மனைவியைக் கொன்றதாக சிங்கப்பூரர் மீது வழக்கு

பிரிட்­ட­னில் தமது மனை­வி­யைக் கொன்­ற­தா­கக் குற்­றம் சாட்­டப்­பட்ட சிங்­கப்­பூர் ஆட­வ­ரின் மகன் நேற்று முன்­தி­னம் சாட்­சி­யம் அளித்­தார்.

தமது தந்தை தமது தாயைப் பாது­காப்­ப­வர் என்­றும் தாயின்­மீது தந்­தை­யின் விரல் பட்­டுக்­கூட தாம் பார்த்­த­தில்லை என்­றும் அலோன்ஸோ ஃபோங், 26, என்­னும் அந்த ஆட­வர் நீதி­மன்­றத்­தில் கூறி­னார்.

51 வய­தான ஃபோங் சூங் ஹெர்ட், கடந்த டிசம்­பர் மாதம் விடு­மு­றை­யில் சென்று ஹோட்­ட­லில் தங்கி இருந்­த­போது தலை­ய­ணை­யால் அவ­ரது மனைவி திரு­வாட்டி பெக் யிங் லிங் என்­ப­வ­ரைக் கொலை செய்த குற்­றத்­திற்­காக நியூ­கா­சல் மாநி­லத்­தில் விசா­ர­ணையை எதிர்­கொள்­கி­றார்.

இவ்­வ­ழக்­கில், இவர்­க­ளின் மூத்த மக­னான அலோன்ஸோ ஃபோங், நியூ­கா­சல் கிர­வுன் நீதி­மன்­றத்­தில் அளித்த சாட்­சி­யம் பற்றி பிபிசி செய்தி வெளி­யிட்டு இருந்­தது.

"என் 26 ஆண்டு வாழ்க்­கை­யில், ஒரு முறை­கூட என் அம்­மா­வின் மீது என் அப்­பா­வின் விரல் பட்­டுப் பார்த்­த­தில்லை.

"அவர் சிகிச்­சை­யில் இருந்­த­போ­தும் மன­உ­ளைச்­ச­லில் இருந்­த­போ­தும் உடல்­ரீ­தி­யான வன்­மு­றை­யில் இறங்­கி­ய­தில்லை.

"என் தந்தை எப்­போ­தும் என் அம்­மா­வுக்கு உறு­து­ணை­யா­கவே இருந்­தார்.

"என் தந்­தை­யைப் பற்றி எனக்கு நன்­றா­கத் தெரி­யும். எந்­த­வொரு சூழ்­நி­லை­யி­லும் என் அம்­மா­வைக் காயப்­ப­டுத்த அவர் எண்­ணி­யி­ருப்­பார் என்று நான் ஒரு­போ­தும் கரு­தி­யது இல்லை," என அலோன்ஸோ ஃபோங் சாட்­சி­யம் அளித்­தார்.

நியூ­கா­ச­லில் உள்ள அபார்ட்­ஹோட்­ட­லில் கடந்த ஆண்டு டிசம்­பர் 6ஆம் தேதி திரு­வாட்டி பெக் மர­ண­ம­டைந்­த­தாக அறி­விக்­கப்­பட்­டது.

இவ­ரும் இவ­ரது கண­வ­ரும் மண­மாகி 27 ஆண்­டு­கள் ஆயின. இவர்­க­ளுக்கு 20களைத் தாண்­டிய மூன்று மகன்­கள் உள்­ள­னர்.

இந்­தத் தம்­பதியினர் பிரிட்­ட­னுக்­கும் ஐரோப்­பா­வுக்­கும் பய­ணம் செய்­து­கொண்டு இருந்­த­னர்.

இந்த வழக்­கில் திங்­கட்­கி­ழமை நடை­பெற்ற விசா­ர­ணை­யில் சில தக­வல்­கள் வெளி­யா­யின.

சம்­ப­வத்­தன்று நியூ­கா­ச­லில் படித்­துக் கொண்­டி­ருந்த தமது மகனை அழைத்த ஃபோங் தமது மனை­வி­யைக் காயப்­ப­டுத்­தி­விட்­ட­தா­கக் கூறி­னார் என்று நீதி­மன்­றத்­தில் தெரி­விக்­கப்­பட்­டது.

"அவள் போய்­விட்­டாள். இறந்து­ விட்­டாள். நான் அவளை இழந்­து­விட்­டேன். அவ­ளது வாயை மூட முயற்­சித்­தேன். அவளை இழந்­து­விட்­டேன்," என்று ஃபோங் தமது மக­னி­டம் கூறி­னார்.

அர­சுத் தரப்பு வழக்­க­றி­ஞர் விசா­ரணை நடத்­தி­ய­போது, நடந்­த­சம்பவத்திற்கு வருந்­து­வ­தா­க­வும் தாம் மர­ணமடைய விரும்­பு­வ­தா­க­வும் ஃபோங் கூறி­னார்.

இந்த வழக்கு விசா­ரணை வரும் செவ்­வாய்க்­கி­ழமை முடி­வ­டை­யும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

பிரிட்டன் சம்பவம்: அப்பாவைத் தற்காத்து சாட்சியமளித்த மகன்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!