வாளை ஏந்தி ஒருவரைத் துரத்தியவர் மீது குற்றச்சாட்டு

வாள் கத்தி ஏந்திய ஒருவரைத் துரத்தியவர் மீது இரண்டு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. ஒரு சமுராய் வாள் போன்ற ஒரு போலி வாளை பயன்படுத்தி ஒருவரை மிரட்டியது, ஒரு 73 சென்டிமீட்டர் நீளமான வாள் வைத்திருந்தது ஆகிய இரண்டு குற்றங்கள் 27 வயதான கென்னத் டான் ஹோங் சாங் மீது சுமத்தப்பட்டன.

பூன் லே வே வட்டாரத்தில் மார்ச் 10 அன்று டான் குற்றம் புரிந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. சம்பவம் நடந்தபோது, டான் போலி வாளைப் பயன்படுத்தியதாகக் கூறப்பட்டது.

25 வயதான ஃபு யீமிங் என்பவரும் இந்தச் சம்பவத்தில் ஈடுப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. இருவரை பார்த்து அவர் கூச்சல் போட்டதாகவும், அவர்களை மண்டி போட்டு மன்னிப்பு கேட்கும்படி அவர் மிரட்டியதாகவும் குறிப்பிடப்பட்டது. சம்பவத்தில் யாருக்கும் காயமில்லை.

இந்தச் சம்பவம் குறித்து மேல் விவரகங்கள் வெளியிடப்படவில்லை.

இதனிடையே கைதுசெய்யப்பட்ட டானின் வாகனத்திலிருந்து ஒரு 73 சென்டிமீட்டர் நீளமான வாள் கத்தி கண்டுபிடிக்கப்பட்டது. டானின் வழக்கு இம்மாதம் 29ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஆயுதம் ஏந்திய குற்றம் நிரூபிக்கப்பட்டால், குற்றவாளிக்கு ஐந்தாண்டு வரை சிறை தண்டனை, ஆறு பிரம்படிகள் விதிக்கப்படலாம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!