செய்திக்கொத்து

மத்திய வர்த்தக வட்டாரத்தில்

100 சைக்கிள் நிறுத்துமிடங்கள்

ஊட்ரம், தெலுக் ஆயர் ஆகிய பகுதிகளுக்கு சைக்கிளில் செல்வோர் இனி நிறுத்துமிடம் குறித்துக் கவலைப்படத் தேவையில்லை. நிலப் போக்குவரத்து ஆணையம் அங்குள்ள சாலையோர கார் நிறுத்துமிடங்கள் சிலவற்றை சைக்கிள் நிறுத்துமிடங்களாக மாற்றியமைக்கும் திட்டம் இதற்குக் காரணம்.

ஏற்கெனவே கிளப் ஸ்திரீட்டில் இரண்டு கார் நிறுத்துமிடங்கள் மாற்றப்பட்டதுபோல தெலுக் ஆயர் ஸ்திரீட், பூன் டாட் ஸ்திரீட், டிராஸ் ஸ்திரீட், புக்கிட் பாசோ ரோடு ஆகியவற்றிலும் தலா இரண்டு கார் நிறுத்துமிடங்கள் சைக்கிள் நிறுத்த ஏதுவாக மாற்றப்படும். இந்தக் காலாண்டில் மொத்தம் 100 சைக்கிள் நிறுத்துமிடங்களை மத்திய வர்த்தக வட்டாரத்தில் உருவாக்குவது ஆணையத்தின் இலக்கு. ஒரு கார் நிறுத்துமிடத்தில் 10 சைக்கிள்களை நிறுத்த இயலும்.

பணியிடை மாற்றத் திட்டங்களில் சேர்க்கை எண்ணிக்கை சரிவு

பணியிடை மாற்றத் திட்டங்களில் சென்ற ஆண்டு 5,080 சிங்கப்பூரர்கள் பதிந்துகொண்டனர். ஒப்புநோக்க 2020ல் அது 13,580ஆகப் பதிவானது.

கொவிட்-19 கிருமிப்பரவல் உச்சத்தில் இருந்தபோது பலரும் வேலை இழக்க நேரிட்டதால், ஊழியர்கள் வேறு திறன்களைக் கற்றுக்கொண்டு வேலையில் தொடர, சிங்கப்பூர் ஊழியரணி அமைப்பின் வேலை மாற்றத் திட்டங்கள் பெரிதும் கைகொடுத்தன. சென்ற ஆண்டு எல்லைகள் படிப்படியாகத் திறக்கப்பட்டு நிலைமை மேம்பட்டதால் ஆள்குறைப்பு பற்றிய கவலையின்றி வேலை மாற்றத் திட்டங்களில் ஆர்வம் காட்டுவோர் எண்ணிக்கை குறைந்ததாக மனிதவளத் துறை கவனிப்பாளர்கள் கூறுகின்றனர்.

இலங்கைக்கு அத்தியாவசியமற்ற பயணங்களைத் தவிர்க்க ஆலோசனை

சிங்கப்பூரர்கள் இலங்கைக்கு அத்தியாவசியமற்ற பயணங்களை மேற்கொள்ள வேண்டாம் என்று சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

இலங்கையில் அரசியல் நெருக்கடி ஏற்பட்டதைத் தொடர்ந்து, நேற்று முன்தினம் இந்த ஆலோசனை விடுக்கப்பட்டது. அங்குள்ள சிங்கப்பூரர்கள் விழிப்புடன் இருக்கும்படியும் தங்கள் பாதுகாப்பை உறுதிசெய்யத் தேவையான எல்லா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கும்படியும் அது அறிவுறுத்தியது. தங்கள் விவரங்களை வெளியுறவு அமைச்சிடம் மின்பதிவு செய்யும்படியும் அமைச்சு நினைவுறுத்தியது. தூதரக உதவி தேவைப்படுவோர் கொழும்பில் உள்ள சிங்கப்பூர் தூதரகத்தையோ, அமைச்சின் 24 மணிநேரப் பணி அலுவலகத்தையோ நாடலாம்.

விடுதியறையை அதிக வாடகைக்கு விடும் 'என்டியு' மாணவர்கள்

நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் (என்டியு) வெளிநாட்டு மாணவர்கள் விடுதியறை கிடைக்காமல் திணறும் வேளையில் ஏற்கெனவே அறை ஒதுக்கப்பட்டுள்ள உள்ளூர் மாணவர்கள் சிலர் அதிக விலைக்கு தங்கள் அறையை வாடகைக்கு விட முயல்வது தெரியவந்துள்ளது.

'டெலிகிராம்' குழு மூலம் இவர்கள் முயல்வதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் அறிகிறது. மாதம் 900 வெள்ளி வரை சில மாணவர்கள் அறையை வாடகைக்கு விட முனைந்துள்ளனர். ஒருவர் மட்டும் தங்கக்கூடிய, குளிர்சாதன வசதி இல்லாத புதிய விடுதி அறை ஒன்றுக்கு பல்கலைக்கழகம் வசூலிக்கும் கட்டணத்தைப் போல இது இரு மடங்கு. இந்த அறைக்குள் குளியலறை வசதியும் இருக்காது. பல்கலைக்கழக விதிகளுக்குப் புறம்பான இத்தகைய செயல்களில் ஈடுபடுவோர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்; அவர்களுக்கு விடுதியறைகள் ஒதுக்கப்படமாட்டா என்றும் 'என்டியு' பேச்சாளர் கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!