‘மரண தண்டனை கைதியின் சகோதரி கூறியது உண்மையல்ல’

அப்­துல் ரஹிம் ஷாபிஸ் என்ற குற்­ற­வா­ளிக்கு வெள்­ளிக்­கி­ழமை மரண தண்­டனை நிறை­வேற்­றப்­பட இருந்­தது.

இந்­நி­லை­யில், அந்த குற்­ற­வாளி­யின் சகோ­தரி ஒரு­வர், நீதி­மன்ற விண்­ணப்­பம் ஒன்­றைத் தாக்­கல் செய்ய தான் முயன்­ற­தா­க­வும் அதை சிங்­கப்­பூர் சிறைச்­சாலை சேவைத் துறை அதி­கா­ரி­கள் வேண்­டு­மென்றே தடுத்­து­விட்­ட­தா­க­வும் இணை­யத்­தில் பதி­வேற்­றப்­பட்ட ஒரு கடி­தத்­தில் தெரி­வித்­தார்.

இதை அந்­தச் சேவைத் துறை மறுத்து இருக்­கிறது.

தன் சகோ­த­ரர் உட்­பட, மரண தண்­டனை நிறை­வேற்­றப்­பட இருந்த கைதி­கள் ஜூலை 25ஆம் தேதி சிறைச்­சா­லைத் துறை அதி­கா­ரி­களி­டம் நீதி­மன்றப் பத்­தி­ரங்­களைத் தாக்­கல் செய்து இருந்­த­தாக அந்த மாது தெரி­வித்­தார்.

அந்த அதி­கா­ரி­கள், கைதி­களிடம் விண்­ணப்பப் படி­வங்­க­ளை­யும் மின்­னணு படி­வங்­க­ளை­யும் கேட்டு அதன் மூலம் அந்த விண்ணப்பங்­க­ளைத் தாக்­கல் செய்ய முடி­யா­மல் தடுத்­து­விட்­ட­தா­க­வும் அந்த மாது குறிப்­பிட்­டார்.

இது உண்­மை­யல்ல என்று சிறைச்­சாலை சேவைத் துறை அறிக்கையில் நேற்று தெரி­வித்­தது.

மரண தண்­டனை நிறை­வேற்றப் ­ப­ட­வி­ருந்த எந்­த­வொரு கைதி­யும் 2022 ஜூலை 25ஆம் தேதி எந்­த­வோர் அதி­கா­ரி­யை­யும் அணுகி எந்­த­வொரு சட்­டப்­பூர்வ விண்­ணப்­பத்­தை­யும் தாக்­கல் செய்ய கோர­வில்லை என அந்த அறிக்கை தெரி­வித்­தது.

மரண தண்­டனை நிறை வேற்றப்பட இருந்த இரு கைதிகள் ஜூலை 28ஆம் தேதி சிறைச்­சாலைத்­ துறை அதி­காரி ஒரு வருக்கு வேண்­டு­கோள் விடுத்­த­தாக அறிக்கை கூறியது.

வழக்­குத் தொடுக்­கும் மனுவை எப்­படி விண்­ணப்­பிப்­பது என்­ப­தன் தொடர்­பில் ஆலோ­சனை கூறும்­படி அவர்­கள் கேட்­டுக்­கொண்­ட­தாக சிறைச்­சாலை சேவைத் துறை தெரி­வித்­தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!