வீதிகளில் படுத்துறங்குவோர் விகிதம் குறைந்தது

கொவிட்-19 நெருக்­க­டி­நி­லை­யின்­போது மற்ற நாடு­களில் வசிப்­பி­டம் இன்றி தவிப்­போர் எண்­ணிக்கை அதி­க­ரித்­த­ நிலையில், சிங்­கப்­பூ­ரில் அத்­த­கை­யோ­ரின் எண்­ணிக்கை கடந்த ஆண்டு சற்று குறைந்­தது. இருப்­பி­னும், வசிப்­பி­டம் இல்­லாது வீதி­களில் படுத்­து­றங்­கிய பலர் தற்­கா­லிக இருப்­பி­டங்­களில் தங்­கி­ய­தால் பொது இடங்­களில் அவர்­களை அவ்­வ­ள­வா­கப் பார்க்க முடி­யா­மல் போன­தா­க­வும் தெரி­விக்­கப்­படுகிறது.

வசிப்­பி­டம் இல்­லா­தோர் எண்­ணிக்கை கடந்த ஆண்டு 1,036ஆகப் பதி­வா­னது. 2019ஆம் ஆண்­டை­விட இது ஏழு விழுக்­காடு குறைவு.

சிங்­கப்­பூ­ரில் வசிப்­பி­டம் இன்றி தவிப்­போ­ரின் எண்­ணிக்­கை­யைக் கண்­டு­பி­டிக்க 2019ஆம் ஆண்­டில் முதல்முறை­யா­கக் கணக்­கெ­டுப்பு நடத்­தப்­பட்­டது.

கடந்த ஆண்டு இரண்­டா­வது கணக்­கெ­டுப்பு நடத்­தப்­பட்­டது. 2019ஆம் ஆண்­டு­டன் ஒப்­பி­டு­கை­யில், வசிப்­பி­டம் இல்­லா­மல் வீதி­களில் படுத்­து­றங்­கி­யோர் எண்­ணிக்கை கடந்த ஆண்டு 41 விழுக்­காடு சரிந்­தது. ஆனால், அதே கால­கட்­டத்­தில் தற்­கா­லிக வசிப்­பி­டங்­களில் வசிப்­போர் எண்­ணிக்கை 65லிருந்து 420ஆக அதி­க­ரித்­தது. லீ குவான் இயூ பொதுக் கொள்­கை ஆய்வுப் பள்­ளி­யின் மூத்த ஆய்­வா­ளர் டாக்­டர் இங் கோக் ஹோவின் தலை­மை­யில் இந்­தக் கணக்­கெ­டுப்பு நடத்­தப்­பட்­டது. கடந்த ஆண்டு பிப்­ர­வரி மாதத்­தி­லி­ருந்து ஏப்­ரல் மாதம் வரை 200 தொண்­டூ­ழி­யர்­க­ளின் உத­வி­யோடு ஆய்­வா­ளர் குழு, இந்த நட­வ­டிக்­கை­யில் இறங்­கி­யது.

வசிப்­பி­ட­மில்­லா­தோ­ருக்கு சமு­தாய, குடும்ப மேம்­பாட்டு அமைச்சு வழங்­கிய தற்­கா­லிக வசிப்­பி­டங்­களில் வசிப்­போ­ரின் எண்­ணிக்கை கடந்த ஆண்டு முதல்­மு­றை­யா­கக் கணக்கெடுப்பில் சேர்த்­துக்­கொள்­ளப்­பட்­டது.

இதற்­கி­டையே, சிங்­கப்­பூ­ரில் வசிப்­பி­டம் இல்­லா­தோ­ரில் இரு புதிய பிரி­வி­னர் இருப்­ப­தாக ஆய்­வில் தெரி­ய­வந்­துள்­ளது.

அவர்­களில் கொவிட்-19 நெருக்­க­டி­நிலை கார­ண­மாக வேலை இழந்து வாடகை செலுத்த முடி­யா­மல் வீதி­களில்

படுத்­து­றங்­கி­ யோ­ரும் அடங்­கு­வர்.

சில­ருக்கு உற­வி­னர்­கள் அல்­லது நண்­பர்­கள் தங்­கள் வீடு­களில் தங்க இடம் கொடுத்­தனர். ஆனால், கொவிட்-19 நெருக்­க­டி­நிலை கார­ண­மாக வீட்­டிற்கு வரக்­கூ­டிய விருந்­தி­னர்கள் எண்­ணிக்­கைக்கு வரம்பு விதிக்­கப்­பட்­ட­தால் அவர்­கள் அங்­கி­ருந்து வெளி­யேற வேண்­டிய நிலை ஏற்­பட்­ட­தா­க­ தெரி­ய­

வந்­துள்­ளது.

பாதிக்­கப்­பட்­டோ­ரில் 30 வய­தி­லி­ருந்து கிட்­டத்­தட்ட 80 வயது வரை­யி­லான ஆண்­களும் பெண்­களும் அடங்­கு­வர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!