செய்திக்கொத்து

சிங்கப்பூர் பங்குச் சந்தையின்

அடுத்த தலைவர் நியமிக்கப்பட்டார்

சிங்கப்பூர் பங்குச் சந்தை தனது தற்போதைய தலைவர் குவா சொங் செங் வரும் டிசம்பர் 31ஆம் தேதி பதவியிலிருந்து விலகுவார் என்று கூறியுள்ளது. வரும் ஜனவரி ஒன்றாம் தேதி, கோ பூன் ஹுவீ (படம்) தலைவர் பொறுப்பை ஏற்பார்.

திரு கோ கடந்த மார்ச் 15ஆம் தேதி சிங்கப்பூர் பங்குச் சந்தையின் இயக்குநர் சபையில் சேர்த்துக் கொள்ளப்பட்டார்.

திரு கோ, பல நிறுவனங்களில் உயர் அதிகாரியாகவும் தொழில்முனைவராகவும் இருந்துள்ளார். ஏஜிலன்ட் டெக்னாலஜீஸ், டிபிஎஸ் வங்கி, சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், சிங்டெல், வுத்தெலாம் குழுமம் போன்ற உள்நாட்டு வெளிநாட்டு நிறுவனங்களில் தலைவராக அல்லது அவற்றின் இயக்குநர் சபை உறுப்பினராக இருந்தவர்.

"உள்நாட்டு, வெளிநாட்டு நிதி அமைப்பில் நன்கு அங்கீகரிக்கப்பட்ட அமைப்பான சிங்கப்பூர் பங்குச் சந்தையின் அடுத்த தலைவராக பொறுப்பு வகிக்கும் வாய்ப்புக்கு நன்றி," என்று திரு கோ கூறினார்.

கடைத்தொகுதியில் முகக்கவசம் அணியாதவருக்கு அபராதம்

பொது இடத்தில் முகக்கவசம் அணிவது கட்டாயம் என்ற விதிமுறை நடப்பில் இருந்தபோது பலமுறை அதை அணிய மறுத்த பிரிட்டிஷ் நாட்டவருக்கு $8,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மோக்ரிட்ஜ் ஃபிலிப் ரிச்சர்ட் எனும் அந்த நபர், கொவிட்-19 விதிமுறைகளை மீறிய ஒரு குற்றச்சாட்டை நேற்று ஒப்புக்கொண்டார். அவர் சிங்கப்பூர் நிரந்தரவாசியும் ஆவார்.

சிட்டி ஸ்குவேர் கடைத்தொகுதியில் கடந்த ஆண்டு மே 16ஆம் தேதி ரிச்சர்ட் முகக்கவசத்தை அணிய மறுத்தார்.

அங்குள்ள ஓர் உணவகத்தில் காவல்துறையினர் அவரை அணுகி முகக்கவசம் அணியச் சொன்னபோதும், அதை ரிச்சர்ட் கேட்க மறுத்தார். பதிலுக்கு அவர்களைக் கேள்வி கேட்டுவிட்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்தார்.

மேலும் 2020 நவம்பரில் செங்காங் எம்ஆர்டி ரயில் நிலையத்திலும் அதே ஆண்டு டிசம்பரில் சிராங்கூன் எம்ஆர்டி நிலையத்திலும் ரிச்சர்ட் முகக்கவசம் அணிய மறுத்தார் என்று நீதிமன்றத்தில் கூறப்பட்டது.

அல்ஜுனிட்-ஹவ்காங் நகர

மன்றத்தின் புதிய துணைத் தலைவர்

பாட்டாளி கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரான ஃபைசல் மனாப், அல்ஜுனிட்-ஹவ்காங் நகரமன்றத்தின் துணைத் தலைவர் பதவியிலிருந்து விலகியுள்ளார்.

அவருக்கு பதிலாக அந்தக் குழுத்தொகுதிக்கான மற்றொரு மன்ற உறுப்பினரான திரு லியோன் பெரேரா துணைத் தலைவர் பதவியை ஏற்பார்.

அதிகமான நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தலைமைத்துவ ஆற்றலை வளர்ப்பதற்காக அந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று அல்ஜுனிட்-ஹவ்காங் நகரமன்றம் தெரிவித்தது. ஜூலை 31ஆம் தேதி மாற்றம் நடப்புக்கு வந்ததாக ஆகஸ்ட் 15ஆம் 16ஆம் தேதிகளில் வெளியான அரசிதழ்களில் தெரிவிக்கப்பட்டது.

மேலும், அல்ஜுனிட் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஜெரல்ட் கியாம், நகரமன்றத்தின் மற்றொரு துணைத் தலைவராக மீண்டும் நியமிக்கப்பட்டார். கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் அவர் அப்பொறுப்பை வகிக்கிறார்.

மின்னிலக்க நாணய நிறுவனத்துக்கு

முன்னாள் அரசாங்க ஊழியர் தலைவர்

சிங்கப்பூரைத் தலைமையகமாகக் கொண்டு செயல்படும் மின்னிலக்க நாணய நிறுவனமான கிரிப்டோ.காம், இங்குள்ள அதன் அலுவலகத்தின் பொது மேலாளராக முன்னாள் அரசாங்க உயர் அதிகாரி ஒருவரை நியமித்துள்ளது.

உலகமெங்கும் 50 மில்லியன் வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது கிரிப்டோ.காம் நிறுவனம். மின்னியல் கட்டண வில்லைச் சேவைகளை வழங்குவதற்கு, சிங்கப்பூர் நாணய ஆணையம் அந்நிறுவனத்துக்கு இவ்வாண்டு முற்பகுதியில் ஒப்புதல் வழங்கியது.

திரு சின் டா ஆங், பொருளியல் வளர்ச்சிக் கழகம், எண்டர்பிரைஸ் சிங்கப்பூர் அமைப்பு, தகவல்தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையம் ஆகியவற்றின் கூட்டு அலுவலகமான மின்னிலக்கத் தொழில்துறை சிங்கப்பூர் அமைப்புக்கு தலைமை வகித்தவர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!