சாலையில் மூர்க்கம்: மாதை மலேசிய காவல்துறை தேடுகிறது

ஜோகூர் பாருவில் சுல்தான் அபு பக்கர் சுங்க, குடிநுழைவு வளாகம் அருகே சாலையில் மூர்க்கத் தனமாக நடந்துகொண்டதாகக் கூறப்படும் ஒரு மாதை மலேசிய காவல்துறை தேடுகிறது.

அந்த மாதின் காரை வேறு ஒரு கார் உரசிவிட்டதை அடுத்து காரை விட்டு கீழே இறங்கிய அந்த மாது, சம்பந்தப்பட்ட காரின் எண் தகட்டைப் பிடுங்கி எடுத்து அதை காரின் முன்புற கண்ணாடி மீது தூக்கி எறிந்தார். அந்த வாகனம் போகமுடியாமல் அதை அந்த மாது தடுத்ததாகவும் தெரியவருகிறது.

சந்­தே­கப் பேர்­வ­ழியை மலே­சிய காவல்­துறை இன்­ன­மும் அடை­யாளம் கண்டு வரு­வ­தாக ஜோகூர் மாவட்ட காவல்­துறை தலை­வர் தெரி­வித்­தார். அந்த மாது சிங்­கப்­பூர் உரி­மம் பெற்ற சிவப்பு நிற 'கியா' காரில் வந்­தார்.

சனிக்­கி­ழமை நிகழ்ந்த இந்­தச் சம்­ப­வத்­தைக் காட்­டும் காணொளியை 'எஸ்ஜி ரோடு விஜி­லன்ஸ்' என்ற ஃபேஸ்­புக் குழு­மம் பதிவேற்­றி­யது. அது 500 முறைக்­கும் மேலாக பார்க்­கப்­பட்­டுள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!