தொழில்முனைப்புக் கல்விக்கு இரண்டு புதிய விருதுகள்

சிங்­கப்­பூர் நிர்­வா­கப் பல்­க­லைக்­க­ழ­கம் தொழில்­மு­னைப்­புத் திறன்­களை வளர்த்­துக்­கொள்­ளக் கைகொ­டுக்­கும் இரண்டு புதிய திட்­டங்­களை நேற்று அறி­வித்­தது.

‘டோல­ரம்’ புத்­தாக்க, தொழில்­மு­னைப்பு அற­நி­தி­யின் ஆத­ர­வில் பல்­க­லைக்­க­ழ­கம் இந்­தப் புதிய விரு­துக் கல்­வித் திட்­டங்­களை அறி­வித்­துள்­ளது.

பட்­டக் கல்வி, பட்ட மேற்­ப­டிப்பு என இரு­த­ரப்பு மாண­வர்­களும் இதற்­குத் தகுதி பெறு­வர். மாண­வர்­க­ளின் தொழில்­மு­னைப்­புத் திறன்­களை மேம்­ப­டுத்­திக் கொள்­ள­வும், அனைத்­து­லக வர்த்­த­கப் போக்கு குறித்த புரி­த­லுக்­கும் இது உத­வும்.

சிங்­கப்­பூர் பெரு­நி­று­வ­ன­மான ‘டோல­ரம்’, சிங்­கப்­பூர் நிர்­வா­கப் பல்­க­லைக்­க­ழ­கம் இரண்­டும் சென்ற ஆண்டு புதிய அற­நி­தியை நிறு­வின. நிறு­வ­னம் இதற்கு 600,000 வெள்ளி வழங்­கி­யது. தற்­போது அறி­விக்­கப்­பட்­டி­ருக்­கும் இரண்டு விரு­து­க­ளுக்­கும் மொத்­தம் 32 மாண­வர்­கள் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்­ட­தா­கப் பல்­க­லைக்­க­ழ­கம் தெரி­வித்­தது.

சிங்­கப்­பூர் நிர்­வா­கப் பல்­க­லைக்­க­ழ­கத்­தில் எந்­தத் துறை­யில் பயி­லும் மாண­வர்­களும் இதற்­குத் தகுதி பெறு­வர் என்­றும் அவர்­கள் முழு­நேர மாண­வர்­க­ளாக இருப்­பது அவ­சி­யம் என்­றும் கூறப்­பட்­டது.

பல்­க­லைக்­க­ழ­கத்­தால் அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட வெளி­நாட்டு நிறு­வ­னங்­களில் தொழில்­மு­றைப் பயிற்சி எடுத்­துக்­கொள்ள இந்த விரு­து­களில் ஒன்று வகை­செய்­யும். அதற்­கான முழுச் செல­வும் ஏற்­றுக்­கொள்­ளப்­படும். இதற்கு 12 பேர் தேர்­வு­செய்­யப்­பட்­ட­னர்.

மற்­றொரு விரு­தின்­கீழ் 20 மாண­வர்­க­ளுக்கு தலா ஐயா­யி­ரம் வெள்ளி வழங்­கப்­படும். பள்ளி விடுமுறை நாள்களில் மாணவர்கள் தங்கள் சொந்த நிறுவனத்தைத் தொடங்கி நடத்த இந்த விருது கைகொடுக்கிறது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!