லாப நோக்கமற்ற அமைப்புகளை நிறுவி, நடத்திவரும் சிங்கப்பூர் மாணவர்கள் இருவருக்கு அனைத்துலக விருது

வச­தி­கு­றைந்­தோ­ருக்கு உத­வும் லாப நோக்­க­மற்ற அமைப்­பு­களை நிறுவி நடத்­தி­வ­ரும் சிங்­கப்­பூர் மாண­வர்­கள் இரு­வ­ருக்கு அனைத்­து­லக டயானா விருது வழங்­கப்­பட்­டுள்­ளது.

யேல்-என்­யு­எஸ் பல்­க­லைக்­க­ழ­கத்­தில் அண்­மை­யில் பட்­டம்­பெற்ற 23 வயது நூர் ஹசீம் அப்­துல் நாசர், அனைத்­து­ல­கப் பள்­ளி­யான நேஷ­னல் பப்­ளிக் ஸ்கூ­லில் பயி­லும் 16 வயது மாணவி அனன்யா ராவ் இரு­வ­ரும் இம்­மா­தம் 1ஆம் தேதி காணொளி மூலம் நடை­பெற்ற நிகழ்ச்­சி­யில் இந்த விரு­து­க­ளைப் பெற்­றுக்­கொண்­ட­னர்.

காலஞ்­சென்ற பிரிட்­டிஷ் இள­வ­ரசி டயா­னா­வின் நினை­வாக வழங்­கப்­படும் இந்த விருது, சமூ­க­சேவை­யில் தங்­கள் தலை­மு­றை­யி­ன­ருக்கு ஆர்­வ­மூட்டி, ஊக்­க­ம­ளிக்­கும் ஒன்­பது முதல் 25 வயது வரை­யி­லா­னோரை அங்­கீ­க­ரிக்­கிறது.

ஹசீம், அனன்யா உள்­பட 29 நாடு­க­ளைச் சேர்ந்த 180 இளை­யர்­கள் இந்த விரு­தைப் பெற்­றுக்­கொண்­ட­னர்.

அனன்யா 2020ஆம் ஆண்டு 'ஆர்ட்: கனெக்ட்' என்ற முயற்­சி­யைத் தொடங்­கி­னார். சிங்­கப்­பூ­ரின் மாணவ ஓவி­யர்­களை சுகா­தா­ரப் பரா­ம­ரிப்பு நிலை­யங்­களில் உள்ள நோயா­ளி­க­ளு­டன் தொடர்பு ­கொள்­ளச் செய்­யும் திட்­டம் இது.

தற்­போது வெவ்­வேறு பள்­ளி­களைச் சேர்ந்த 40க்கும் அதி­க­மான தொண்­டூ­ழி­யர்­கள் இதில் இணைந்­துள்­ள­னர். முதி­யோர் பரா­ம­ரிப்பு இல்­லங்­களில் உள்­ள­வர்­க­ளு­டன் இணை­யம்­வழி நட்பு ஏற்­ப­டுத்­திக்­கொள்­வது, கைவி­னைப் பயி­ல­ரங்­கு­கள் நடத்­து­வது போன்­ற­வற்­றில் இவர்­கள் ஈடு­ப­டு­கின்­ற­னர்.

உடல் உறுப்பு தானம் தொடர்­பான விழிப்­பு­ணர்வை ஏற்­ப­டுத்­தும் நோக்­கில் தேசி­யப் பல்­க­லைக்­க­ழக உறுப்பு மாற்று அறு­வைச் சிகிச்­சை நிலை­யத்­து­டன் இணைந்து ஓவி­யப் போட்­டி­யை­யும் இந்த அமைப்பு நடத்­தி­யது.

ஹசீம் 2019ல் 'த சிங்­போஸ்ட் புரோ­ஜெக்ட்' எனும் முயற்­சி­யைத் தொடங்­கி­னார்.

'டிஷ்யு பேப்­பர்' எனப்­படும் மெல்­லி­ழைத் தாள் பொட்­ட­லங்­களை விற்­கும் முதி­யோர் மீதான குறை­கூ­ற­லுக்கு எதி­ரான சமூக ஊட­கப் பிர­சா­ரம் இது. விழிப்­பு­ணர்வு ஏற்­படுத்­து­வது மட்­டு­மின்றி இவர்­களை­யும், பழைய அட்­டைப் பெட்­டி­க­ளைச் சேக­ரிக்­கும் முதி­யோ­ரை­யும் உரிய சமூ­க­சேவை அமைப்­பு­க­ளு­டன் தொடர்­பு­ப­டுத்­து­வ­தி­லும் இந்­தத் திட்­டம் முனைந்­துள்­ளது.

சமூ­கத்­தில் தாக்­கம் ஏற்­ப­டுத்­து­வது ஒரு சிக்­க­லான, கடி­ன­மான பய­ணம் என்­றா­லும் இத்­த­கைய விரு­து­கள் அதற்­கான அங்­கீ­காரத்தை வழங்­கு­வ­தாக ஹசீம் குறிப்­பிட்­டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!