மரப்பலகையைத் தீயிலிருந்து பாதுகாக்கும் பிசின் பூச்சு

மரப்­ப­லகை தீப்­பி­டித்­துக் கொள்­வ­தைத் தடுக்­கும் புதிய வழி­முறை நன்­யாங் தொழில்­நுட்­பப் பக்­க­லைக்­க­ழக ஆய்­வா­ளர்­கள் கண்­டு­பி­டித்­துள்­ள­னர். மரப்­ப­லகை மீது பிசி­னால் ஆன பூச்சை பூசும்­போது தீ பற்­றா­மல் பாது­காக்­கிறது. நன்­யாங் தொழில்­நுட்­பப் பல்­கலை ஆய்­வா­ளர்­கள் நேற்று அதைச் செய்து காட்­டி­னர்.

பிசின் பூசப்­பட்ட மரப்­ப­லகை, பூசப்படாத மரப்­ப­லகை இரண்­டின் மீதும் 800 டிகிரி செல்­சி­யஸ் வெப்­ப­முள்ள தீப்­பற்­றும் இயந்­தி­ரம் காட்­டப்­பட்­டது.

அதில் பிசின் பூசப்­பட்ட மரப்­ ப­லகை தீப்­பி­டித்­துக் கொண்டு கரு­கி­யது. மற்ற பல­கை­யில் அடிக்­கப்­பட்ட பூச்சு நுரை­யா­கப் பொங்கி அது தீப்­பற்­றா­மல் பாது­காத்­தது.

ஆய்­வா­ளர்­கள் உரு­வாக்­கிய பூச்சு, 75 மைக்­ரான் அளவு தடி­மன் கொண்­டது. அதா­வது ஒரு காகி­தத் தாளின் தடி­ம­னுக்கு அது சம­மா­கும்.

இதை பூசி இரவு வைத்­தி­ருந்­தால், மரப்­ப­ல­கை­யில் பிசின் பூச்சு ஒட்டி அதைப் பாது­காக்­கும். பலகை பார்ப்­ப­தற்கு சற்று பள­ப­ளப்­பாக இருக்­குமே தவிர அதில் வேறு எந்த வேறு­பா­டும் தெரி­யாது.

300 டிகிரி செல்­சி­யஸ் வெப்­பத்­தில் பிசின் பூச்­சின் தடி­மன் 100 மடங்கு வரை பெரு­கும் என்­றும் இது மரப்­ப­லகை தீப்­பற்­றா­மல் பாது­காக்­கிறது என்­றும் இணைப் பேரா­சி­ரி­யர் அர­விந்த் தாசரி கூறி­னார். இவர் நன்­யாங் தொழில்­நுட்­பப் பல்­க­லைக்­க­ழ­கத்­தின் மூலப்­பொ­ருள் அறி­வி­யல் பொறி­யி­யல் துறை­யைச் சேர்ந்­த­வர்.

"நீர் படி­வது, வெப்­பத்­தால் அல்­லது கரை­யா­னால் அரித்­துப் போவது போன்­ற­வற்­றி­லி­ருந்து பாது­காக்­கும் வெளிப்­பூச்சே பெரும்­பா­லான மரப்­ப­ல­கை­க­ளுக்­குப் பூசப் ­ப­டு­கிறது. இவை அதிக வெப்­பத்­தைத் தாங்­கு­வ­தில்லை," என்­றார் இணைப் பேரா­சி­ரி­யர் அர­விந்த்.

தற்­போது மரப்­ப­ல­கை­க­ளைத் தீயி­லி­ருந்து பாது­காக்­கும் மற்ற வகைப் பூச்­சு­க­ளால் மரத்­தின் இயற்­கை­யான தோற்­றம் மாறும்.

மேலும், அவற்­றுக்­கான செலவு அதி­கம். அவை எரிந்­தால் காற்றை மாசு­ படுத்­தும் வாயுக்­கள் வெளி­யா­கும்.

"நன்­யாங் தொழில்­நுட்­பப் பல்­கலை ஆய்­வா­ளர்­கள் உரு­வாக்­கிய மேற்­பூச்­சால், கட்­ட­டங்­க­ளின் அடிப் ­ப­டைக் கட்­டு­மா­னத்­தில் மரத்தை அதி­கம் பயன்­ப­டுத்­தும் சாத்­தி­யம் கூடு­கிறது. மேலும், இது பரு­வ­நிலை மாற்­றுத்­துக்கு எதி­ரான முக்­கிய படி," என்று வென்­ச­ரர் டிம்­பர்­வொர்க் எனும் கட்­டட வடி­வ­மைப்பு நிறு­வ­னத்­தின் நிர்­வாக இயக்­கு­நர் கெவின் ஹில் கூறி­னார்.

மரம் நீடித்த நிலைத்­தன்மை உள்ள கட்­டு­மான மூலப் பொருள் என்­றார் திரு ஹில். தேவை அதி­க­ரித்­தால், வெட்­டும் மரங்­களை ஈடு­கட்ட கூடு­தல் மரங்­களை நட­லாம் என்­றும் இத­னால் கரி­ய­மில வாயு வெளி­யேற்­றத்தை சமன்­செய்­ய­லாம் என்­றும் திரு ஹில் குறிப்­பிட்­டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!