மின்னிலக்கமயமாகும் உணவங்காடிக் கடைகள்

உணவு வகை­கள், ஆடை­கள், சுகா­தா­ரப் பொருள்­கள் போன்­ற­வற்றை விற்­கும் 'தஞ்­சோங் பகார் - தியோங் பாரு மார்க்­கெட்­பி­ளேஸ்' எனும் மின்சந்­தை­யைத் திறக்க 'லஸாடா' நிறு­வ­னம் திட்­ட­மிட்­டுள்­ளது. தியோங் பாரு சந்தை, தஞ்­சோங் பகார் சந்தை மற்­றும் உண­வங்­காடி ஆகி­ய­வற்­றில் உள்ள பொருள்­களை அந்த மின்சந்தையில் விற்­பது இலக்கு.

இவ்­விரு சந்­தை­க­ளி­லும் உள்ள 350க்கும் அதி­க­மான கடை­க­ளின் கடைக்­காரர்களைப் புதிய மின்­சந்தைக்கு நிய­மிப்­பது 'லஸாடா'வின் நோக்­கம்.

ஏற்­கெ­னவே இது­போல் சில சந்­தைகள், உண­வங்­கா­டி­க­ளுக்­கான மின்­சந்­தை­களை 'லஸாடா' தொடங்­கி­யி­ருக்­கிறது. ஒன் கம்­போங் கிளா­மிற்­கான மின்­சந்தை கடந்த ஏப்­ரல் மாதம் தொடங்­கப்­பட்­டது. மே மாதம் ராடின் மாஸ் தனித்­தொ­கு­திக்­கான மின்­சந்தை தொடங்கப்பட்டது.

குடி­யி­ருப்­புப் பகு­தி­களில் உள்ள நூற்­றுக்­க­ணக்­கான வர்த்­த­கர்­கள் இவற்­றில் இடம்­பெற்­றுள்­ள­னர்.

தஞ்­சோங் பகார் - தியோங் பாரு மின்சந்­தைக்­கான இணக்­கக் குறிப்பு பிர­த­மர் அலு­வ­லக அமைச்­சர் இந்­தி­ராணி ராஜா­வின் முன்­னி­லை­யில் தியோங் பாரு சந்தையில் நேற்று கையெ­ழுத்­தானது.

தஞ்­சோங் பகார், தியோங் பாரு சந்­தை­களில் விற்­கப்­படும் பல­வகையான பொருள்­களை பல்­வேறு வாடிக்­கை­யா­ளர்­க­ளி­டம் கொண்டு சேர்ப்­பதே இந்த முயற்­சி­யின் இலக்கு என்­றார் தஞ்­சோங் பகார் குழுத்­தொ­குதி அடித்தள அமைப்­பின் ஆலோ­சக­ரு­மான குமாரி இந்திராணி.

கொள்­ளை­நோய்ப் பர­வ­லால் பெரி­தும் பாதிக்­கப்­பட்ட சில வர்த்­த­கர்­கள் இந்த முயற்­சி­யின் மூலம் தாங்­கள் பயன­டை­யக்­கூ­டும் என்று தெரிவித்தனர். பல­ரும் இணை­யத்­தில் பொருள்­களை வாங்கி வரு­வது இதற்­குக் கார­ணம் என்று அவர்­கள் குறிப்­பிட்­ட­னர்.

புதிய மின்­சந்­தை வரும் அக்­டோ­பர் மாதத்­தி­லி­ருந்து தொடங்­கத் திட்­ட­மி­டப்­பட்­டுள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!