விழுக்­காடு அதி­கம்.

வர்த்­தக வாக­னங்­க­ளின் கட்­ட­ணம் $53,011ல் இருந்து 1.9 விழுக்­காடு அதி­க­ரித்து 54,001 ஆக அதி­க­ரித்­துள்­ளது. சில வாக­னப் பிரி­வு­க­ளுக்­கான வாகன உரி­மைச் சான்­றி­தழ் கட்­ட­ணங்­கள் (சிஓஇ) ஆகஸ்ட் மாதத்­தில் 1994ஆம் ஆண்­டின் சாதனை அள­வான $110,500ஐ தாண்­டக்­கூ­டும் என வாகன வர்த்­த­கர்­கள் கணித்­தி­ருந்­த­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!