நெக்ஸ் கடைத்தொகுதியில் தண்ணீர் கசிவால் பாதிக்கப்பட்ட கடைகள் மீண்டும் திறப்பு

சிராங்­கூ­னில் உள்ள நெக்ஸ் கடைத்­தொ­கு­தி­யின் கீழ்த்­த­ளத்­தில் நேற்று முன்­தி­னம் தண்­ணீர்க் கசிவு ஏற்­பட்­ட­தால் அங்­குள்ள சில கடைகள் மூடப்­பட்­டி­ருந்­தன. கசிவு சரி­செய்­யப்­பட்­ட­வு­டன் அக்­க­டை­கள் நேற்று மீண்­டும் திறக்­கப்­பட்­டன.

ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்­திக்­குழு நேற்­றுக் காலை ‘ஃபுட் ரிபப்­ளிக்’ உண­வுக்­கூ­டத்­துக்கு எதிரே உள்ள அப்­ப­கு­திக்­குச் சென்று நில­வ­ரத்­தைக் கண்­ட­றிந்­தது.

முதல் தளத்­தில் தண்­ணீர்க் கசிவு ஏற்­பட்­டது குறித்து சனிக்­கி­ழமை மாலை 5.55 மணிக்கு தனக்­குத் தக­வல் அளிக்­கப்­பட்­ட­தாக நெக்ஸ் கடைத்­தொ­குதி பேச்­சா­ளர் ஒரு­வர் கூறி­னார்.

அன்­றி­ரவு 11 மணிக்­குள் இந்­தப் பிரச்­சினை சரி­செய்­யப்­பட்­டது. எனி­னும், மீதமிருந்த தண்­ணீர் தொடர்ந்து கசிந்­த­தால் கீழ்த்­த­ளங்­களில் உள்ள சில கடை­கள் பாதிக்­கப்­பட்­ட­தாக அப்­பேச்­சா­ளர் தெரி­வித்­தார்.

“எங்­க­ளு­டைய வாட­கை­தா­ரர்­கள் மற்­றும் வாடிக்­கை­யா­ளர்­க­ளின் பாது­காப்­புக்­காக, பிரச்­சினை முழு­மை­யாக சரி­செய்­யப்­ப­டும்­வரை செயல்­பா­டு­களை நிறுத்­தி­வைக்­கு­மாறு பாதிக்­கப்­பட்ட வாட­கை­தாரர்­களி­டம் தெரி­யப்­ப­டுத்­தி­னோம்,” என்­றார் அவர்.

நெக்ஸ் கடைத்­தொ­கு­தி­யின் இரண்­டாம் கீழ்த்­த­ளத்­தில் உள்ள ‘பெஸோ’ கடை­யில் வேலை செய்­யும் ஊழி­யர், தண்­ணீர்க் கசிவு கார­ண­மாக நேற்று முன்­தி­னம் கடை மூடப்­பட்­ட­தா­கக் கூறி­னார்.

“காலை 8.15 மணிக்கு நான் வேலைக்கு வந்­த­போது, என்­னால் கடைக்­குள் நுழைய முடி­ய­வில்லை. கடை­யைத் திறப்­பது ஆபத்­தா­னது என்று கடைத்­தொ­குதி நிர்­வா­கம் கூறி­யது,” என்­றார் பெயர் குறிப்­பிட விரும்­பாத அந்த ஊழி­யர்.

“நல்ல வேளை­யாக, கடைக்­குள் பாதிப்பு எது­வும் ஏற்­ப­ட­வில்லை. இன்று (நேற்று) கடை­யைத் திறக்க முடிந்­தது,” என்­றார் அவர்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!