முதியவர்கள் சுறுசுறுப்பாக உடல் நலனுடன் வாழ உதவி

குவீன்ஸ்டவுன்வாசிகளுக்குத் தோதான உடற்பயிற்சி சாதனங்கள், உடலுறுதி வழித்தடம்

குவீன்ஸ்­ட­வுன் பகு­தி­யில் வசிக்­கும் முதி­யோர், உடல் நல­னு­டன் சுறு சுறுப்­பு­டன் வாழ உத­வும் செயல்­திட்­டங்­கள் இடம்­பெ­று­கின்­றன.

முதி­யோ­ருக்­குத் தோதான உடற்­ப­யிற்­சி­ சா­த­னங்­கள், உடலுறுதி வழித்­த­டம் உள்­ளிட்ட பல­வும் அவற்­றில் அடங்­கும்.

சமூ­கம் என்ற முறை­யில் முதி­ய­வர்­க­ளி­டையே உடல் நலன் மேம்­பாட்டை குறிக்­கோ­ளா­கக் கொண்டு உள்ள அந்­தச் செயல் திட்­டங்­களை விளக்­கிக் காட்­டும் ஒரு விளக்­கக்­காட்சி நேற்று ஸ்டெ­ர்லிங் ரோட்­டில் தொடங்­கி­யது.

வீட­மைப்பு வளர்ச்­சிக் கழ­கம், தேசிய பல்­க­லைக்­கழக சுகா­தா­ரக் குழுமம், சிங்­கப்­பூர் தேசிய பல்­கலைக் கழ­கம் ஆகி­ய­வற்­றின் ஏற்­பாட்­டில் நடக்­கும் அந்­தக் காட்சி நாளை­யுடன் முடி­வ­டை­யும். அதன் வழி தங்­கள் கருத்­து­களைப் பொது­மக்­கள் தெரி­யப்­ப­டுத்­த­லாம்.

மெய் லிங் ஸ்தி­ரீட்­டில் அடுத்த ஆண்டு உட­லு­றுதி வழித்­த­டம் ஒன்று தொடங்க இருக்­கிறது. இப்­போது நடக்­கும் விளக்­கக்­காட்­சியில் அது­பற்றி முதி­ய­வர்­கள் தெரிந்­து­கொள்­ள­லாம்.

அந்த வழித்­த­டம் நெடு­கி­லும் பல மொழி­களில் அறி­விப்பு பலகை­கள் இருக்­கும். அவற்­றில் உடல் நலன், உட­லு­றுதி வளங்­கள் பற்­றிய தக­வல்­கள் இடம்­பெற்று இருக்­கும்.

அதோடு, உடல் வலு, நட­மாட்­டம், உடல் சம­நிலை ஆகியவற்றை மேம்­ப­டுத்­தும் சாத­ன­மும் இருக்­கும்.

முதி­ய­வர்­கள், 'ஜிம் டானிக்' என்ற உடல் வலு பயிற்சி செயல்­திட்­டத்­தில் கலந்­து­கொள்­ள­லாம்.

இந்­தத் திட்­டம் முதி­யோ­ருக்­கா­கவே வடி­வ­மைக்­கப்­பட்ட உடற்­பயிற்சி இயந்­தி­ரங்­க­ளைப் பயன்­படுத்­தும். தேசிய வளர்ச்சி மூத்த துணை அமைச்­சர் டான் கியட் ஹாவ், சுகா­தார அமைச்­சின் மூத்த நாடா­ளு­மன்­றச் செய­லா­ளர் ரஹாயு மஹ்­ஸாம் இரு­வ­ரும் நேற்று விளக்­கக்­காட்­சியைப் பார்­வை­யிட்­ட­னர்.

குவீன்ஸ்­ட­வுன் சிங்­கப்­பூ­ரின் முத­லா­வது ஆகப் பெரிய துணை நக­ரம். அங்கு வசிப்­ப­வர்­கள் உடல்­நலத்­து­டன் பய­னுள்ள வாழ்வை மேற்­கொள்ள ஆத­ரவு அளிக்­கும் வகை­யில் சென்ற ஆண்­டில் ஒரு முன்­னோடி செயல்­திட்­ட­மாக ஒரு சுகா­தார மாவட்­ட­மாக குவீன்ஸ்­ட­வுன் ஆக்­கப்­பட்­டது.

முதி­யோர் அதி­கம் வாழும் பகு­தி­யாக இப்­போது அது இருக்­கிறது. அங்கு வசிப்­ப­வர்­களில் நால்­வ­ரில் கிட்­டத்­தட்ட ஒரு­வ­ருக்கு 65 வயது அல்­லது அதற்கு அதிக வய­தா­கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!