செய்திக்கொத்து

அடுத்த அதிபர் தேர்தலில் ஜார்ஜ் இயோ போட்டியிடமாட்டார்

சிங்கப்பூரின் அடுத்த ஆண்டு அதிபர் தேர்தலில் தான் போட்டியிடப்போவதில்லை என முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஜார்ஜ் இயோ ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.

அவர், அடுத்த அதிபர் தேர்தலில் போட்டியிடக்கூடும் என்று அண்மையில் ஊகச்செய்திகள் அடிக்கடி இடம்பெற்றுவரும் வேளையில், சாவ் பாவ் செய்தித் தாளுக்கு அளித்த பேட்டியில் அவர் அத்தகைய செய்திகளை மறுத்துள்ளார்.

அதிபரானால் சொல்லிலும் செயலிலும் கட்டொழுங்குடன் இருந்துவரவேண்டிய தேவை கட்டாயமானதாகும். ஆனால் அப்படி கட்டுப்பட்டு இருக்காமல் சுதந்திரமாக இருக்கவே தான் விரும்புவதாக முன்னாள் அமைச்சர் ஜார்ஜ் இயோ தெரிவித்தார்.

திரு இயோ, 67, எழுதி இருக்கும் ஒரு புத்தகம் இந்த மாதப் பிற்பகுதியில் வெளியிடப்பட இருக்கிறது.

அது பற்றி கடந்த திங்கட்கிழமை பேட்டி அளித்தபோது அதிபர் தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என்று அவர் கூறினார்.

பள்ளிக்கூடங்களின் பழைய இடங்களில் வீடுகள்

அப்பர் சாங்கி, தேபான் கார்டன்ஸ் இடங்களில் உள்ள மூன்று முன்னாள் பள்ளிக்கூட வளாகங்களில் வீடுகள் கட்டப்பட இருக்கின்றன. சங்காட் சாங்கி தொடக்கப் பள்ளி மற்றும் உயர்நிலைப் பள்ளி, பாண்டான் தொடக்கப்பள்ளி ஆகியவற்றின் முன்னாள் இடங்களில் இடிப்புப் பணிகளை மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்டு இருக்கிறது.

அதன் தொடர்பில் ஆலோசனை தேவை என்று வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் தெரிவித்து இருக்கிறது.

கடந்த புதன்கிழமை வெளியிடப்பட்ட ஆவணங்கள் மூலம் இது தெரியவருகிறது.

ஆயுள் காப்புறுதி புதிய

சந்தா 1.9% குறைவு

சிங்கப்பூரில் இந்த ஆண்டின் முதல் பாதியில் பெறப்பட்ட ஆயுள் காப்புறுதி புதிய சந்தாத் தொகையாக $2.62 பில்லியன் பதியப்பட்டது. இது சென்ற ஆண்டின் இதே கால அளவை விட 1.9% குறைவு.

பெறப்பட்ட மொத்த வருடாந்திர சந்தா 15.1% குறைந்து $1.19 பில்லியமான இருந்தது. இருந்தாலும், தனி சந்தா தொடர்ந்து அதிகரித்தது. இந்த அதிகரிப்பு 12.5% ஆக இருந்தது. மொத்தம் பெறப்பட்ட சந்தா $1.44 பில்லியன்.

தனி சந்தா தொடர்ந்து வளர்ச்சி கண்டு வருகிறது. இது சிங்கப்பூரர்களிடையே தொடர்ந்து பிரபலமாக இருந்து வருகிறது என்று சிங்கப்பூர் ஆயுள் காப்புறுதி சங்கத்தின் தலைவர் கோர் ஹோக் செங் நேற்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

உலகப் பொருளியல் நிச்சயமில்லாமல் இருப்பது, வல்லரசுகளுக்கு இடையில் பதற்றம் நிலவுவது, கொவிட்-19 பாதிப்பு, பணவீக்கம் எல்லாம் இருந்தாலும் ஆயுள் காப்புறுதித் தொழில்துறை தொடர்ந்து மீள்திறனுடன் திகழ்கிறது. அது பாராட்டத்தக்க செயல்திறனைச் சாதித்து இருக்கிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!