சீனாவிடம் சிங்கப்பூர் வலியுறுத்து

தவ­றான மதிப்­பீடு, விபத்­து­கள் ஆகி­யவை தொடர் விளை­வாக ஆசியான் நிலைத்­தன்­மை­யைப் பாதிக்­கக்­கூ­டி­யவை என்­ப­தால் அவற்­றைத் தவிர்க்க வேண்­டி­யது அவ­சி­யம் என்று வெளி­யு­றவு அமைச்­சர் விவி­யன் பால­கி­ருஷ்­ணன் வலி­யு­றுத்­தி­யுள்­ளார்.

சீன வெளி­யு­றவு அமைச்­சர் வாங் யி உட­னான சந்­திப்­பில் டாக்­டர் விவி­யன் அவ்­வாறு கூறி­னார்.

அமெ­ரிக்க-சீன நல்­லு­ற­வின் அவ­சி­யத்தை வலி­யு­றுத்­திய அவர், இரு நாடு­களும் அவற்­றுக்கு இடை­யி­லான கருத்து வேறு­பா­டு­களை அமை­தி­யான முறை­யில் தீர்த்­துக்­கொள்­ளும் என்று நம்­பிக்கை தெரி­வித்­தார்.

ஆசி­யான் வெளி­யு­றவு அமைச்­சர்­கள் சந்­திப்­புக்கு இடையே, நேற்று முன்தினம் டாக்­டர் விவி­யன் அமைச்­சர் வாங்­கைச் சந்­தித்­த­தாக சிங்­கப்­பூர் வெளி­யு­றவு அமைச்சு தெரி­வித்­தது.

வட்­டார, அனைத்­து­லக நில­வ­ரங்­கள் குறித்­தும் தைவான் நீரி­ணை­யின் அண்மை நில­வ­ரம் குறித்­தும் இரு அமைச்­சர்­களும் கலந்­து­ரை­யா­டி­னர். சிங்­கப்­பூர் ‘ஒரே சீனா’ கொள்கை குறித்த தெளி­வான, உறு­தி­யான பார்­வை­யைக் கொண்­டி­ருப்­ப­தா­க­வும் தைவா­னின் சுதந்­தி­ரத்­துக்கு எதிர்ப்பு தெரி­விப்­ப­தா­க­வும் அமைச்சு குறிப்­பிட்­டது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!