செய்திக்கொத்து

மகளிர்க்காக உருமாறும் வேலைகள்

காலம் காலமாக ஆண்களையே சார்ந்திருக்கும் தளவாடத் துறையில் அதிக பெண்களை ஈர்க்கும் வண்ணம் வேலை களும் அதற்கான ஏற்பாடுகளும் பெண்களுக்கு ஏற்ற வகை யில் மறுவடிவம் காண உள்ளன. இதனை நோக்கமாகக் கொண்டு, இங்குள்ள 10 தளவாட மற்றும் விநியோகத் தொடர் துறை நிறுவனங்கள் தேசிய தொழிற்சங்க காங்கி ரசுடன் (என்டியுசி) புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் நேற்று கையெழுத்திட்டன. இந்த நிறுவனங்களில் 650க்கும் மேற்பட்டவர்கள் வேலை செய்கிறார்கள்.

பிஎம்டபிள்யூ சேவை நிலையம் மூடல்

பிஎம்டபிள்யூ கார்களுக்கான அங்கீகரிக்கப்பட்ட சேவை நிலையங்களில் ஒன்று 'பிஐஎஸ் (BIS) ஆட்டோமோபைல்ஸ்'. இம்மாதம் 31ஆம் தேதியுடன் இந்த நிலையம் தனது சேவை களை நிறுத்திக்கொள்ளப் போவதாக அறிவித்து உள்ளது. இதன் சேவைக்கான குத்தகை காலம் ஆண்டிறுதி வரையில் உள்ளபோதிலும் இந்த மாதமே சேவைகளை அது மீட்டுக் கொள்கிறது. 30 தேபான் கார்டன்ஸ் கிரசெண்ட் என்னும் முகவரியில் செயல்பட்டு வரும் இந்நிலையம் பிஎம்டபிள்யூ மற்றும் பிஎம்டபிள்யூ எம் ஆகிய கார்களுக்கான சேவை நிலையமாக கடந்த 2019ஆம் ஆண்டு நிய மிக்கப்பட்டது. இது தனது கதவுகளை மூடினாலும் பெர்ஃபார்மன்ஸ் மோட்டார்ஸ், பெர்ஃபார்மன்ஸ் மூனிக் ஆட்டோஸ் ஆகிய வற்றால் இயக்கப்படும் இதர மூன்று பிஎம்டபிள்யூ சேவை நிலையங்கள் தொடர்ந்து சேவையில் இருக்கும். அலெக் சாண்ட்ரா ரோட்டில் இரண்டும் கம்போங் அராங் ரோட்டில் ஒன்றும் அந்த சேவை நிலையங்கள் உள்ளன. இந்நிலையில் புதிய பிஎம்டபிள்யூ விற்பனையாளராக அறிவிக்கப்பட்டுள்ள யூரோகார்ஸ் ஆட்டோ நிறுவனம் வரும் அக்டோபர் மாதம் தனது சேவையைத் தொடங்க உள்ளது. அலெக்சாண்ட்ரா ரோட்டின் இரு சேவை நிலையங்களில் இருந்து நடை தூரத்தில் உள்ள லெங் கீ ரோட்டில் இந்தப் புதிய நிலையம் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஊழியர் சம்பளம் கூடினாலும்

புதிய செலவுகள் வரலாம்

சில்லறை வர்த்தகத் துறையைச் சேர்ந்த உள்ளூர் ஊழியர் களுக்கு அறிவிக்கப்பட்டு இருக்கும் சம்பள உயர்வை வர்த்தகச் சங்கங்கள் வரவேற்றுள்ளன. அதேநேரம் வர்த்தக நடைமுறைச் சூழல் சவால்மிக்கதாக மாறிவருவதால் அந்த ஊழியர்கள் கூடுதல் செலவுகளைச் சந்திக்கும் நிலை வரலாம் என்றும் அவை கூறியுள்ளன. சில்லறை வர்த்தகத் துறையின் உள்ளூர் ஊழியர்கள் அடுத்த மூன்றாண்டு களுக்கு 8.4% முதல் 8.5% வரையிலான வருடாந்திர சம்பள உயர்வை பெறுவதற்கான பரிந்துரையை சில்லறை வர்த்தகத் துறைக்கான முத்தரப்புக் குழுமம் நேற்று முன்தினம் அறி வித்தது. இந்த சம்பள உயர்வு பகுதிநேர ஊழியர்களை ஈர்க்கவும் சில்லறை வர்த்தகத் துறையின் ஆள்பற்றாக் குறையைச் சமாளிக்கவும் உதவும் என்று சிங்கப்பூர் தேசிய முதலாளிகள் சம்மேளனத்தின் நிர்வாக இயக்குநர் சிம் கிம் குவான் தெரிவித்துள்ளார். இருப்பினும், பணவீக்கம் போன்ற சவால்களை எதிர்நோக்கி வரும் நிறுவனங்களின் வர்த்தகச் செலவுகள் அதிகரிக்கலாம் என்றும் இந்தக் கூடுதல் செலவு களை பயனீட்டாளர்கள் மீது நிறுவனங்கள் சுமத்தக்கூடும் என்றும் அவர் கூறினார். அதேநேரம், படிப்படியாக உயர்த்தப்படும் சம்பளத்துக்கான அரசாங்கத்தின் உதவி நடவடிக்கைகள் சம்பள உயர்வின் தாக்கதைத் தணிக்க உத வும் என்று சிங்கப்பூர் சில்லறை வர்த்தகச் சங்கம் கூறியது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!