'அவசர மருத்துவ வாகனச் சேவையில் தாமதம் ஏற்படலாம்'

கடந்த சில வாரங்களாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையின் 995 அவசர தொலைபேசி எண்ணுக்கு வந்த அழைப்புகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

ஜூலை மாதம் முதல் வாரத்தில் சராசரியாக அந்த எண்ணுக்கு தினமும் சுமார் 760 அழைப்புகள் வந்ததாக குடிமைத் தற்காப்புப் படை வெள்ளிக்கிழமை (8 ஜூலை) இரவு தெரிவித்தது.

ஒரு நாளில் ஆக அதிகமாக 810 அழைப்புகள் வந்தன.

கொவிட்-19 கொள்ளைநோய்ப் பரவலுக்கு முந்தைய காலத்தில் குடிமைத் தற்காப்புப் படையின் 'இஎம்எஸ்' எனும் அவசர மருத்துவ சேவைப் பிரிவுக்கு தினமும் சுமார் 550 அழைப்புகள்தான் வரும்.

995 எண்வழி அவசர மருத்துவ சேவைப் பிரிவுக்கு வரும் அழைப்புகள் தொடர்ந்து அதிகரித்தால் பொதுமக்களுக்கான அவசர மருத்து வாகனச் சேவைகளில் தாமதம் ஏற்படலாம் என்று குடிமைத் தற்காப்புப் படை ஃபேஸ்புக்கில் சொன்னது.

குறிப்பாக மோசமாக நோய்வாய்ப்படாதோருக்கு அவசர மருத்துவ வாகனம் அனுப்புவதில் தாமதம் ஏற்படலாம் என்று குடிமைத் தற்காப்புப் படை சுட்டியது.

நிலைமையைக் கவனமாகக் கண்காணித்து வருவதாகவும் அதிகரித்துள்ள அழைப்புகளைக் கையாளவும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.

உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடிய நோயாளிகளுக்கு முன்னுரிமை வழங்குவது அவற்றில் ஒன்று.

உயிருக்கு ஆபத்து விளைவிக்கக்கூடிய அறிகுறிகள் இல்லாதோர் அல்லது அவசர மருத்துவ உதவி தேவைப்படாதோர் 995 எண்ணுக்கு அழைப்பதைத் தவிர்க்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

இருதய வலி, மூச்சுத் திணறல் உள்ளிட்டவை உயிருக்கு ஆபத்து விளைவிக்கக்கூடிய பிரச்சினைகள்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!