‘தேசிய தின அணிவகுப்பில் பங்கேற்பது பெருமை, புதுமை, மறக்க முடியாத அனுபவம்’

மோன­லிசா

தேசிய தின அணி­வ­குப்­பில் சிங்­கப்­பூர் குடி­ய­ரசு ஆகா­யப் படை­யின் மரி­யாதைக் காவல் அணி பிரி­வில் பங்­கேற்­கி­றார் புவேந்­தி­ரன் சீனி­வாசன், 22.

"தொடக்­கப்­பள்ளி காலத்­தில் பார்­வை­யா­ள­ராக தேசிய தின அணி­வ­குப்பை முதல்­மு­றை­யாக நேரில் கண்­டேன். அதன் பிறகு இத்­தனை ஆண்­டு­கள் கழித்து இப்­போது அணி­வ­குப்­பி­ல் பங்­கேற்­கி­றேன். ஒரு மாலைப் பொழு­தில் இடம்­பெ­றும் தேசிய தின அணி­வகுப்­புக்­குப் பின்­னால் பல மாதங்­களாக பல­ரு­டைய கடும் உழைப்பு இருப்­பதை இப்­போ­து­தான் நான் புரிந்­து­கொண்­டேன். ஒவ்வொரு­வரின் பங்­க­ளிப்­பும் பாராட்­டிற்­கு­ரி­யது. அதில் நானும் ஒரு சிறிய பங்கு ஆற்­று­வதை எண்ணி பெரு­மி­தம் கொள்­கி­றேன்," என்று இவர் கூறி­னார்.

"ஈராண்­டு­க­ளுக்­குப் பிறகு நாட்டின் பிறந்­த­நாளை அனை­வரு­டனும் இணைந்து நேரில் கொண்­டா­டும் இந்த அணி­வ­குப்­பில் கலந்து­கொள்­வது என் வாழ்­நா­ளில் மறக்க முடி­யாத அனு­ப­வம். என்­னு­டைய வேலைப் பளு­விற்கு மத்­தி­யில் பயிற்­சிக்­கும் நேரம் ஒதுக்க ஒத்­து­ழைத்த என் மேற்­பார்­வை­யா­ளர்­க­ளுக்­கும் என் குழு­விற்­கும் நன்றி தெரி­விக்க விரும்­பு­கி­றேன்," என்­றும் இவர் சொன்­னார்.

தேசிய தின அணி­வ­குப்­பில், அணி­வ­குப்­புப் பிரி­வில் கலந்து­கொள்­கி­றார் முனி­ஷ­ரி­வின் கலைச்­செல்­வன், 22.

"ஒவ்­வொரு சனிக்­கி­ழ­மை­யும் ஏழு முதல் எட்டு மணி நேரம் வரை வெயி­லில் பயிற்சி மேற்­கொள்­வது ஆரம்­பத்­தில் மிக­வும் கடி­ன­மாக இருந்­த­போ­தி­லும் நாள­டை­வில் இப்பயிற்­சி­கள் உட­ல­ள­வி­லும் மன­த­ள­வி­லும் வலி­மை­யை­யும் ஒழுக்­கத்­தை­யும் எனக்­குள் ஏற்­ப­டுத்­தின. இது என் வாழ்­நா­ளில் என்­றென்­றும் பெருமை­கொள்­ளும் மறக்க முடி­யாத ஓர் அனு­ப­வம்," என்று முனிஷரி­வின் கூறி­னார்.

இப்­ப­யிற்­சி­க­ளின்­போது தமக்குப் புதிய நண்­பர்­கள் பலர் கிடைத்­த­தா­க­வும் ஒவ்­வொரு வார­மும் அவர்­க­ளு­டன் இணைந்து பயிற்சி செய்­வது சுவா­ரஸ்­ய­மான அனு­ப­வமாக அமைந்­தது என்­றும் இவர் கூறி­னார்.

ஒவ்­வோர் ஆண்­டும் தேசிய தின அணி­வ­குப்­பில் கடற்­படை, ஆகா­யப் படை, ராணு­வப் படை­களின் அணி­வ­குப்­பு­கள், முழு­மைத் தற்­காப்பு கண்­காட்சி, முழு­மைத் தற்­காப்பு திறன் விளக்­கக்­காட்சி ஆகி­யவை தமக்கு விருப்­ப­மான அங்­கங்­கள் என்­றும் முனி­ஷ­ரி­வின் பகிர்ந்­தார்.

இரண்­டாம் தலை­முறை சிங்­கப்­பூர் நிரந்­த­ர­வா­சி­யான அபி­செர் கைசெர் லஷ்­காரி, 19, தேசிய அணி­வ­குப்­பில் சிங்­கப்­பூர் குடிமைத் தற்­காப்­புப் படை­யின் அணி­வ­குப்பு அணி­யில் இடம்­பெ­று­கி­றார்.

"என்­னு­டைய குடும்­பத்­தில் முதன்­மு­த­லில் தேசிய சேவை புரி­யும் வாய்ப்பு எனக்­குக் கிடைத்­துள்­ளதை எண்ணி பெருமை கொள்­கி­றேன். தேசிய சேவையை முடித்த பின் விரை­வில் சிங்­கப்பூர் குடி­யு­ரி­மை­ பெற ஆவ­லோடு உள்­ளேன்," என்று அபிசெர் கூறி­னார்.

சிங்­கப்­பூர் குடி­மைத் தற்­காப்புப் படை­யில் தீய­ணைப்பு வீர­ராக சேவை­யாற்­றும் இவர், இந்த அணி­வ­குப்­பிற்­கான பயிற்­சி­யின்­போது கடும் வெயி­லில் நீண்ட நேரம் நிற்க வேண்­டி­யிருந்த போதி­லும் நண்­பர்­க­ளு­டன் இணைந்து கலந்­து­கொண்­டது மறக்க முடி­யாத ஓர் அனு­ப­வ­மாக இருந்­தது என்­றும் அபி­செர் கூறி­னார்.

சில சம­யங்­களில் 24 மணி நேர பணிக்­குப் பிற­கும் அணி­வ­குப்­புக்­கான பயிற்­சி­யில் பங்­கு­பெற வேண்­டி­யி­ருந்­தது. அத்­த­கைய சூழ­லி­லும் சரி­யாக நேரத்தை நிர்­வ­கித்து பணிக்­கும் பயிற்­சிக்­கும் இடையே தாம் ஓய்வு எடுத்­துக்­கொண்­ட­தாக அபிசெர் சொன்­னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!