அமைச்சர் ஈஸ்வரன்: விமானப் பயணத்துறை மீட்சியில் சாங்கி விமான நிலையம் முன்னிலை

ஆசிய பசி­பிக் வட்­டா­ரத்­தில் கொவிட்-19 பெருந்­தொற்­றுக்­குப் பிந்­திய விமானப் பயணத்துறை மீட்­சியில் சாங்கி விமான நிலை­யம் முன்னிலையில் உள்ளது என்று போக்­கு­வ­ரத்து அமைச்­சர் எஸ்.ஈஸ்­வ­ரன் தெரி­வித்துள்ளார்.

வாராந்­திர விமா­னப் பய­ணி­களின் எண்­ணிக்கை கடந்த மாதத்­தின் முதல் வாரத்­தில் கொவிட்-19 பர­வ­லுக்கு முன்­பி­ருந்த நிலை­யில் 55 விழுக்­காட்டை எட்­டி­ய­தாக அவர் கூறி­னார்.

அத்­து­டன், சென்ற மாதத்­தில் சாங்கி விமான நிலை­யத்­தை­யும் 108 நக­ரங்­க­ளை­யும் பய­ணி­கள் விமா­னங்­கள் இணைத்­தன. இது, கொவிட்-19 பரவலுக்கு முன்­பி­ருந்த நிலை­யில் மூன்­றில் இரு­பங்கு.

இது, இஞ்­சி­யோன் (சோல்), ஹாங்­காங், பேங்­காக் போன்ற இவ்­வட்­டா­ரத்­தின் முக்­கிய விமான நிலை­யங்­க­ளை­விட சாங்­கியை முன்­னி­லை­யில் வைத்­துள்­ள­தாக அமைச்சர் ஈஸ்­வ­ரன் குறிப்­பிட்­டார்.

இவ்­வாண்டு இறு­திக்­குள் சிங்­கப்­பூ­ரின் விமா­னப் போக்­கு­வ­ரத்து கொவிட்-19 பர­வ­லுக்கு முன்­பி­ருந்த நிலை­யில் 50 விழுக்­காட்­டைத் தொட வேண்­டும் என்ற தொடக்க இலக்கு இப்­போதே எட்­டப்­பட்­டு­விட்­டது.

இதனையடுத்து, எதிர்­காலத் தேவை­க­ளைப் பூர்த்­தி­செய்­யும் வகை­யில், சாங்­கி ­விமான நிலையம் கையாளும் திறனை அதி­கப்­ப­டுத்த இப்­போது கவ­னம் செலுத்­தப்­ப­டு­கிறது என்று நாடாளுமன்றத்தில் திரு ஈஸ்வரன் சொன்­னார்.

அண்­மைய மீட்­சியை அடுத்து, 2022, 2023ஆம் ஆண்­டு­க­ளுக்­கான விமா­னப் பய­ணி­கள் எண்­ணிகை இலக்கு மறு­ஆய்வு செய்­யப்­ப­டுமா என்று பாட்­டா­ளிக் கட்­சி­யின் செங்­காங் குழுத்தொ­குதி எம்.பி. லூயிஸ் சுவா கேட்­டார்.

அதற்கு, "இப்­போ­தைய நிலை­யில், மொத்த விமா­னப் பய­ணி­கள் எண்­ணிக்கை தொடர்­பில் இலக்கு வகுப்­பது கடி­னம். மற்ற நாடு­கள் கொவிட்-19 மீட்­சி­யின் வெவ்­வேறு நிலை­களில் இருப்­பதே இதற்­குக் கார­ணம்," என்று திரு ஈஸ்­வ­ரன் பதி­லு­ரைத்­தார்.

ஆயி­னும், விமா­னப் போக்­கு­வரத்­திற்­கான தேவை அடிப்­ப­டை­யில் வலு­வாக இருப்­ப­தா­கக் கூறிய அவர், சீனா, ஜப்­பான் போன்ற நாடு­கள் முழு­மை­யாக எல்­லை­களைத் திறந்த பிறகு சாங்கி விமான நிலை­யத்­தின் மீட்­சி­யும் வேக­ம­டை­யும் என்­றும் சொன்­னார்.

அடுத்த மாதம் 13ஆம் தேதி­யில் இருந்து சாங்கி விமான நிலை­யத்­தின் 4ஆம் முனை­யம் மீண்­டும் திறக்­கப்­படும் என்­றும் 2ஆம் முனை­யத்­தின் தென்­ப­குதி விமா­னப் புறப்­பா­டு­க­ளுக்­காக அக்­டோ­ப­ரில் திறக்­கப்­படும் என்­றும் அவர் கூறி­னார்.

இதன்­மூ­லம், கொவிட்-19 பர­வ­லுக்கு முன்­பி­ருந்­த­தைப்­போல ஆண்­டுக்கு 70 மில்­லி­யன் பய­ணி­க­ளைக் கையாள முடி­யும் என்ற நிலைக்கு சாங்கி விமான நிலை­யம் திரும்­பும் என்­றும் அமைச்­சர் ஈஸ்­வ­ரன் குறிப்­பிட்­டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!