தேசிய தின அணிவகுப்பு 2022: அசத்தவிருக்கும் ஆகாயப் படை; பவனிவரும் தேசிய கொடி  

சிறுவயதில் தேசிய தின அணிவகுப்பில் நடைபெறும் ஆகாயப் படை சாகசங்களை அன்னாந்து பார்த்து அதிசயித்த நாள்கள் நினைவுகளில் நிழலாட இன்று தானே அந்த விமானங்களை விண்ணில் செலுத்தும் குழுவில் பணிபுரிவது தனக்கு மிகவும் பெருமையாக உள்ளதாக பகிர்கிறார் முழுநேர தேசிய சேவையாளரான எஃப்-16 ரக போர் விமான ஆகாயப் படை தொழில்நுட்ப வல்லுநர் (F16 Airforce Technician) சந்தோஷ் குமார், 22.

“விண்ணில் செலுத்தப்படும் எஃப்-16 ரக போர் விமானங்களை ஆய்வு செய்து சரியான நிலையில் தயார்படுத்தி இதர உபகரணங்களை பராமரிப்பதே என்னுடைய பணி. இதற்கான பயிற்சிக்காக ஒவ்வொரு சனிக்கிழமையையும் நான் ஆவலுடன் எதிர்நோக்கி காத்துக்கொண்டிருப்பேன்” என்று உவகையுடன் கூறினார்.

இவ்வாண்டின் தேசிய தின அணிவகுப்பில் மொத்த பாதுகாப்பு சாகசக் காட்சித் தொகுப்பின் (Total Defence Display) ஓர் அங்கமாக சிங்கப்பூர் ஆகாயப் படையின் (Republic of Singapore Air Force RSAF) அதிநவீன தொழில்நுட்பத்துடன் மேம்படுத்தப்பட்ட போர்க்கால விமானங்களின் வான்சாகசக் காட்சி இடம்பெறும்.

சாகசக் காட்சிக்கு ஒரு சீ-130 (C-130), மூன்று சீஎச்-47எஸ்டி (CH-47SD), நான்கு ஏஎச்-64டி (AH-64D), ஆறு எஃப்-16 (F16), ஒரு சீஎச்-47எஃப் (CH-47F) உள்ளிட்ட மொத்தம் 15 விமானங்கள் செலுத்தப்படவுள்ளன. இதில் சீஎச்-47எஃப் (CH-47F Heavy Lift Helicopter) எனப்படும் கனம் தூக்கும் போர் விமானம் முதல் முறையாக விண்ணில் செலுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது. மேலும் முதல் முறையாக வான்வெளி சாகச வீரர்கள் ‘டூயல் ஹை-ஜீ டர்ன்’ சாகசத்துடன் சேர்ந்த ‘வர்ட்டிகல் கிளைம்ப்’ (Dual High-G turn and vertical climb) சாகசத்தையும் படைக்க உள்ளனர்.

இது குறித்து இவ்வாண்டின் தேசிய தின அணிவகுப்பின் ஆகாயப் படைகுழுவின் துணைத்தலைவர் ஸ்டான்லி செல்வா, 47 “இவ்வாண்டின் பெரும்பாலான வான்வெளி சாகசங்கள் ஒரே நாளில் நடப்பதனால் அதற்குரிய பயிற்சிகள் வீரர்களுக்கு மிகுந்த சவாலாக இருக்கின்றன. இருப்பினும் ஆகாயப் படையின் புதிய தொழில்நுட்ப சாதனங்களையும் விமானங்களையும் பொதுமக்களிடம் காட்டும் ஒரு வாய்ப்பாக இதை கருதுகிறோம்” என்று கூறினார்.

வழக்கமான தேசிய தினப் பற்றுறுதிச் சடங்குகளான ‘ஸ்டேட் ஃப்ளேக் ஃப்ளைபாஸ்ட்’ (State Flag Flypast) மற்றும் ‘ஃப்ளை அவர் ஃப்ளேக்’ அங்கங்களில் (Fly Our Flag) தேசிய கொடியை ஏந்தி செல்லும் ஹெலிகாப்டர்களுக்கான ஏற்பாடுகளும் பயிற்சிகளும் மேற்கொள்ளப்படுகின்றன. தேசிய கீதத்தின்போது மரினா பே மிதக்கும் மேடையில் ஒரு கொடியும், மாலையில் சிங்கப்பூர் வட்டாரங்களை சுற்றும் இரண்டு கொடிகளும் சேர்த்து மொத்தம் மூன்று கொடிகளை இவ்வாண்டின் தேசிய தினத்தன்று பொதுமக்கள் காணலாம்.

தரையிலிருந்து 1,000 அடி உயரத்தில் சராசரியாக மாலை 5.25 மணிக்கு இரு சீஎச்-47எஸ்டி ‘சினுக்’ (CH-47SD Chinook) ஹெலிகாப்டர்கள் தேசியக் கொடியை ஏந்தியபடி தீவின் கிழக்கு மற்றும் மேற்கு திசைகளில் இரு வேறு பாதைகளில் சிங்கப்பூரின் வட்டாரங்களை பவனி வரும். இரு பாதைகளும் சிங்கப்பூரின் வடக்கு பகுதியிலிருந்து தொடங்கி தெற்கு பகுதியில் நிறைவடையும். ஒவ்வொரு ஹெலிகாப்டருக்கும் இரு ஏஎச்-64டி ரக ‘அப்பாச்சி அட்டாக்’ (AH-64D Apache Attack) ஹெலிகாப்டர்கள் துணை செல்லும்.

30 மீட்டர் நீளமும் 20 மீட்டர் அகலமும் கொண்ட இந்த பிரமாண்ட கொடியை ஏறக்குறைய 25 பேர் கொண்ட ஆகாயப் படைக்குழு பராமரித்து வருகிறது. 15 கொடிகள் தேசிய தினத்தன்று தயார் நிலையில் இருக்கும் என்றும் கொடி பராமரிப்புக் குழு தெரிவித்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!