தகுதிபெறுவோர் ‘பூஸ்டர்’ தடுப்பூசியை விரைந்து செலுத்திக்கொள்ள வலியுறுத்தப்படுகிறது

கொவிட்-19 கிரு­மித்­தொற்­றுக்கு எதி­ரான 'பூஸ்­டர்' தடுப்­பூ­சிக்­குத் தகு­தி­பெற்­றி­ருந்­தும் இது­வரை அதைச் செலுத்­திக்­கொள்­ளா­தோர் இனி­யும் தாம­த­மின்றி விரைந்து செலுத்­திக்­கொள்­ளும்­படி சுகா­தார அமைச்சு வலி­யு­றுத்­தி­யுள்­ளது.

'மொடர்னா', 'ஃபைசர்-பையோஎன் டெக்', 'நொவா­வேக்ஸ்' ஆகிய மருந்­தாக்க நிறு­வ­னங்­கள் ஓமிக்­ரான் வகைக் கிரு­மி­யின் அண்­மைத் திரி­பு­க­ளுக்­கும் எதி­ரான எதிர்ப்பு ஆற்­ற­லைக் கொண்ட தடுப்பு மருந்­தைத் தயா­ரிப்­பது குறித்து ஆய்வு செய்­வ­தா­கத் தக­வல் வெளி­வந்­துள்­ளது.

அத­னால் புதிய தடுப்பு மருந்து கிடைக்­கும்­வரை காத்­தி­ருக்க சிலர் முடி­வெ­டுக்­க­லாம். ஆனால் தற்­போது உள்ள தடுப்பு மருந்து, கிரு­மி­யின் அண்­மைத் திரி­பு­க­ளால் மோச­மான பாதிப்பு ஏற்­ப­டா­மல் தடுப்­ப­தா­கச் சுகா­தார அமைச்­சர் ஓங் யி காங் கூறி­னார்.

எனவே புதிய மருந்­துக்­கா­கக் காத்­தி­ருக்­கா­மல் உட­ன­டி­யாக 'பூஸ்­டர்' தடுப்­பூ­சி­யைப் போட்­டுக்­கொள்­ளும்­படி அவர் வலி­யு­றுத்­தி­னார்.

ஓமிக்­ரான் வகை கொவிட்-19 கிரு­மித்­தொற்­றுக்கு எதி­ரான தடுப்பு மருந்­து­களை உல­கச் சுகா­தார நிறு­வ­னம் மதிப்­பி­டத் திட்­ட­மிட்­டுள்­ள­தாக ராய்ட்­டர்ஸ் செய்தி நிறுவனம் தக­வல் வெளி­யிட்­டது.

முறை­யாக அங்­கீ­க­ரிக்­கப்­பட்டால் சிங்­கப்­பூ­ரில் இந்­தத் தடுப்பு மருந்­து­க­ளைப் பயன்­ப­டுத்­து­வ­தன் தொடர்­பில் இவற்­றின் பாது­காப்பு, செயல்­தி­றன் ஆகி­ய­வற்றை அர­சாங்­கம் சோதித்­து­ வ­ரு­கிறது என்றார் அமைச்சர் ஓங்.

ஓமிக்­ரான் 'பிஏ.4', 'பிஏ.5' ஆகிய திரி­பு­கள் மே மாத மத்­தி­யில் சிங்­கப்­பூ­ரில் முதன்­மு­த­லாக அடை­யா­ளம் காணப்­பட்­டன. தற்­போது இங்கு கொவிட்-19 பாதிப்பு உறுதி­யா­னோ­ரில் 70 முதல் 80 விழுக்­காட்­டி­னர் இந்த ரகக் கிரு­மி­யால் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர். இருப்பினும் புதிய ஓமிக்­ரான் கிரு­மித்­தொற்று அலை இதற்கு முந்­தைய அலை­யை­வி­டக் கடு­மை­யாக இருக்­காது என்று வல்­லு­நர்­கள் கரு­து­வதை அமைச்­சர் ஓங் சுட்­டி­னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!