இந்தோனீசியாவுடன் ஒத்துழைப்பு; அறநிறுவனம் கௌரவிப்பு

இரு­நாட்டு நல்­லு­றவை வலுப்­ப­டுத்­தும் இலக்­கு­டன் இந்­தோ­னீ­சி­யா

­வு­டன் கடந்த 30 ஆண்­டு­க­ளாக ஒத்­து­ழைத்து வரும் சிங்­கப்­பூர் அனைத்­து­லக அற­நி­று­வ­னம் கௌர­விக்­கப்­பட்­டுள்­ளது.

இந்த லாப நோக்­க­மற்ற அமைப்­புக்கு சாட்ஸ்­வொர்த் சாலை­யில் உள்ள இந்­தோ­னீ­சி­யத் தூத­ர­கத்­தில் சிங்­கப்­பூ­ருக்­கான இந்­தோ­னீ­சி­யத் தூதர் சூர்யோ பிர­தோமோ அடி­நாட்டா விருதை வழங்­கி­னார்.

தனது 77வது சுதந்­தி­ர தினத்தை இந்­தோ­னீ­சியா நேற்று கொண்­

டா­டி­யது. அதனை முன்­னிட்டு இந்த விருது வழங்­கும் நிகழ்ச்சி நடை­பெற்­றது.

சிங்­கப்­பூ­ருக்­கும் இந்­தோ­னீ­சி­யா­வுக்­கும் இடையே உள்ள நல்­லு­ற­வை­யும் புரிந்­து­ணர்­வை­யும் வலுப்­ப­டுத்­தும் தனி­ந­பர்­கள் அல்­லது அமைப்­பு­க­ளுக்கு இந்த அடி­நாட்டா விருது வழங்­கப்­ப­டு­கிறது. அடி­நாட்டா விருது விழா

ஆண்­டு­தோ­றும் நடத்­தப்­ப­டு­கிறது.

1992ஆம் ஆண்டு முதல்

இந்­தோ­னீ­சி­யா­வில் உள்ள பல்­வேறு இடங்­களில் இருக்கும் தனி­ந­பர்­கள், அமைப்­பு­க­ளு­டன் அற­நி­று­

வ­னம் இணைந்து செயல்­பட்டு வரு­கிறது. இந்­தோ­னீ­சி­யத் தலை­ந­கர் ஜகார்த்தா, பண்­டோங் ஆகிய நக­ரங்­களில் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்ட சுகா­தா­ரப் பரா­ம­ரிப்பு, கல்வி, தொழில்­மு­னைப்பு, கலை­கள், கலா­சா­ரம் ஆகி­யவை தொடர்­பான

திட்­டங்­கள் இதில் அடங்­கும்.

இந்­தோ­னீ­சி­யா­வின் சுகா­தா­ரப் பரா­ம­ரிப்பு ஊழி­யர்­கள், சிறப்­புக் கல்வி ஆசி­ரி­யர்­கள் ஆகி­யோ­ருக்­குப் பயிற்சி அளிக்­கும் திட்­டங்­

க­ளை­யும் அற­நி­று­வ­னம் நடத்­தி

­உள்­ளது என்­பது குறிப்­பி­டத்­

தக்­கது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!