நார்த்­லைட் பள்ளி, அசம்­ஷன் பாத்வே பள்ளி இரண்டிலும் சேரும் மாணவர்கள் குறைவு

தொடக்­கப்­பள்ளி இறு­தித் தேர்­வில் (பிஎஸ்­எல்இ) தோல்வி அடைந்து உயர்­நி­லைப் பள்­ளி­யில் சேர இய லாத மாண­வர்­க­ளுக்­கான மாற்றுப் பள்­ளிக்­கூ­ட­மாக இரண்டு சிறப்­புப் பள்­ளி­கள் ஏற்­ப­டுத்­தப்­பட்­டன.

அந்­தப் பள்­ளி­களில் முன்­னி­லும் குறை­வான மாண­வர்­களே சேர்­கிறார்­கள்.

பிறப்பு விகி­தம் குறை­வும் உயர்­நி­லைப் பள்­ளிக்­குத் தகு­தி ­பெ­று­வோர் முன்­னி­லும் அதி­க­மாக இருப்­ப­தும் இதற்­கான கார­ணங்­கள் என்­பது தெரியவந்­துள்­ளது.

நார்த்­லைட் பள்ளி, அசம்­ஷன் பாத்வே பள்ளி என்ற அந்த இரண்டு பள்­ளிக்­கூ­டங்­களும் 2007ஆம் ஆண்­டி­லும் 2009ஆம் ஆண்டிலும் ஏற்­ப­டுத்­தப்­பட்­டன.

தொடக்­கப்­பள்ளி இறு­தித் தேர்­வில் தேர்ச்சி பெறாத மாண­வர்­கள் அந்­தப் பள்­ளி­களில் சேர­லாம். அவை தொடங்­கப்­பட்ட பிறகு முதல் சில ஆண்­டு­களில் அவை இரண்டும் ஆண்­டுக்கு மொத்­த­மாக ஏறத்­தாழ 400 மாண­வர்­க­ளைச் சேர்த்­துக்­கொண்­டன.

தொடக்­கத்­தில் நார்த்­லைட் பள்ளி, இனி இட­மில்லை என்று மாண­வர்­க­ளைத் திருப்பிவிட்­டது.

ஆனால் இரு பள்­ளி­க­ளி­லும் கடந்த சில ஆண்­டு­க­ளாக சேரும் மாண­வர்­கள் எண்­ணிக்கை சீராகக் குறைந்து இருக்­கிறது.

இந்த ஆண்­டில் நார்த்­லைட் பள்ளி 185 பேரை­யும் அசம்­ஷன் பாத்வே பள்ளி 122 மாண­வர்­க­ளை­யும் சேர்த்­துக்­கொண்­ட­தாக கல்வி அமைச்சு தெரி­வித்­துள்­ளது.

இது பற்றி விளக்­கிய கல்வி அமைச்­சின் பேச்­சா­ளர், மக்­கள் தொகை போக்கு கார­ண­மாக ஒட்டு­மொத்­த­மாக மாண­வர்­க­ளின் எண்ணிக்கை குறை­வது ஒரு காரணம் என்­றார்.

உயர்­நி­லைப் பள்ளிக்குத் தகுதி­பெ­றும் மாண­வர்­க­ளின் விகி­தாச்­சா­ர­மும் அதி­க­ரித்து இருக்­கிறது என்று அவர் தெரி­வித்­தார்.

கடந்த 2011ல் தொடக்­கப்­பள்ளி இறு­தித் தேர்வு எழு­திய மாண­வர்­களில் 97.4% மாணவர்கள் உயர்­நி­லைப் பள்ளிக்குத் தகுதி பெற்­ற­னர். இந்த விகி­தம் 2016ல் 98.4% ஆகக்கூடியது.

கால­வோட்­டத்­தில், பல­த­ரப்­பட்ட மாண­வர்­க­ளுக்கு இட­ம­ளிக்­கும் நோக்­கத்­தில் மாண­வர்­கள் சேர்க்கைக்­கான நிபந்­த­னை­களும் விரி­வு­ப­டுத்­தப்­பட்டு இருக்­கின்­றன.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!