கரிம கிரகிப்புத் தொழில்நுட்ப ஆய்வு இடம்பெறும்

சிங்­கப்­பூ­ரில் கழி­வுப்­பொ­ருள்­களை எரி­சக்­தி­யாக மாற்­றும் ஆலை­களில் இருந்து வெளிப்­படும் கரி­மக் கழிவு­க­ளைக் கிர­கிக்­கும் தொழில்­நுட்­பங்­க­ளைப் பயன்­ப­டுத்­தும் வாய்ப்­பு­கள் பற்றி ஆராய ஆய்வு ஒன்று நடத்­தப்­படும்.

இந்த நூற்­றாண்­டின் நடுப்­ப­குதி­யில் அறவே கரி­மக்­க­ழிவு இல்­லாத நிலை­யைச் சாதிக்க வேண்­டும் என்று சிங்­கப்­பூர் முயற்­சி­ மேற்­கொண்டு வரு­கிறது.

அந்த முயற்­சி­யின் ஒரு பகு­தி­யாக அந்த ஆய்வு நடத்­தப்­படும்.

கழி­வு­களை எரி­சக்­தி­யாக்கும் ஆலை­கள், அந்­தக் கழி­வு­களை எரித்து அவற்­றில் இருந்து மின்சா­ரத்தை உரு­வாக்­கு­ம். இதன் மூலம் செம­காவ் தீவில் சேரும் குப்­பை­யின் அளவு குறைக்­கப்­ப­டு­கிறது.

கரி­மத்­தைக் கிர­கிக்­கும் தொழில்­நுட்­ப சாத்­தி­யத்­தைப் பற்றி ஆராய்­வதற்­காக தேசிய சுற்­றுப்­புற வாரி­ய­மும் கெப்­பல் இன்­ஃப்­ராஸ்­டிரக்சர் நிறு­வ­னத்­தின் சுற்­றுப்­புற தொழில்­நுட்ப துணை நிறு­வ­ன­மான கெப்­பல் செகர்ஸ் நிறு­வ­ன­மும் புரிந்­து­ணர்வுக் குறிப்பு ஒன்­றில் கை யெழுத்­திட்டு இருக்­கின்­றன.

அத்­த­கைய ஆலை­களில் இருந்து வெளி­வ­ரும் கரியமில வாயுவை பாதாள அறை­யில் அடைப் பது, அதை இதர பய­னுள்ள பொரு­ளாக மாற்­று­வது ஆகியவை புதிய தொழில்­நுட்­பங்­க­ளின் நோக்கம் என தெரிவிக்கப்பட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!