செய்திக்கொத்து

முரண்பாடுடைய விவகாரங்கள்

குறித்து அமைச்சு அறிவுறுத்து

சமூகத்தினரிடையே பிரிவினையை ஏற்படுத்தக்கூடிய விவகாரங்கள் குறித்துக் குரல்கொடுப்பதில் எச்சரிக்கை காக்குமாறு சிங்கப்பூரில் செயல்பட்டுவரும் வெளிநாட்டு வர்த்தகங்களுக்கு உள்துறை அமைச்சு அறிவுறுத்தியுள்ளது. 'எல்ஜிபிடி' எனப்படும் ஓரின மற்றும் மாற்றுப் பாலின சமூகத்தினரைப் பற்றிய விவகாரமும் இதில் அடங்கும் என்று அமைச்சு நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.

பல அமெரிக்க வர்த்தகங்கள் இங்கு நிறுவப்பட்டுவரும் நிலையில் 'எல்ஜிபிடி' சமூகத்தினருக்கு சிங்கப்பூரின் வர்த்தகச் சமூகம் ஆதரவு வழங்குமாறு அமெரிக்க நாடாளுமன்ற நாயகரான நேன்சி பெலோசி அறைகூவல் விடுத்ததை அடுத்து எழுந்த ஊடகக் கேள்விகளுக்கு அமைச்சு இவ்வாறு பதிலளித்துள்ளது.

பொதுச் சேவை ஆணையத்தின் புதிய உறுப்பினராக ரம்லி புவாங்

பொதுச் சேவை ஆணையத்தின் புதிய உறுப்பினராக

65 வயது திரு ரம்லி புவாங் நியமிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் அலுவலகம் நேற்று அறிவித்தது. அதிபர் ஹலிமா யாக்கோப் நியமித்துள்ள திரு ரம்லி, ஆகஸ்ட் 1 தொடங்கி ஐந்தாண்டுகளுக்குப் பணியாற்றுவார் என்று கூறப்பட்டது.

சிங்கப்பூரில் பொதுத்துறை அதிகாரிகளை நியமிக்கும் பொறுப்பை பொதுச் சேவை ஆணையம் மேற்கொண்டு வருகிறது. வழிகாட்டுதல், நிறுவன ஆளுமை, மனிதவள மேம்பாடு ஆகியவற்றில் அனுபவமுடைய திரு ரம்லி, ஆணையத்தின் திறன் தேர்வு மற்றும் மேம்பாட்டிற்குப் பெரும் பங்காற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!