தேசிய தின அணிவகுப்பு 2022: அசத்தவிருக்கும் ஆகாயப்படை

மோன­லிசா

சிறு­வ­ய­தில் தேசிய தின அணி­வகுப்­பில் இடம்­பெ­றும் ஆகா­யப் படை சாக­சங்­களை அண்­ணாந்து பார்த்து அதி­ச­யித்த நாள்­கள் நினை­வில் நிழ­லாட இன்று தானே அந்த சாகசக் குழு­வில் பணி­பு­ரி­வது மிக­வும் பெரு­மை­யாக இருப்­ப­தா­கக் கூறு­கி­றார் முழு­நேர தேசி­ய சேவை­யா­ள­ரான 22 வயது சந்­தோஷ் குமார். 'எஃப்-16' ரகப் போர் விமா­னத்­துக்­கான ஆகா­யப் படைத் தொழில்­நுட்பர் இவர்.

"எஃப்-16 ரகப் போர் விமா­னங்­களை ஆய்வு செய்து சரி­யான நிலை­யில் தயார்ப்­ப­டுத்தி இதர கரு­வி­க­ளைப் பரா­ம­ரிப்­பது என்­னு­டைய பணி," என்று கூறி­னார் சந்­தோஷ்.

தேசிய சேவை­யின் 55ஆவது ஆண்­டு­நி­றை­வைக் குறிக்­கும் இவ்­வாண்­டின் தேசிய தின அணி­வ­குப்­பில் பங்­கு­கொள்­வது முழு­நேர தேசி­ய சேவை­யா­ள­ரான தனக்கு கிடைத்­தற்­க­ரிய வாய்ப்பு என்கி­றார் இவர்.

"பயிற்­சிக்­காக ஒவ்­வொரு சனிக்­கி­ழ­மை­யை­யும் நான் ஆவ­லு­டன் எதிர்­நோக்­கிக் காத்­துக்­கொண்­டி­ருப்­பேன்," என்று உவ­கை­யு­டன் கூறும் சந்­தோஷ், நன்யாங் பலதுறைத் தொழிற்கல்லூரியில் மின் பொறியியல் துறையில் பட்டயம் பெற்றவர்.

தேசி­ய சேவையை முடித்த பிறகு நன்­யாங் தொழில்­நுட்­பப் பல்­க­லைக்­க­ழ­கத்­தில் மின் மற்­றும் மின்­ன­ணு­ப் பொறி­யி­யல் துறை­யில் பட்­டப்­ப­டிப்பை மேற்­கொள்­ள­வி­ருக்­கும் இவர், இந்த அனு­ப­வம் நேர நிர்வாகம், நேர்த்தியாக வேலை செய்வது உள்­ளிட்ட திறன்­களை வளர்த்­துக்­கொள்ள அடித்­த­ளம் வகுத்­த­தா­க­வும் இளை­ய­ரான தனக்கு வருங்­கா­லத்­தில் இது பல வகை­களில் உத­வும் என்­றும் குறிப்­பிட்­டார்.

இவ்­வாண்­டின் தேசிய தின அணி­வ­குப்­பில் ஒட்­டு­மொத்த தற்­காப்பு சாக­சக் காட்­சித் தொகுப்­பின் ஓர் அங்­க­மாக சிங்­கப்­பூர் ஆகா­யப் படை­யின் அதி­ந­வீன போர் விமா­னங்­க­ளின் வான்­சா­க­சம் இடம்­பெ­றும்.

இவ்வாண்டு 'சிஎச்-47எஃப்' ரக ஹெலி­காப்­டர் முதல் முறை­யாக பங்­கேற்­கிறது.

அத்­து­டன், சாகச நிகழ்ச்­சி­யின் முக்­கிய அம்­ச­மாக முதல் முறை­யாக இரண்டு 'எஃப்-16' ரகப் போர் விமா­னங்­கள் மிக அரு­கில் வெவ்­வேறு திசை­களில் பிரிந்­து­சென்று பின்­னர் செங்­குத்­தாக மேலே­றும் நிகழ்ச்சி இடம்­பெ­ற­வி­ருக்­கிறது.

லெஃப்டி­னண்ட் கர்­னல் (தேசி­ய சேவை) ஓங் சுவீ சுவான் இந்த இரு விமா­னங்­களில் ஒன்­றைச் செலுத்­து­வார்.

மூத்த லெஃப்டி­னண்ட் கர்­னல் லீ மெயி 'எஃப்-16' ரகப் போர் விமான சாக­சக் குழு­விற்­குத் தலைமை தாங்­கு­கி­றார். இந்­தப் பொறுப்பை ஏற்­கும் முதல் பெண் விமானி இவர்.

தேசிய தின அணி­வ­குப்பு 2022ல் பங்­கேற்­கும் ஆகா­யப்­ப­டைக் குழு­வின் துணைத்­த­லை­வர் 47 வயது ஸ்டான்லி செல்வா.

"இம்­முறை பெரும்­பா­லான வான்­வெளி சாக­சங்­கள் ஒரே நாளில் நடப்­ப­தால் அதற்­கு­ரிய பயிற்­சி­கள் வீரர்­க­ளுக்கு சவா­லாக இருக்­கின்­றன. இருப்­பி­னும் ஆகா­யப்­ப­டை­யின் புதிய தொழில்­நுட்ப சாத­னங்­க­ளை­யும் விமா­னங்­க­ளை­யும் பொது­மக்­க­ளி­டம் காட்­டும் ஒரு வாய்ப்­பாக இதைக் கரு­து­கி­றோம்," என்­றார் இவர்.

தேசிய தின அணி­வ­குப்பை முன்­னிட்டு ஹெலி­காப்­டர்­கள் தேசி­யக் கொடியை ஏந்­திச் செல்­வ­தற்­கான பயிற்­சி­களும் மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றன.

தரை­யி­லி­ருந்து 1,000 அடி உய­ரத்­தில் மாலை 5.25 மணி­ய­ள­வில் இரண்டு 'சிஎச்-47எஸ்டி சினூக்' ரக ஹெலி­காப்­டர்­கள் தேசி­ய கொடியை ஏந்­தி­ய­படி தீவின் கிழக்கு மற்­றும் மேற்கு திசை­களில் இரு வேறு பாதை­களில் சிங்­கப்­பூ­ரின் வட்­டா­ரங்­களை வலம் வரும்.

இரு பாதைகளும் சிங்கப்பூரின் வடக்குப் பகுதியில் தொடங்கி தெற்குப் பகுதியில் நிறைவடையும். 'அப்­பாச்சி அட்­டாக்' ரக ஹெலி­காப்­டர்­கள் இவற்­றுக்­குத் துணை­யா­கச் செல்­லும் எனக் கூறப்பட்டது.

தேசிய தின அணி­வ­குப்­பில் பயன்­ப­டுத்­தப்­படும் 30 மீட்­டர் நீள­மும் 20 மீட்­டர் அக­ல­மும் கொண்ட பிரம்­மாண்­ட­மான தேசி­யக் கொடி­களை ஏறக்­கு­றைய 25 பேர் கொண்ட ஆகா­யப்­ப­டைக் குழு பரா­ம­ரிக்கிறது. தேசிய தினத்­தன்று 15 கொடி­கள் தயார்­நி­லை­யில் இருக்­கும் எனக் கூறப்­பட்­டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!