ஆர்ச்சர்ட் டவர்ஸ் சண்டை; மூவர் மீது குற்றச்சாட்டு

ஆர்ச்­சர்ட் டவர்­சுக்கு வெளியே கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை அதி­காலை நிகழ்ந்த சண்டை தொடர்­பாக கைது செய்­யப்­பட்ட மூவர் மீது கல­வ­ரத்­தில் ஈடு­பட்­ட­தாக நேற்று குற்­றம் சுமத்­தப்­பட்­டது.

30 வயது அப்­துல் ஹக்­கிம் ஜமில், 26 வயது முகம்­மது யுஸ்‌ரி ராம்லி, 22 வயது முகம்­மது ஃபிக்ரி ஜுனாய்டி ஆகி­யோர் மீது குற்­றம் சாட்­டப்­பட்­டுள்­ளது.

மூவ­ரும் விசா­ர­ணைக் காவ­லில் வைக்­கப்­பட்­டுள்­ள­னர். அவர்­கள் அனை­வ­ரும் இம்­மா­தம் 23ஆம் தேதி­யன்று நீதி­மன்­றத்­தில் முன்­னி­லைப்­ப­டுத்­தப்­ப­டு­வார்­கள்.

34 வயது முகம்­மது ஃபட்ஸ்லி ஜுனாய்­டி­யும் 29 வயது முகம்­மது ஃபயிஸ் ஜுனாய்­டி­யும் சண்­டை­யில் ஈடு­பட்­ட­தா­கக் கூறப்­ப­டு­கிறது. ஆனால் அவர்­கள் மீது நேற்று குற்­றம் சுமத்­தப்­ப­ட­வில்லை.

இரண்டு ஆட­வர்­களை இரு­பது பேர் கொண்ட கும்­பல் தாக்­கு­வ­தைக் காட்­டும் 14 வினாடி காணொளி வாட்ஸ்­அப்பில் வலம் வந்­தது.

சம்­ப­வம் குறித்து கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை அதி­காலை சுமார் 5.15 மணி அள­வில் தக­வல் கிடைத்­த­தாக காவல்­துறை தெரி­வித்­தது.

சண்டை குறித்து அதி­கா­ரி­கள் விசா­ரணை நடத்­தி­னர். கண்­கா­ணிப்பு கேம­ராக்­களில் பதி­வான காட்­சி­க­ளைப் பயன்­ப­டுத்தி சண்­டை­யில் ஈடு­பட்­ட­தாக நம்­பப்­படும் மூவர் அடை­யா­ளம் காணப்­பட்­ட­னர்.

தாக்­கப்­பட்டு காய­ம­டைந்த இரு ஆட­வர்­க­ளை­யும் அதி­கா­ரி­கள் அடை­யா­ளம் கண்­டு­விட்­ட­தாக தெரி­விக்­கப்­பட்­டது. இரு­வ­ரும் 20 வய­துக்­கும் 30 வய­துக்­கும் இடைப்­பட்­ட­வர்­கள்.

சம்­பவ இடத்­தைக் காவல்­

து­றை­யி­னர் சென்­ற­டை­வ­தற்கு முன்பே சண்­டை­யில் ஈடு­பட்ட அனை­வ­ரும் தப்பி ஓடி­னர். ஆனால் சண்டை நிகழ்ந்த இடத்­தில் காவல்­து­றை­யால் பொருத்­தப்­பட்ட கேமரா அங்கு நடந்­த­வற்­றைப் பதிவு செய்­தது.

ஆர்ச்­சர்ட் டவர்­சில் சட்ட ஒழுங்கு தொடர்ந்து அக்­க­றைக்­கு­ரி­ய­தாக இருப்­ப­தா­க­வும் கடந்த பல ஆண்­டு­க­ளாக நிலைமை மேம்­ப­ட­வில்லை என்­றும் காவல்­துறை தெரி­வித்­தது.

அந்த வட்­டா­ரத்­தில் உள்ள குடி­யி­ருப்­பா­ளர்­கள் பலர் தங்­கள் பாது­காப்பு குறித்து அக்­கறை தெரி­வித்து காவல்­து­றை­யி­டம் புகார் அளித்­தி­ருப்­ப­தா­க­வும் தெரி­விக்­கப்­பட்­டது.

ஆர்ச்­சர்ட் டவர்­சில் பல மது­பா­னக் கூடங்­கள், இரவு விடு­தி­கள் இருப்­ப­தால் விப­சா­ரம், சண்டை போன்ற பல பிரச்­சி­னை­கள் தொடர்ந்து இருப்­ப­தைக் குடி­யி­ருப்­பா­ளர்­கள் சுட்­டிக்­காட்­டி­யுள்­ள­னர். கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை நடந்த சண்டை தொடர்­பாக விசா­ரணை நடை­பெ­று­கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!