மூன்றாண்டுகளில் ஆகப் பெரிய அணிவகுப்பு

இவ்­வாண்டு தேசிய தின அணி­வகுப்பை நேரில் கண்­டு­க­ளிக்க மரினா பே மிதக்­கும் மேடை அரங்­கம் பார்­வை­யா­ளர்­க­ளால் நிரம்பி வழிந்­தது.

பல மாத­கா­லப் பயிற்சி, ஒத்­தி­கை­யின் உச்­ச­கட்­ட­மாக ஆயி­ரக்­கணக்­கான பங்­கேற்­பா­ளர்­கள் பங்­கேற்ற அணி­வ­குப்­பைக் கண்டு பார்­வை­யா­ளர்­கள் மெய்­ம­றந்­த­னர்.

கொவிட்-19 பர­வல் கார­ண­மாக மூன்­றாண்­டு­க­ளுக்­குப் பிறகு பெரிய அள­வில் அணி­வ­குப்பு இடம்­பெற்­றது.

அணி­வ­குப்­பில் இடம்­பெற்ற முழு­மைத் தற்­காப்­புக் காட்­சி­யில் சில புதிய அங்­கங்­களும் முதன்­மு­றை­யாக அரங்­கே­றின.

நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் அரங்­கிற்கு வந்த பிறகு, செஞ்­சிங்­கங்­கள் வானில் இருந்து மிதக்­கும் மேடை­யில் குதித்து சாக­சம் புரிந்­தனர்.

சிங்­கப்­பூர் ஆகாயப் படை­யின் எஃப்-16 போர் விமா­னங்­கள் மரினா பே பகு­திக்கு மேலே வானில் பல­வித சாக­சம் புரிந்த பார்­வை­யா­ளர்­க­ளைப் பர­வ­சம் கொள்­ளச் செய்­தன.

சினூக் ஹெலி­காப்­ட­ரில் இருந்து கடற்­படை முக்­கு­ளிப்­பா­ளர்­கள் மரினா பே கடற்­ப­கு­தி­யில் குதித்து, தங்­க­ளது திற­மையை வெளிப்­படுத்­தி­னர்.

சிங்­கப்­பூர் ஆகாயப் படை­யின் புதிய சினூக் ஹெலி­காப்­ட­ரான சிஎச்-47 முதன்­மு­றை­யாக தேசிய தின அணி­வ­குப்­பில் பங்­கெ­டுத்­தது.

ஒன்­றி­ணைந்து சிங்­கப்­பூ­ரைப் பாது­காப்­போம் என்று பெய­ரி­டப்­பட்ட முழு­மைத் தற்­காப்­புக் காட்­சி­யின் இரண்­டா­வது அங்­க­மாக 'கடத்­தப்­பட்ட' பேருந்­தில் இருந்து பிணைக்­கை­தி­க­ளைப் பாது­காப்­பாக மீட்­கும் நட­வ­டிக்கை பார்­வை­யா­ளர்­கள்­முன் நிகழ்த்­திக் காட்­டப்­பட்டது.

தேசிய தின அணி­வ­குப்­பிற்கு இது புது அங்­கம்.

சிங்­கப்­பூர் ஆய­தப்­ப­டை­யின் சிறப்பு நட­வ­டிக்­கை­கள் பணிக்­குழு­வைச் சேர்ந்த அதிரடிப் படை­யினர், பிணைக்­கை­தி­களை மீட்­கும் நட­வடிக்­கை­களில் கள­மி­றங்­கி­னர்.

தீய­ணைப்பு, முத­லு­தவி, பயங்­க­ர­வா­தத் தடுப்பு நட­வ­டிக்­கை­கள் போன்ற அமை­திக்­கா­லத்­தின்­போது எதிர்­பா­ரா­மல் ஏற்­படும் நிகழ்­வு­களின்­போது சிங்­கப்­பூ­ரின் பல்­வேறு அமைப்­பு­களும் ஒன்­றி­ணைந்து அவற்றை எதிர்­கொள்­வதை எடுத்­துக்­காட்­டு­வ­தாக இந்த அங்­கம் அமைந்­தது.

சிங்­கப்­பூர்க் குடி­மைத் தற்­காப்­புப் படை­யின் 'ரெட் ரைனோ', சிங்­கப்­பூர் காவல்­து­றை­யின் அடுத்த தலை­முறை விரைவு நட­வ­டிக்கை கார்­கள் உள்­ளிட்ட வாக­னங்­கள் காட்­சிப்­ப­டுத்­தப்­பட்­டன.

சிங்­கப்­பூ­ரின் தரை, கடல் மற்­றும் ஆகாயப் படை­களின் முழு­மைத் தற்­காப்­புக் காட்­சி­கள் ஐந்­தாண்டு இடை­வெ­ளிக்­குப் பிறகு மீண்­டும் அரங்­கே­றின.

சிறு இயந்­தி­ரப் பட­கில் வந்த 'ஊடு­ரு­வல்­கா­ரர்­களை' போர்ப் பட­கில் நீரைக் கிழித்­த­படி விரைந்து சென்று கடற்­ப­டை­யி­னர் விரட்­டி­ அடித்­த­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!