11வது மாடி வீட்டில் தீ; 50 குடியிருப்பாளர்கள் வெளியேற்றம்

நேற்­றுக் காலை தெலுக் பிளாங்கா வட்­டா­ரத்­தில் உள்ள ஒரு வீட­மைப்பு வளர்ச்­சிக் கழக புளோக்­கின் 11வது மாடி­யில் தீ விபத்து ஏற்­பட்­டதை அடுத்து அந்த புளோக்­கில் இருந்து சுமார் 50 குடி­யி­ருப்­பா­ளர்­கள் வெளி­யேற்­றப்­பட்­ட­னர்.

புளோக் 92B தெலுக் பிளாங்கா ஸ்தி­ரீட் 31ல் ஏற்­பட்ட தீ விபத்து குறித்து சிங்­கப்­பூர் குடி­மைத் தற்­காப்­புப் படைக்கு முற்­ப­கல் 11.40 மணி­ய­ள­வில் தக­வல் தெரி­விக்­கப்­பட்­டது. அங்கு வந்­த­வு­டன், 11வது மாடி­யில் உள்ள ஒரு வீட்­டி­லி­ருந்து தீ கொழுந்­து­விட்டு எரி­வ­தை­யும் அடர்த்­தி­யான கரும்­புகை வெளி­யே­று­வ­தை­யும் குடி­மைத் தற்­காப்­புப் படை அதி­கா­ரி­கள் கவ­னித்­த­னர்.

அலெக்­சாண்­டிரா தீய­ணைப்பு நிலை­யத்­தைச் சேர்ந்த தீய­ணைப்பு வீரர்­கள், அந்த வீட்­டிற்­குள் நுழைந்து நீரைப் பீய்ச்சி அடிக்கும் கரு­வி­க­ள் இரண்டைப் பயன்­படுத்தி தீயை அணைத்­த­னர் என்று குடிமைத் தற்­காப்­புப் படை தெரி­வித்­தது.

தீ விபத்­தின் விளை­வாக, வெப்பம் மற்­றும் புகை வீடு முழு­வதும் பரவியது. அங்கிருந்து ஒருவர் புகையை சுவா­சித்­தாரா என்­பதை மருத்­துவ உத­வி­யா­ளர் ஒரு­வர் மதிப்­பீடு செய்தார். அதன் பின்­னர் மருத்­து­வ­ம­னைக்குச் செல்ல அந்த நபர் மறுத்­து­விட்­டார் என்­றும் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

பாதிக்­கப்­பட்ட புளோக்­கில் இருந்து சுமார் 50 குடி­யி­ருப்­பா­ளர்­களை முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கை­யாக காவல்­துறை மற்­றும் குடி­மைத் தற்­காப்­புப் படை­யி­னர் வெளி­யேற்­றி­னர்.

தீ விபத்­துக்­கான கார­ணம் குறித்து விசா­ரணை நடை­பெற்று வரு­கிறது.

குடி­யி­ருப்­பா­ளர்­கள் பலர் தீ விபத்து பற்றி தமக்­குத் தெரி­யப்­படுத்­தி­ய­தாக ஃபேஸ்புக் பதிவு ஒன்­றில் வெஸ்ட் கோஸ்ட் குழுத்­தொகுதி எம்.பி. ரேச்­சல் ஓங் கூறி­னார். பின்­னர் அந்த புளோக்­கிற்­குச் சென்று பாதிக்­கப்­பட்ட வீட்­டின் உரி­மை­யா­ளர்­க­ளை­யும் மற்ற குடி­யி­ருப்­பா­ளர்­க­ளை­யும் தாம் சந்தித்­த­தா­க­வும் வீட்­டின் உரி­மை­யா­ளர் உடல் ரீதி­யாக பாதிக்­கப்­ப­ட­வில்லை என்­றும் அவர் கூறி­னார்.

பின்­னர் ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்­சிடம் பேசிய திரு­வாட்டி ஓங், தீ விபத்து ஏற்­பட்­ட­போது குடி­யி­ருப்­பா­ளர்­கள் பல்­வேறு வழி­க­ளைப் பயன்­ப­டுத்தி ஒரு­வ­ருக்­கொ­ரு­வர் விபத்தைப் பற்றி தெரி­வித்­துக்­கொண்­ட­தா­கக் கூறி­னார்.

“குடி­யி­ருப்­பா­ளர்­கள் எப்­போது தங்­கள் வீடு­க­ளுக்­குத் திரும்ப முடி­யும் என்­பதை அவர்­க­ளால் உறு­தி­யா­கக் கூற முடி­யா­த­தால், வீடு­களில் இருந்து வெளி­யேற்­றப்­பட்ட குடி­யி­ருப்­பா­ளர்­க­ளுக்கு தண்­ணீர் கொடுக்க நகர மன்ற உறுப்­பி­னர்­கள் முன்­வந்­த­னர்,” என்று அவர் கூறி­னார்.

மதி­யம் 2 மணி­ய­ள­வில், பாதிக்­கப்­பட்ட மாடி­யில் தங்­கி­யி­ருப்­ப­வர்­களைத் தவிர மற்ற குடி­யி­ருப்­பாளர்கள் தங்­கள் வீடு­க­ளுக்­குத் திரும்­பி­னர். நகர மன்ற ஊழி­யர்­கள் தூய்­மைப்­ப­டுத்­தும் பணி­க­ளுக்கு உத­வி­ய­தாக திரு­வாட்டி ஓங் தெரி­வித்­தார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!