ஜப்பான் உயர்வுக்கு, பாதுகாப்புக்குப் பாடுபட்ட ஷின்சோ அபே

முரசொலி

சூரி­யன் உதிக்­கும் நாடு என்று சொல்­லப்­படும் ஜப்­பான் ஓர் ஆக்­க­க­ர­மான நாடு. உல­கில் மனி­தன் கண்­டுபிடித்­துள்ள ஆயு­தங்­களி­லேயே அதிபயங்கர ஆயு­த­மாக இதுநாள்­வரை இருந்­து­வரும் அணு­குண்டு எந்த அள­வுக்கு அழிவை ஏற்ப­டுத்­தும் என்­பதை தான் அழிந்து உல­கிற்கு உணர்த்­திய நாடு.

துப்­பாக்கி புழங்­காத நாளே இல்லை என்று சொல்­லும் அள­வுக்கு அதி­க­மாக துப்­பாக்கிப் படு­கொலை நடக்­கு­ம் உ­ல­கின் வல்­ல­ர­சான அமெரிக்கா­வின் நட்பு நாடு என்­றா­லும் துப்­பாக்கி கலா­சாரம் அவ்வளவாக தலை எடுக்­காத நாடு ஜப்­பான்.

அங்கு அர­சி­யல் படு­கொ­லை­கள் மிக­மிக அரிது. உல­கப் போருக்கு முன்னதாக அதா­வது 1930களில் ராணுவ ஆதிக்­கம் தலை­வி­ரித்து ஆடி­யது.

ஜப்­பா­னின் முன்­னாள் பிர­த­மர்­க­ளான சைட்டோ மக்­கோட்­டோ­வும் தக்­க­ஹாஷி கொரி­கி­யோ­வும் 1936 ஆம் ஆண்­டில் ஒரே நாளில் படு­கொ­லைக்கு ஆளா­னார்­கள். 1932ல் பிர­த­ம­ராக இருந்த சுயோஷி இனு­காய் படு­கொலை செய்­யப்­பட்­டார்.

அதற்­குப் பிறகு இது­வரை ஜப்­பான் அர­சி­ய­லில் துப்­பாக்கி பேசி­ய­தில்லை. பத­வி­யில் இருக்­கின்ற அல்­லது பதவி வகித்­துள்ள பிர­த­மர் யாரும் ப­டு­கொலை செய்­யப்­பட்டதாக வர­லாறு இல்லை.

ஆனால் இப்­போது நாட்­டின் முன்­னாள் பிர­த­ம­ரான ஷின்சோ அபே, 67, பட்­டப்­ப­கலில் பொதுமக்கள் முன்­னி­லை­யில், வெகு அரு­கில் இருந்த ஒரு­வ­ரால் சுட்­டுக் கொல்­லப்­பட்டு இருக்­கி­றார்.

ஜப்­பா­னில் இன்று நடக்க இருந்த நாடா­ளு­மன்ற மேல­வைத் தேர்­த­லில் போட்­டி­யி­டும் மித­வாத ஜன நாய­கக் கட்சி வேட்­பா­ள­ருக்­காக நாரா என்ற மேற்குப்புற நக­ரில் மக்­க­ளைச் சந்­தித்து அபே வாக்கு வேட்­டை­யா­டி­ய­போது, டெட்­சூயா யமா­காமி என்ற 41 வயது முன்­னாள் கடற்­படை வீரர், அபேயையே வேட்டையாடி­விட்­டார்.

அந்த பயங்­கர சம்­ப­வம் நிகழ்ந்­த­போது அபே­யும் அவ­ரைக் கொன்­ற­வ­ரும் வெறும் மூன்று மீட்­டர் அரு­கே­தான் இருந்­த­தா­கக் கூறப்­ப­டு­கிறது. கொலை கார ஆசாமி விசா­ரிக்­கப்­பட்டு வரு­கி­றார். அபேயைப் பிடிக்­க­வில்லை, கொன்­று­விட்­டேன் என்று அவர் சொல்லி இருக்­கி­றார். அவர்­ வீட்­டில் வெடிபொருள் கள் கைப்­பற்­றப்­பட்டு இருப்­ப­தா­க­வும் குற்றத்தை அவர் ஒப்­புக்­கொண்­ட­தா­க­வும் தெரிகிறது.

ஜப்­பா­னில் பிர­பல தலை­வர்­கள் பொது இடங் களுக்­குச் செல்­லும்­போது அவர்­க­ளுக்­குப் பாது­காப்பு பொது­வாக குறைவாகவே இருக்­கும். அதுவும் யாரா­வது கையால், காலால் தாக்­கக்­கூ­டும் என்ற எதிர்­பார்ப்­பு­டன் மெய்க்­கா­வலர்­கள்­தான் செல்வார்­கள். முன்­னாள் பிர­த­மர் அபே­ய்க்கு ஆயுதம் தாங்­கிய காவல்­துறை சிறப்பு அதி­காரி ஒரு­வரும் உள்ளூர் அதி­கா­ரி­களும் பாது­காப்பு வழங்­கி­னர்.

அபே ஜப்­பா­னில் மிகப் பிர­ப­ல­மான அர­சி­யல் குடும்­பத்­தைச் சேர்ந்­த­வர். 1993ல் நாடா­ளு­மன்­றத்­திற்குத் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்­ட­வர். 2006ல் பிர­த­மரா­க­வும் மிதவாத ஜன­நா­யக கட்­சித் தலை­வ­ரா­க­வும் உயர்ந்­த­வர். உல­கப் போருக்­குப் பிறகு பிறந்த முதலா­வது பிர­த­மர், போருக்­குப் பிந்­திய பிர­த­மர்­களி­லேயே ஆக இளை­ய­வர் இவர்­தான் என்பது வர­லாறு.

பிர­த­ம­ராக பதவி ஏற்­ற­தும் ஓராண்­டில் உடல்­நிலை கார­ண­மாக அபே பத­வி­யில் இருந்து விலகி­விட்­டார். அவ­ருக்­குப் பிறகு பதவி ஏற்­ற­வர்­க­ளால் பிர­த­மர் பத­வியைத் தொடர்ந்து வகிக்க இய­ல­வில்லை. அபே 2012ல் மீண்­டும் பிர­த­மர் ஆனார். 1948க்கு பிறகு முன்­னாள் பிர­த­மர் ஒரு­வர் மீண்­டும் பிர­த­மர் ஆன வர­லாற்­றைச் சாதித்து காட்­டி­னார்.

ஜப்­பா­னின் வர­லாற்­றி­லேயே ஆக அதிக காலம் பிர­த­ம­ரா­கப் பதவி வகித்­த­வர் என்ற பெருமை இவருக்­குத்­தான் உண்டு. உடல்நிலை காரணமாக 2020ல் பிர­த­மர் பத­வியில் இருந்து இரண்­டா­வது முறை­யாக வில­கிக்கொண்­டார். அனைத்­து­லக தலை­வ­ரா­க­வும் ஜப்­பா­னின் பொரு­ளி­யல் பிர­ப­ல­மா­க­வும் வர்­ணிக்­கப்­படுபவர் திரு அபே.

பொரு­ளி­யல் சார்ந்த திரு அபே­யின் கொள்­கை­கள் 'அபே­னா­மிக்ஸ்' என்று அழைக்­கப்­பட்­டன. அந்தக் கொள்­கை­கள் ஜப்­பா­னின் வளர்ச்­சிக்­குப் பெரி­தும் உத­வி­ய­தாக வர்­ணிக்­கப்­பட்­டது. ஆனால் 2020ல் ஜப்­பான் பொரு­ளி­யல் மந்தநிலைக்­குச் சென்­ற­போது அதற்கு அபே­தான் கார­ணம் என்­றும் பல­ரும் குறை­கூ­றி­னர். அபே வெளி­நாட்­டு­டன் கூடிய உற­வு­களைப் பேணி வளர்ப்­ப­தில் சிறப்­பான பங்­காற்­றி­னார் என்­பதற்­காக இந்­தியாகூட அவ­ருக்கு 'பத்ம விபூ­ஷன்' விருதை வழங்­கிப் பாராட்டியது.

திரு அபே­யின் அர­சி­யல் சித்­தாந்­தங்­கள், கோட்பா­டு­கள் கார­ண­மாக அவர் தேசி­ய­வா­தி­யாகவும் நடைமுறைவா­தி­யா­க­வும் பார்க்­கப்­பட்­டார்.

மித­வாத ஜன­நா­யக கட்­சி­யின் வலு­வான தூணா கத் திகழ்ந்­த­வர். ஜப்­பா­னின் பாது­காப்பு, வெளி­யு­ற­வுக் கொள்­கைக்­காக அபே பாராட்­டப்­பட்­டா­லும் அவரு­டைய தேசி­ய­வாத கருத்­து­கள் சீனா, தென்­கொ­ரி­யா­வு­டன் கூடிய ஜப்­பா­னிய உற­வில் பதற்றங்­களை எழுப்­பி­ய­தா­கக் கூறப்­பட்­ட­துண்டு.

அபே நாட்டை உரு­மாற்­றக்­கூ­டிய ஒரு தலைவராக இருந்­தார். அர­சாங்­கத்­தில் அடிக்­கடி இடம்பெற்ற மாற்றங்­களுக்கு முற்­றுப்­புள்ளி வைத்து நிலைத்­தன்மையை ஏற்­ப­டுத்­தி­ய­வர். மூன்­றாம் தலை­மு­றைத் தலை­வரான அபே, உல­கத்­தில் ஜப்­பா­னுக்கு உரிய இடத்தை உறுதிசெய்வதில் கவ­னம் செலுத்­தி­ய­வர்.

ஜப்­பா­னின் பாது­காப்­பும் அவர் மன­தில் எப்­போதும் இடம்­பெற்று இருந்­தது. இதைக் கருத்­தில்­கொண்டு புதிய நட்பு நாடு­க­ளை­ ஏற்­படுத்திக் கொள்ள வேண்­டும் என்று அவர் முயன்­றார். இந்தோ-பசி­பிக் ஏற்­பாடு, 'குவாட் (ஆஸ்திரேலியா, ஜப்பான், இந்தியா, அமெரிக்கா நாடுகளை உள்ளடக்கிய அரசதந்திர கட்டமைப்பு) ஆகி­ய­வற்­றின் கார­ண­கர்த்­தா­வாக அபே செயல்­பட்­டார்.

ஜப்­பா­னில் கடந்த 20 ஆண்டு கால­மாக அபே இல்­லா­மல் அர­சி­யல் இல்லை என்ற ஒரு நிலை­தான் இருந்து வந்­தது. அனைத்­து­லக நிலையில் ஒரு நல்ல மனி­த­ரா­க­வும் மென்மையானவராகவும் உற­வைப் பேணி வளர்ப்­ப­வரா­க­வும் அபே அறி­யப்­பட்­டார். அபே­யின் இழப்பு ஜப்­பா­னின் அர­சி­ய­லில் பேரி­ழப்­பாக இருக்­கும் என்­ப­தில் ஐய­மில்லை.

உல­க­மும் ஒரு நல்ல தலை­வரை இழந்து அதிர்ச்சி யில் இருக்­கிறது. அபே­யின் படு­கொலை, ஜப்­பானில் அர­சியல்­வா­தி­க­ளுக்கான பாது­காப்பு குறித்து பல கேள்­விகளை எழுப்பி இருக்­கிறது.

எந்­த­வொரு ஜன­நா­யக நாட்­டி­லும் ஜன­நா­ய­கத்­திற்கு மதிப்பு இருக்க வேண்­டும். அர­சி­யல் வேறு­பா­டு­களை வாக்­குச்­சீட்­டு­கள் மூலம்­தான் தீர்த்­துக்­கொள்ள வேண்­டும். வன்­மு­றைக்கு அறவே இடம் இருக்­கக்­கூ­டாது. எந்த வழி­யில் வன்­செ­யல் இடம்­பெற்­றா­லும் அதை ஏற்­றுக்­கொள்ள முடி­யாது. அது கண்­டிக்­கப்­பட வேண்­டும்.

ஜன­நா­யக நாடான ஜப்­பான் மட்­டு­மின்றி உலகின் எல்லா நாடு­க­ளுக்­கும் இது பொருந்­தும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!