எரியும் வீட்டில் தனியாக இருந்த குழந்தைகள்: அமைச்சு விசாரணை

மார்சிலிங்கில் உள்ள ஒரு வீட்டில் தீ மூண்டபோது வீட்டில் தனியாக இரண்டு குழந்தைகள் இருந்த சம்பவத்தை சிறுவர் பாதுகாப்பு சேவைகள் விசாரித்து வருவதாக சமூக, குடும்ப மேம்பாட்டு அமைச்சு தெரிவித்தது. அந்தக் குடும்பத்துக்கு கூடுதல் உதவி தேவைபடுகிறதா என்றும் சேவைகள் ஆராய்ந்துவருகிறது.

குழந்தைகளின் பெற்றோர் இது குறித்து கருத்துரைக்க மறுத்துவிட்டனர்.

விசாரணை முடிவடைய சில வாரங்களிலிருந்து சில மாதங்கள் எடுக்கலாம் எனக் கூறப்பட்டது. அதுவரை குழந்தைகள் பெற்றோரை பிரிந்து வாழ தேவையில்லை.

விசாரணை முடிவடைந்ததும், இது குறித்து நீதிமன்றம் ஒரு முடிவெடுக்கும் எனத் தெரிவிக்கப்பட்டது. குழந்தைகள் பெற்றோர்களிடமிருந்து பிரிக்கப்பட்டு, பராமரிப்பாளர்களின் கவனிப்பில் வைக்கப்படலாம்.

மார்சிலிங் கிரசண்ட் புளோக் 218ல் உள்ள இரண்டாவது மாடி வீட்டில் சென்ற மாதம் தீ மூண்டது. வீட்டின் வரவேற்பு அறையில் இருந்த இரண்டு சிறுவர்கள் காவல் துறையினரால் மீட்கப்பட்டனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!