பட்டும் திருந்தாத ஆடவருக்கு மீண்டும் சிறைத் தண்டனை

தமது ஒரு வயது குழந்­தையை அடித்­துத் துன்­பு­றுத்­தி­யது உட்­பட பல குற்­றச்செயல்­களில் ஈடு­பட்­ட­தற்­கா­கக் கைது செய்­யப்­பட்ட ஆட­வர், பிணை­யில் விடு­விக்­கப்­பட்­ட­போ­தும் திருந்­தா­மல் மீண்­டும் குற்­றம் புரிந்­தார். தமது ஆறு வயது மாற்­றான் மகனை அவர் அடித்­துத் துன்­பு­றுத்­தி­னார்.

அந்த 33 வயது ஆட­வ­ருக்கு 13 மாதங்­கள், ஒரு வாரச் சிறைத் தண்­டனை விதிக்­கப்­பட்­டது.

பாதிக்­கப்­பட்ட சிறு­வர்­க­ளின் அடை­யா­ளத்­தைக் காக்க அந்த ஆட­வ­ரின் பெயரை வெளி­யி­டக்­கூ­டாது என்று உத்­த­ர­வி­டப்­பட்­டுள்­ளது.

திருட்­டில் ஈடு­பட்­ட­தற்­காக அந்த ஆட­வ­ருக்கு 2009ஆம் ஆண்­டில் 18 மாத நன்­ன­டத்­தைக் கண்­

கா­ணிப்பு விதிக்­கப்­பட்­டது. இரண்டு ஆண்­டு­கள் கழித்து, கொள்ளை உட்­பட பல குற்­றங்­க­ளுக்­காக அவ­ருக்கு மூன்று ஆண்­டு­கள் சிறைத் தண்­ட­னை­யு­டன் 12 பிரம்­ப­டி­களும் விதிக்­கப்­பட்­டன.

சிறை­யி­லி­ருந்து விடு­விக்­கப்­

பட்­டதை அடுத்து அவர் மோசடி, திருட்டு, கவ­ன­மின்றி வாக­னம் ஓட்­டு­தல் போன்ற குற்­றச் செயல்­

க­ளைத் தொடர்ந்­தார்.

2015ஆம் ஆண்­டில் அவ­ருக்கு 27 மாதச் சிறைத் தண்­ட­னை­யும் $500 அப­ரா­த­மும் விதிக்­கப்­பட்­டது.

அந்த ஆட­வர் அடித்­த­தில் அவ­ரது குழந்­தைக்கு வல­து தொடை­யில் காயம் ஏற்­பட்­டது. அவ­ரது மாற்­றான் மக­னுக்கு உட­லில் பல்­வேறு இடங்­களில் காயங்­கள் ஏற்­பட்­டன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!