7,000 மின்திரைகளில் கடந்த கால தேசிய தினக் காட்சிகள்

சிங்­கப்­பூர் முழு­வ­தும் வெளிப்­புறங்­களில் இருக்­கின்ற 7,000க்கும் மேற்­பட்ட மின்­தி­ரை­களில் கடந்தகால தேசிய தின அணி­வகுப்­பு­களைக் காட்­டும் 200 படங்கள் திரை­யி­டப்­ப­டு­கின்­றன,

அத்­த­கைய மின்திரை­கள், 313@ சோமர்­செட், ஜெம், விவோ­சிட்டி, பல்­வேறு ஃபேர்பி­ரைஸ் கடைகள் போன்ற இடங்­களில் எடுப்­பாக அமைந்­துள்­ளன.

எம்­ஆர்டி வட்­டப்­பாதை, கிழக்கு-மேற்கு வழித்­த­டம், வடக்கு-தெற்கு வழித்­த­டம்­ ஆகி­ய­வற்­றில் அமைந்­துள்ள 92 எம்ஆர்டி நிலை­ய­ங்க­ளி­லும் படங்­க­ளைக் காண­லாம்.

வர­லாற்று முக்­கி­யத்­து­வம் வாய்ந்த அந்­தப் படங்­கள், எஸ்பிஎச் மீடியா டிரஸ்ட் நிறு­வனத்­தின் ஆவ­ணக் காப்­ப­கத்­தின் படங்­கள். முதல் தேசிய தின அணி­வ­குப்பு நடந்த 1966ஆம் ஆண்டு முதல் அவை கடந்தகால வர­லாற்­றைக் காட்­டு­கின்­றன.

அந்­தப் படங்­களை எடுத்­த­வர்­கள், தமிழ்­மு­ரசு, ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ், சாவ் பாவ், ஷின் மின் டெய்லி நியூஸ், பெரித்தா ஹரியான் ஆகி­ய­வற்­றைச் சேர்ந்த படக் கலை­ஞர்­கள்.

அந்­தக் கண்­காட்சி ஆகஸ்ட் 18ஆம் தேதி வரை நடக்கும்.

ஆகஸ்ட் 12ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 18ஆம் தேதி வரை வெளிப்­புற மின்திரை­கள் அனைத்­தும் இந்த ஆண்டு அணி­வகுப்பின் சிறப்­பு­க­ளைக் காட்­டும்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!