மின்னிலக்கப் பிறப்புச் சான்றிதழில் புதிய விவரம்

வரும் செப்­டம்­பர் மாதம் முதல் தேதி­யி­லி­ருந்து புதி­தா­கப் பிறக்­கும் குழந்­தை­க­ளின் மின்­னி­லக்­கப் பிறப்­புச் சான்­றி­தழ்­களில் பெற்­றோ­ரின் 'டய­லெக்ட்' எனப்­படும் குறிப்­பிட்ட தாய்­மொழி விவ­ரங்­களும் சேர்க்­கப்­படும்.

இவ்­வாண்டு மே மாதம் 29ஆம் தேதி­யி­லி­ருந்து மின்­னிலக்­கப் பிறப்­புச் சான்­றி­தழ்­கள் வழங்­கப்­பட்டு வந்­தா­லும் இது­வரை அவற்­றில் அந்த விவ­ரங்­கள் இடம்­பெ­ற­வில்லை.

இந்­நி­லை­யில் மே 29 தொடங்கி ஆகஸ்ட் 31 வரை மின்­னி­லக்­கப் பிறப்­புச் சான்­றிதழ்­க­ளைப் பெற்­றுக்­கொண்ட பெற்­றோர்­, புதிய அம்­சத்­து­டன் அமைந்த சான்­றி­தழ்­களை மீண்­டும் செப்­டம்­பர் 1 முதல் பதி­விறக்­கம் செய்­ய­லாம் என்று குடி­நு­ழைவு, சோத­னைச் சாவடி ஆணை­யம் தெரி­வித்­துள்­ளது.

இதற்­குக் கூடு­தல் கட்­ட­ண­மும் செலுத்­தத் தேவை­யில்லை என்று கூறப்­பட்­டது.

இது தொடர்­பான மேல்­வி­வ­ரங்­கள் பின்­னர் தெரி­விக்­கப்­படும்.

புதிய மின்­னி­லக்­கப் பிறப்­புச் சான்­றி­த­ழில் பெற்­றோ­ரின் குறிப்­பிட்ட தாய்­மொழி விவ­ரங்­கள் இடம்­பெ­ற­வில்லை என்று பலர் கவலை தெரி­வித்­ததை அடுத்து இந்த மாற்­றம் செய்­யப்­ப­டு­கிறது.

"பெற்­றோ­ரின் குறிப்­பிட்ட தாய்­மொழி விவ­ரம் தொடர்­பான தக­வல்­கள் தொடர்ந்து ஆணை­யத்­தால் பதிவு செய்­யப்­பட்டு வரு­கிறது. இந்­தத் தக­வல்­கள் 'சிங்­பாஸ்' தளத்­தி­லும் உள்­ளன," என்று ஆணை­யம் தெரி­வித்­தது.

புதி­தா­கப் பிறந்த குழந்­தைக்­கான பதி­வைப் பெற்­றோர்­கள் இணையம் வாயி­லாக செய்­யும்­போது, இது­போன்ற தக­வல்­கள் பொது­வா­கவே திரட்­டப்­ப­டு­கின்­றன.

பெற்­றோ­ரின் தாய்­மொழி விவ­ரங்­கள் இடம்­பெ­றா­தது குறித்­துப் பல­ரும் அதி­ருப்தி தெரி­வித்­த­தைத் தாங்­கள் அறிந்­துள்­ள­தா­க­வும் அடுத்த மாதம் முதல் அந்த விவ­ரங்­கள் சான்­றி­த­ழில் சேர்க்­கப்­ப­ட­வுள்­ள­தா­க­வும் ஆணை­யம் குறிப்­பிட்­டது.

இதன்­படி தந்தை, தாய் இரு­வரின் தாய்­மொழி விவ­ரங்­களும் சேர்க்­கப்­படும்.

சேவை­களை மின்­னி­லக்­க­ம­ய­மாக்­கு­வதை நோக்­க­மா­கக் கொண்­டுள்ள அர­சாங்­கம், பிறப்­புச் சான்­றி­தழ்­களை மின்­னி­லக்க வடி­வில் வழங்­கத் தொடங்­கி­யது. அதை­அடுத்து, பெற்­றோ­ரின் தாய்­மொழி விவ­ரங்­கள் அதில் இடம்­பெ­றா­தது குறித்து பலர் கேள்வி எழுப்­பி­ய­தாக ஆணை­யம் கூறி­யது. கொள்­கைக்­கா­க­வும் இதர நிர்­வா­கத் தேவை­க­ளுக்­கா­க­வும் பெற்­றோர் பிறந்த நாடு, தாயா­ரின் முக­வரி போன்ற பல்­வேறு விவ­ரங்­கள் மின்­னி­லக்க வடி­வில் சேர்க்­கப்­ப­ட­வில்லை என்று ஆணை­யம் விளக்­க­ம­ளித்­தது.

இத­னால் பதி­வு­செய்­யும் செயல்­மு­றை­யும் எளி­மை­யா­கும் என்று ஆணை­யம் சுட்­டி­யது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!