குறைவான குடும்பங்களே பயன்படுத்தின

வீட­மைப்பு வளர்ச்­சிக் கழ­கத்­தின் ஓரறை, ஈரறை, மூன்று அறை வீடு­களில் வசிப்­போ­ரின் மின்­கட்­ட­ணச் செல­வைக் குறைக்க உத­வும் நோக்­கில் அர­சாங்­கம் அறி­வித்த பற்­றுச்­சீட்­டு­களை மிகக் குறை­வான குடும்­பங்­களே பயன்­ப­டுத்­தி­ இருப்­ப­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இங்­குள்ள கிட்­டத்­தட்ட 300,000 வீடு­க­ளுக்கு 2020ஆம் ஆண்­டின் பிற்­ப­கு­தி­யில் இருந்து இத்­த­கைய பற்­றுச்­சீட்­டு­கள் வழங்­கப்­ப­டு­கின்­றன. ஒவ்­வொரு வீட்­டி­ன­ரும் மொத்­தம் 225 வெள்ளி மதிப்­பி­லான மூன்று பற்­றுச்­சீட்­டு­க­ளைப் பெற்­றுக்­கொள்­ள­லாம்.

எரி­சக்­தி­யைச் சேமிக்­கும் குளிர்­ப­த­னப் பெட்­டியை வாங்­கு­வ­தற்­கான 150 வெள்­ளிப் பற்­றுச்­சீட்டு, 'எல்­இடி' விளக்­கு­களை வாங்­கு­வ­தற்­கான 25 வெள்­ளிப் பற்­றுச்­சீட்டு, தண்­ணீ­ரைச் சேமிக்க உத­வும் குளி­ய­ல­றைச் சாத­னத்­திற்­கான 50 வெள்­ளிப் பற்­றுச்­சீட்டு ஆகி­யவை இவை.

பற்றுச்சீட்டுகள் அனைத்தும் மின்னிலக்க வடிவிலானவை.

தகுதிபெறும் 300,000 வீட்­டி­ன­ரும் மொத்­தம் 900,000 பற்­றுச்­சீட்­டு­களை வாங்கிக்­கொள்­ள­லாம்.

சென்ற மே மாத நில­வ­ரப்­படி இவற்­றில் 23,000 பற்றுச்­சீட்­டு­கள் மட்­டுமே பெற்­றுக்­கொள்­ளப்­பட்­டன.

குளிர்­ப­த­னப் பெட்­டிக்­கான 11,700 மின்­பற்­றுச்­சீட்­டு­களும், 'எல்­இடி' விளக்­குக்­கான 7,600 மின்­பற்­றுச்­சீட்­டு­களும், தண்­ணீ­ரைச் சேமிக்க உத­வும் குளி­ய­ல­றைச் சாத­னத்­துக்­கான 3,700 மின்­பற்­றுச்­சீட்­டு­களும் வழங்­கப்­பட்­ட­தாக தேசி­யச் சுற்­றுப்­புற வாரி­யம் தெரி­வித்­தது.

பொதுப் பய­னீட்­டுக் கழ­கத்­து­டன் இணைந்து பரு­வ­நி­லைக்கு உகந்த வீடு­கள் திட்­டத்­தின்­கீழ் இந்த மின்­பற்­றுச்­சீட்­டு­களை அது வழங்­கு­கிறது.

இந்தப் பற்றுச்சீட்டுகள் அடுத்த ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி காலாவதியாகிவிடும் என்று வாரியம் நினைவுறுத்தியது.

தேசி­யச் சுற்­றுப்­புற வாரியத்தின் குறைந்­த­பட்ச எரி­சக்­திச் செயல்­தி­றன் தர­நி­லை­யின்­கீழ் இங்கு விற்­ப­னை­யா­கும் மின்­சாதனங்­க­ளுக்­குப் புட்­கு­றி­கள் வழங்­கப்­படும். சாத­னங்­களில் ஒட்டப்­பட்­டி­ருக்­கும் அடை­யாள வில்­லை­களில் இந்­தப் புட்­கு­றி­கள் அச்சிடப்­பட்­டி­ருக்­கும். அதி­க­மான புட்­குறி­களைப் பெற்­றுள்ள சாத­னம் மிக உயர்ந்த தர­நி­லை­யைப் பெற்­றுள்­ள­தா­கப் பொருள்­படும்.

குறைந்­தது மூன்று புட்­கு­றி­களைப் பெற்­றுள்ள சாத­னத்தை வாங்க இந்த மின்­பற்­றுச்­சீட்­டு­களைப் பயன்­ப­டுத்­த­லாம்.

பொதுவாக இத்தகைய சாதனங்களின் விலை அதிகமாக இருக்கும் என்பதால் அரசாங்கம் வசதிகுறைந்தோருக்கு இந்தத் திட்டத்தை அறிவித்தது.

இவற்­றைப் பயன்­ப­டுத்­திக் கொள்­வ­தன் மூலம் கரி­ய­மில வாயு வெளி­யேற்­றத்­துக்­குப் பங்­க­ளிப்­ப­து­டன் சிங்­கப்­பூர்க் குடும்­பங்­கள் அவற்­றின் மின்­கட்­ட­ணச் செல­வை­யும் குறைக்க இய­லும்.

ஓர் ஆண்­டில் சரா­ச­ரி­யாக 40 முதல் 120 வெள்ளி வரை இத­னால் சேமிக்க முடி­யும் என்று கரு­தப்­ப­டு­கிறது.

ஜூலை, ஆகஸ்ட், செப்­டம்­பர் மாதங்­க­ளுக்­கான மின்­கட்­ட­ணம் ஒரு கிலோ­வாட்­டுக்கு 30.17 காசு உய­ரும் என்று சென்ற மாத இறு­தி­யில் அறி­விக்­கப்­பட்­டது. மூன்று அறை வீட்­டில் வசிப்­போர் இத­னால் ஒரு மாதத்­திற்கு ஆறு வெள்ளி அதி­கம் செலுத்த நேரி­டும். இந்­நி­லை­யில், எரி­சக்­திச்் சேமிப்­புச் சாத­னங்­களை வாங்­கு­வ­தற்­கான மின்­பற்­றுச்­சீட்­டு­க­ளைப் பயன்­படுத்த பல­ரும் முன்­வ­ரக்­கூ­டும்.

எரிசக்தி, தண்ணீர் சேமிப்புக்கான சாதனங்களை வாங்க அரசாங்கம் வழங்கிய பற்றுச்சீட்டுகளின் பயன்பாடு

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!