கத்தரிக்கோலால் இருவரை தாக்கிய ஆடவர் கைது

கத்­த­ரிக்­கோ­லைக் கொண்டு இரு­வ­ரைத் தாக்­கி­ய­தா­கக் கூறப்­படும் 21 வயது ஆட­வர் ஒரு­வர் நேற்று முன்­தி­னம் கைது செய்­யப்­பட்­டார்.

பாதிக்­கப்­பட்ட 20 வயது ஆட­வ­ருக்­கும் 21 வயது மாதுக்­கும் உட­லில் பல இடங்­களில் காயங்­கள் ஏற்­பட்­ட­தைத் தொடர்ந்து அவர்­கள் மருத்­து­வ­மனைக்­குக் கொண்டு செல்­லப்­பட்­ட­னர்.

பாதிக்­கப்­பட்ட இருவரும் சந்தேக நபரும் ஒருவருக்கு ஒருவர் பழக்கமானவர்கள் என்று முதற்­கட்ட விசா­ர­ணை­யில் தெரி­ய­வந்­துள்­ள­தாக காவல்­துறை நேற்று வெளி­யிட்ட அறிக்­கை­யில் தெரி­வித்­தது.

சிராங்­கூன் அவென்யூ 4ல் நிகழ்ந்த இச்­சம்­ப­வம் குறித்து இரவு 8.30 மணி­ய­ள­வில் காவல்­துறைக்குத் தக­வல் அளிக்­கப்­பட்­டது.

"தாக்­கு­த­லுக்­குப் பிறகு, அந்­த சந்­தேக நபர் அந்த மாது­டன் வாக­னத்­தில் ஏறி சம்­பவ இடத்­தை­விட்டு தப்­பிச்­சென்­றார்," என்று காவல்­துறை தெரி­வித்­தது.

காவல்­துறை கண்­கா­ணிப்­புக் கரு­வி­க­ளின் உத­வி­யு­டன் அந்த ஆட­வர் அடை­யா­ளம் காணப்­பட்­டார். அங் மோ கியோ காவல்துறைப் பிரி­வைச் சேர்ந்த அதி­கா­ரி­கள், பொங்­கோ­லின் நார்த்­ஷோர் டிரை­வில் உள்ள பல­மாடி கார்­நி­றுத்­தும் இடத்­தில், அந்த ஆட­வர் தப்­பிச் செல்­வ­தற்­குப் பயன்­ப­டுத்­திய வாக­னத்­தைக் கண்­ட­னர்.

சிறப்­புச் செயல்­பாட்டு தள­பத்­தி­யத்­தின் கே-9 பிரி­வைச் சேர்ந்த அதி­கா­ரி­கள், அத்­தம்­ப­தி­யைக் கண்டு­பி­டிக்க தேடு­தல் வேட்­டை­யைத் தொடங்­கி­னர். தாக்­கு­தல் நடத்­திய ஐந்து மணி நேரத்­திற்­குள் அந்­த சந்­தேக ஆட­வர் கைது செய்­யப்­பட்­டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!