தேசிய தினத்தையொட்டி ஜூலை 17ஆம் தேதி இஸ்தானா பொது வரவேற்பு தினம்

தேசிய தினத்­தைக் கொண்­டா­டும் வித­மாக வரும் ஞாயிற்­றுக்­கி­ழமை (ஜூலை 17) இஸ்­தானா பொது வர­வேற்பு தினம் இடம்­பெற இருக்­கிறது.

கொவிட்-19 பெருந்­தொற்­றுச் சூழ­லின் தொடக்­கத்­தில் இருந்து முதன்­மு­றை­யாக, நேரடி இசை, நடன நிகழ்ச்­சி­கள் இடம்­பெற இருக்­கின்­றன.

ஞாயிற்­றுக்­கி­ழமை காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை இஸ்­தானா திடல் பொது­மக்களுக்குத் திறந்­தி­ருக்­கும் என்று அதி­பர் அலு­வ­ல­கம் நேற்று வெளி­யிட்ட அறிக்கை தெரி­வித்­தது.

அங் மோ கியோ உயர்­நி­லைப்­பள்ளி, சுங் செங் உயர்­நி­லைப்­பள்ளி, செங்­காங் உயர்­நி­லைப்­பள்ளி, ராஃபிள்ஸ் பெண்­கள் பள்ளி ஆகி­ய­வற்­றைச் சேர்ந்த மாண­வர்­க­ளின் இசை, நட­னப் படைப்­பு­களை வரு­கை­யா­ளர்­கள் கண்டு மகி­ழ­லாம்.

விளை­யாட்­டு­கள், கலை மற்றும் கைத்­தொ­ழில் போன்ற நட­வடிக்­கை­கள் இடம்­பெ­றும் கூடங்­களும் அமைக்­கப்­படும்.

வழி­காட்­டு­த­லு­டன் கூடிய சுற்று­லாக்­க­ளுக்கு வரு­கை­யா­ளர்­கள் பதிந்­து­கொள்­ள­லாம். தேசிய பூங்காக் கழ­கம் ஏற்­பாடு செய்­யும் இயற்கை உலா­வும் இஸ்­தானா பிர­தான கட்­ட­டத்­தில் தேசிய மர­பு­டை­மைக் கழ­கம் ஏற்­பாடு செய்­யும் சுற்­று­லா­வும் இதில் அடங்­கும். வரு­கை­யா­ளர்­கள் சொந்­த­மா­க­வும் சுற்­றுலா மேற்­கொள்­ள­லாம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!