‘ஃபார்.எஸ்ஜி’: மோசடித் தடுப்புமுறை

பொதுச் சுகாதார நிலையங்கள் பொதுமக்களுக்கு அனுப்பும் மின்னஞ்சல்கள், குறுந்தகவல்கள் போன்றவை தொடர்பில் இடம்பெறும் மோசடிகளைத் தடுப்பதற்கான புதிய வழிமுறை அறிமுகம் கண்டுள்ளது.

மருத்துவமனைகள் உள்ளிட்டவை இனி அவற்றின் மின்னஞ்சல்கள் அல்லது குறுஞ்செய்திகளில் 'ஃபார்.எஸ்ஜி' என்ற இணைய முகவரியை சேர்த்துக்கொள்ளலாம்.

இதுவரை பயன்படுத்தப்பட்ட 'பிட்.எல்ஒய்', '.காம்' போன்ற இணைய முகவரிகளுக்குப் பதிலாக இதனைப் பயன்படுத்த வேண்டும். எடுத்துக்காட்டாக, டான் டோக் செங் மருத்துவமனையின் 'ஹெல்த்தியர் எஸ்ஜி' திட்டத்தின்கீழ் இடம்பெறும் நடவடிக்கைக்குப் பதிந்துகொள்ள, மத்திய வட்டாரக் குடியிருப்பாளர்கள் இனி 'ஃபார்.எஸ்ஜி/சென்ட்ரல்எச்எஸ்ஜி' என்ற முகவரியைச் சொடுக்க வேண்டும்.

அரசாங்க அதிகாரிகள் ஓர் இணைய முகவரி போலியானது அல்ல என்று பொதுமக்களுக்கு உறுதிப்படுத்துவதற்காகப் பயன்படுத்தும் 'கோ.கவ்.எஸ்ஜி' எனும் இணைய முகவரியைப் போன்றே இதுவும் செயல்படும்.

சிங்கப்பூரின் அனைத்துப் பொது மருத்துவமனைகள் உள்ளிட்ட 33 பொதுச் சுகாதார நிலையங்கள் இம்மாதம் 6ஆம் தேதியில் இருந்து இதனைப் பயன்படுத்திக்கொள்ள இயலும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!