செய்திக்கொத்து

ஜூரோங் ஈஸ்ட், கிராஞ்சிக்கு இடையே ரயில் சேவை தாமதம்

ஜூரோங் ஈஸ்ட், கிராஞ்சி பெருவிரைவு ரயில் நிலையங்களுக்கு இடையே ஏற்பட்ட ரயில் கோளாற்றால் வடக்கு-தெற்கு பாதையில் சேவை தாமதம் ஏற்பட்டது. நேற்று மாலை 6.30 மணியளவில் இது குறித்து 'எஸ்எம்ஆர்டி' நிறுவனம் டுவிட்டரில் தெரிவித்தது.

பாதிக்கப்பட்டோருக்கு உட்லண்ட்ஸ், ஜூரோங் ஈஸ்ட் நிலையங்களுக்கு இடையே இலவச பேருந்துச் சேவைகளை அந்நிறுவனம் வழங்கியது. ரயில் சேவைகள் படிப்படியாக இயல்புநிலைக்குத் திரும்பி வந்ததாக 'எஸ்எம்ஆர்டி' குறிப்பிட்டது.

அமேசான் வாடகைக்கு எடுத்துள்ள புதிய பகுதி

புதி­தாக கட்டப்படும் 'ஐஓஐ சென்ட்­ரல் பொலிவார்ட்' கட்டடத்தில் சுமார் 369,000 சதுர அடி பரப்­ப­ள­வைக் கொண்ட பகு­தி­யை அமேசான்.காம் வாட­கைக்கு எடுக்கிறது. அதற்­கான ஒப்­பந்­தத்­தில் அமேசான் கையெழுத்திட்டுள்­ளது.

பிஸ்­னஸ் டைம்ஸ் நாளி­தழ் இந்­தத் தக­வ­லைத் தெரிவித்­தது. தக­வல் எப்­படி தனக்­குக் கிடைத்­தது என்பதை அது குறிப்பிடவில்லை.

'ஐஓஐ சென்ட்­ரல் பொலி­வார்ட்' கட்­ட­டத்­தின் முதல் இரண்டு மாடி­களை அமேசான் வாட­கைக்கு எடுத்­துள்ளது. மேலும், 'ஈஸ்ட் டவர்' எனும் கட்­ட­டத்­தின் மற்றோர் அங்கத்தில் உள்ள ஒன்­பது மாடி­கள் அனைத்­தை­யும் அமேசான் வாடகைக்கு எடுத்­துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்­ளது.

'ஐஓஐ சென்ட்­ரல் பொலிவார்ட்' மரினா பே பகுதியில் டெளன்­டவுன் பெரு­வி­ரைவு ரயில் நிலை­யத்­திற்கு அருகே கட்­டப்­படுகிறது. அடுத்த ஆண்டு அக்­டோ­பர் மாதத்திற்குள் கட்டுமானப் பணிகள் நிறைவடையும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

மேலும் ஒருவருக்குக் குரங்கம்மை

சிங்கப்பூரில் மேலும் ஒருவருக்கு குரங்கம்மைக் கிருமித் தொற்று ஏற்பட்டுள்ளதை சுகாதார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது. தொற்றுக்கு ஆளான அந்த 36 வயது நபர் வெளிநாட்டிலிருந்து சிங்கப்பூருக்குப் பயணம் மேற்கொண்டவர்.

இந்தியாவைச் சேர்ந்த அந்த ஆடவர் சிங்கப்பூரில் வசித்து வருகிறார். அவர் அண்மையில் அமெரிக்காவிற்குப் பயணம் மேற்கொண்டு திரும்பியதாக சுகாதார அமைச்சு கூறியது.

நேற்று முன்தினம் அவருக்குக் குரங்கம்மைத் தொற்று ஏற்பட்டது உறுதியானதாகவும் அவர் தேசிய தொற்றுநோய்த் தடுப்பு நிலையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதற்கு முன்பு உள்ளூரில் ஒருவருக்கும் வெளிநாட்டிலிருந்து இங்கு வருகை தந்த மற்றொருவருக்கும் குரங்கம்மை கிருமித்தொற்று ஏற்பட்டது உறுதிப்படுத்தப்பட்டது. அவர்களுக்கும் இந்த ஆடவருக்கும் தொடர்பில்லை என்று சுகாதார அமைச்சு கூறியது.

ஆடவருடன் தொர்பில் இருந்தோரை அறிவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பெட்ரோல் விலை குறைந்தது

சிங்கப்பூரில் வாகனங்களுக்கான அனைத்து வகை பெட்ரோலின் விலைகளும் விழுந்தன. நேற்று முன்தின மாலை நிலவரப்படி ஒரு லிட்டர் 92-அக்டேன் ரக பெட்ரோலின் விலை மூன்று வெள்ளியை நெருங்கியது.

கடந்த புதன்கிழமையிலிருந்தே கால்டெக்ஸ், எஸ்ஸோ, ஷெல், சினோப்பெக், எஸ்பிசி ஆகிய நிறுவனங்கள் பெட்ரோல் விலைகளில் மாற்றங்கள் செய்ததாக 'ஃபியூவெல் காக்கி' எனும் பெட்ரோல் விலைகளைக் கண்காணிக்கும் அமைப்பு தெரிவித்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!