வீவக, கொண்டோமினிய வீட்டு வாடகை ஏற்றம் கண்டது

வீட­மைப்பு வளர்ச்­சிக் கழக வீடு­கள், தனி­யார் அடுக்­கு­மாடி வீடு­கள் ஆகி­ய­வற்­றுக்­கான வாடகை கடந்த மாதம் தொடர்ந்து ஏற்­றம் கண்­டது.

தேவைக்கு ஏற்ப புதிய வீடு­கள் இன்­னும் கட்டி முடிக்­கப்­ப­டா­த­தால் வாடகை அதி­க­ரிப்பு தொட­ரும் என்று பகுப்­பாய்­வா­ளர்­கள் கூறு­கின்­ற­னர்.

முதிர்ச்­சி­ய­டைந்த, முதிர்ச்­சி­

ய­டை­யாத வீட­மைப்­புப் பேட்­டை­

க­ளில் அனைத்து வகை வீடு­

க­ளின் வாடகை உயர்ந்­தி­ருப்­ப­தாக வீவக தெரி­வித்­தது.

இருப்­பி­னும், ஜூன் மாதம் பதி­வான 2.3 விழுக்­காடு ஏற்­றத்­தைக் காட்­டி­லும் வீவக வீடு­க­ளின் வாடகை அதி­க­ரிப்பு கடந்த மாதம் 1.5 விழுக்­காடு பதி­வாகி மெது­வ­டைந்­தது என்று சொத்து இணை­ய­வா­சல்­கள் 99.co, எஸ்­ஆர்­எக்ஸ் ஆகி­யவை நேற்று தெரி­வித்­தன.

இதற்­கி­டையே, கொண்­டோ­மி­னி­ய வீடு­க­ளுக்­கான வாடகை கடந்த மாதம் 1.7 விழுக்­காடு

அதி­க­ரித்­தது.

அவற்­றின் வாடகை கடந்த ஜூன் மாதம் 2.1 விழுக்­காடு

ஏற்­றம் கண்­டது.

தொடர்ந்து 19 மாதங்­க­ளாக கொண்­டோ­மி­னிய வீடு­கள், வீவக வீடு­கள் ஆகி­ய­வற்­றின் வாடகை அதி­க­ரித்­துள்­ளது. இதுவே ஆக அதி­க­மான தொடர்ச்­சி­யான ஏற்­றம். தங்­கள் பீடிஓ வீடு­கள் தயா­ரா­கும் வரை சில தம்­ப­தி­கள் வீவக வீடு­களை வாட­கைக்கு எடுத்­து­இருப்­ப­தாக இஆர்ஏ சொத்து

முக­வை­யின் ஆய்வு, ஆலோ­ச­னைப் பிரி­வுத் தலை­வர் நிக்­க­லஸ் மாக் தெரி­வித்­தார்.

விநி­யோ­கச் சங்­கிலி தடைப்

பட்­டுள்­ள­தால் பீடிஓ வீடு­க­ளின்

கட்­டு­மா­னப் பணி நிறைவுறுவது தாம­தம் அடைந்­தி­ருப்­ப­தாக அவர் கூறி­னார்.

அதே சம­யத்­தில் கொவிட்-19 கட்­டுப்­பா­டு­கள் தளர்த்­தப்­பட்­டுள்­ள­தால் சிங்­கப்­பூ­ருக்கு வேலை அல்­லது கல்வி நிமித்­தம் வரும் வெளி­நாட்­ட­வர்­க­ளின் எண்­ணிக்கை அதி­க­ரித்­துள்­ளது.

இதன் விளை­வாக வாடகை வீடு­க­ளுக்­கான தேவை அதி­க­ரித்­துள்­ளது என்று திரு மாக் தெரி­வித்­தார்.

வீட்டை வாட­கைக்கு எடுக்­கும் பலர் வாடகை அதி­க­ரிப்பை ஏற்­றுக்­கொண்­டுள்­ள­தாக ஆரஞ்சுடீ அண்ட் டாய் சொத்து முக­வை­யின் ஆய்வு, பகுப்­பாய்­வுப் பிரி­வின் மூத்த துணை தலை­வர் கிறிஸ்­டின் சன் தெரி­வித்­தார்.

"சிங்­கப்­பூ­ரில் தேவைக்கு ஏற்ப போது­மான வீடு­கள் இல்லை என்­பது பல­ருக்­குப் புரி­கிறது. வாடகை வீடு­க­ளுக்­கான தேவை தொடர்ந்து அதி­க­ரிக்­கும்.

"இத­னால் வாடகை அதி­க­ரிப்­பைப் பலர் ஏற்­கின்­ற­னர். வெளி­நா­டு­க­ளி­லி­ருந்து சிங்­கப்­பூர் திரும்­பி­யுள்ள வெளி­நாட்­ட­வர்­க­ளுக்­கும் நிரந்­த­ர­வா­சி­க­ளுக்­கும் அதிக வீட­மைப்­புத் தெரி­வு­கள் இல்லை," என்­றார் திரு­வாட்டி சன்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!