மூத்தோர் ஆதரவுத் திட்டம்: தகுதி இழப்பவருக்கு ரொக்க வழங்கீடு

மூத்­தோர் ஆத­ர­வுத் திட்­டத்­திற்­குத் (Silver Support Scheme) தகுதி பெறா­தோ­ருக்கு அத­னால் ஏற்­படும் சிர­மத்­தைக் குறைக்­கும் நோக்­கில் அவர்­க­ளுக்­குக் குறைந்த அள­விலான ரொக்க வழங்­கீடு கிடைக்­கும். இந்த ரொக்க வழங்­கீடு ஒரு காலாண்டு இடை­வெ­ளி­யில் இரண்டு முறை வழங்­கப்­படும்.

இதை நேற்று நாடா­ளு­மன்­றத்­தில் அறி­வித்த மனி­த­வள அமைச்­சர் டான் சீ லெங், குறிப்­பிட்ட ஓர் ஆண்­டி­லி­ருந்து இந்­தத் திட்­டத்­தின்­கீழ் பயன்­பெ­றத் தகுதி இழப்­ப­வர்­களுக்கு, அதற்கு முந்­தைய ஆண்­டின் டிசம்­பர் மாதம் அது குறித்­துத் தக­வல் தெரி­விக்­கப்­படும் என்று கூறி­னார்.

நாடா­ளு­மன்­றத்­தில் புக்­கிட் பாஞ்­சாங் தொகுதி உறுப்­பி­னர் லியாங் எங் ஹுவா கேட்ட கேள்­விக்கு அமைச்­சர் பதி­ல­ளித்­தார். இந்­தத் திட்­டத்­தின்­கீழ் பல­ன­டைந்து வந்த மூத்­தோர் அதை எதிர்­பார்த்­தி­ருக்­கும் நிலை­யில் அதைத் பெறும் தகு­தியை அவர்­கள் இழப்­பது குறித்து உறுப்­பி­னர் கேட்­டார்.

இந்­தத் திட்­டம் 2016ஆம் ஆண்டு அறி­மு­க­மா­னது. இதன்­படி, தாங்­கள் வேலை பார்த்த நாட்­களில் குறைந்த அள­வி­லான சம்­ப­ளம், பின்­னர் குறை­வான குடும்ப ஆத­ரவு அல்­லது குடும்ப ஆத­ரவு அறவே இல்­லாத மூத்­தோ­ருக்கு ஒவ்­வொரு காலாண்­டும் அரசு ரொக்க வழங்­கீடு தரும்.

இந்­தத் திட்­டம் சென்ற ஆண்டு மேம்­ப­டுத்­தப்­பட்­டது. அதன்­படி, ரொக்க வழங்­கீடு அதி­க­ரித்­த­துடன் இதற்­குத் தகு­தி­பெ­றும் வரை­மு­றை­யும் அறி­விக்­கப்­பட்­டது. இதைத் தொடர்ந்து 2020ஆம் ஆண்டு இத்­திட்­டத்­தின்­கீழ் 150,000 மூத்­தோர் பயன்­பெற்ற நிலை­யில் இந்த எண்­ணிக்கை இவ்­வாண்டு 250,000ஆக அதி­க­ரித்­துள்­ளது.

இத­னால், இத்­திட்­டத்­தின்­கீழ் வழங்­கப்­படும் தொகை 2020ஆம் ஆண்டு $300 மில்­லி­ய­னாக இருந்த நிலை­யில் இவ்­வாண்டு அது $600 மில்­லி­ய­னாக உயர்ந்­துள்­ளது என அமைச்­சர் டான் விளக்­கி­னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!