பிரதமர் லீ: அபே சிங்கப்பூரின் நெருங்கிய நண்பர்

ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேயின் மறைவுக்காக சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் தமது அனுதாபங்களைத் தெரிவித்துக்கொண்டுள்ளார்.

தற்போதைய ஜப்பானியப் பிரதமர் ஃபுமியோ கிஷிடாவிடம் திரு லீ தமது அனுதாபங்களைத் தெரிவித்தார்.

சற்றும் எதிர்பார்த்திடாத மிகவும் சோகமான நிகழ்வான திரு அபேயின் மரணத்திற்குத் தமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்வதாகப் பிரதமர் லீ தாம் எழுதிய நீண்ட கடிதத்தில் குறிப்பிட்டார்.

வெள்ளிக்கிழமையன்று (8 ஜூலை) தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தபோது திரு அபே சுட்டுக் கொல்லப்பட்டார்.

அந்த வன்செயலை சிங்கப்பூர் வன்மையாகக் கண்டிக்கிறது என்று திரு லீ, திரு கிஷிடாவிடம் கூறினார்.

"ஆக அதிக காலம் ஜப்பானின் பிரதமராகப் பதவி வகித்த திரு அபே, தனித்துவம் வாய்ந்த சில மாற்றங்களைக் கொண்டு ஜப்பானுக்கு முக்கியப் பங்காற்றியுள்ளார். உதாரணமாக அவர் நடைமுறைப்படுத்திய 'அபேனொமிக்ஸ்' பொருளியல் முறை ஜப்பானின் பொருளியலையும் சமுதாயத்தையும் வளர்ச்சியடையச் செய்து, ஜப்பானின் சாதாரண மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தியுள்ளார்," என்று திரு லீ எழுதினார்.

கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக திரு அபேயுடன் வேலை செய்ததை எண்ணி பிரதமர் லீ பெருமைப்பட்டார்.

திரு அபே, வட்டார அளவிலான கூட்டணிகளுடன் ஜப்பானின் தொடர்பை மேம்படுத்தியவர் என்றும் அவர் குறிப்பிட்டார்.

"திரு அபே என்றுமே சிங்கப்பூரின் நல்ல நண்பராக நினைவில் இருப்பார்," என்று திரு லீ சொன்னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!