கடை விலை உயர்வு: மக்கள், கடைக்காரர்கள் கவலை

சிங்­கப்­பூ­ரில் காப்­பிக்­க­டை­க­ளின் விற்­பனை விலை சாதனை அள­வாக அதி­க­ரித்து இருக்­கிறது. பல கடை­கள் பெரும் விலைக்கு கைமாறி இருக்­கின்­றன.

தெம்­ப­னிஸ் ஸ்தி­ரீட் 21 புளோக் 201ல் செயல்­படும் '21 ஸ்தி­ரீட் ஈட்­டிங் ஹவுஸ்' என்ற கடை கடந்த ஏப்­ரல் மாதம் சாதனை அள­வாக $41.68 மில்­லி­ய­னுக்கு வாங்­கப்­பட்­டது.

அதே­போல, ஈசூன் ஸ்தி­ரீட் 81ல் உள்ள புளோக் 848ல் செயல்­படும் 'கேபிடி கோப்­பி­தி­யாம்' காப்­பிக்­கடை கடந்த ஜூன் மாதம் $40 மில்­லி­ய­னுக்கு விற்­கப்­பட்­டது.

புக்­கிட் பாத்­தோக் ஸ்தி­ரீட் 11, புளோக் 155ல் செயல்­படும் 'யோங் ஸிங் காப்பி ஷாப்' என்ற கடை 2015ஆம் ஆண்­டில் $31 மில்­லி­ய­னுக்கு விலை­போ­னது.

அதே­போல, ஹவ்­காங் அவென்யூ 4ல் உள்ள புளோக் 682ல் செயல்­படும் 'காப்பி எக்ஸ்­பி­ரஸ் 2000' என்ற கடை $23.8 மில்­லி­ய­னுக்கு 2013 மார்ச் மாதம் கைமா­றி­யது.

அத்­த­கைய காப்­பிக்­க­டை­களின் நிர்­வா­கம் மாறு­வ­தால் கடை­க­ளின் வாட­கை­யும் அதி­க­ரிக்­கக்­கூ­டும் என்று கடை நடத்து­வோ­ர் கவ­லைப்­ப­டு­கி­றார்­கள்.

அதே­போல் காப்­பிக்­க­டை­களின் விலை தாறு­மா­றாக அதி­கரித்து இருப்­ப­தால் அந்­தக் கடை­களில் உணவு விலை­களும் அதி­க­ரித்­து­வி­டுமோ என்று வாடிக்­கை­யா­ளர்­கள் கவ­லைப்­பட தொடங்கி இருக்­கி­றார்­கள்.

இத­னி­டையே, தங்­கள் லாபத்தை அதி­க­ரிக்­கும் வகையில் வாட­கையை காப்­பிக்­கடை உரி­மை­யா­ளர்­கள் உயர்த்­தவே செய்­வார்­கள் என்று அனு­மா­னிப்­பது நியா­மா­ன­தா­கவே இருக்­கும் என்று சொத்­துத் துறை பகுப்­பாய்வா­ளர் ஈத்­தன் ஷு கருத்­துரைத்­தார்.

இருந்­தா­லும் அதை உரி­மை­யா­ளர்­கள் மிகக் கவ­ன­மா­கச் செய்ய வேண்டி இருக்­கும் என்­றார் அவர்.

காப்­பிக்­க­டை­கள் அதிக விலைக்கு விற்­கப்­ப­டு­வது பல­ரின் கவ­னத்தை ஈர்த்து இருக்­கிறது. என்­றா­லும் அண்­மை­யில் நாடாளு­மன்­றத்­தில் இதுபற்றி பேசிய தேசிய வளர்ச்சி அமைச்­சர் டெஸ்­மண்ட் லீ, அப்­படி அதிக விலைக்கு கைமா­றும் காப்­பிக்­க­டை­க­ளின் விகி­தாச்­சா­ரம் குறை­வு­தான் என்­றார்.

காப்­பிக்­க­டை­க­ளைப் பொறுத்­த­வரை விற்­ப­னை­யா­கும் கடை­களில் 70% கடை­க­ளின் விலை 2010 ஆம் ஆண்டு முதலே $10 மில்­லி­ய­னுக்­கும் குறை­வா­கவே இருந்து வரு­கிறது என்று அமைச்­சர் விளக்­கினார்.

வீட­மைப்பு வளர்ச்­சிக் கழ­கம் 1990களில் இருந்து வீவக புளோக்கு­களில் செயல்­படும் ஏறக்­கு­றைய 400 காப்­பிக்­க­டை­களை விற்று இருக்­கிறது. அத்­த­கைய காப்­பிக்­க­டை­களை நிர்­வ­கித்து நடத்த தனி­யார் துறைக்கு ஊக்­க­மூட்­டும் வகை­யில் கழ­கம் அவற்றை விற்­றுள்­ளது.

இருந்­தா­லும் 1998ல் அத்­த­கைய கடை­களை விற்­பதை கழ­கம் நிறுத்­தி­விட்­டது.

சிங்­கப்­பூ­ரில் உரி­மம் பெற்ற 1,100 காப்­பிக்­க­டை­கள் செயல்­படு­கின்­றன. அவற்­றில் 770க்கும் மேற்­பட்­டவை வீவக புளோக்­கு­களில் அமைந்து இருக்­கின்­றன.

ஆகை­யால், விலை உயர்வு இடம்­பெ­றும் பட்­சத்­தில் எந்த கடை­யில் விலை குறை­வாக இருக்­கிறதோ அந்­தக் கடையை வாடிக்­கை­யா­ளர்­கள் நாடு­வார்­கள் என்று அவர் தெரி­வித்­தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!