முன்னாள் மனைவியின் வீட்டை நோக்கி எரிபொருள் குண்டு வீசிய ஆடவருக்குச் சிறை

முன்­னாள் மனை­வி­யின் வீட்­டைக் குறி­வைத்து எரி­பொ­ருள் குண்டு வீசி சேதம் விளை­வித்த ஆட­

வ­ருக்கு ஒன்­பது மாதச் சிறைத் தண்­டனை விதிக்­கப்­பட்­டுள்­ளது.

பிர­பல ஹாஜா மைமுனா கேட்­ட­ரிங் நிறு­வ­னத்­தின் பங்­கு­தா­ரர்­

க­ளில் ஒரு­வ­ரான 37 வயது இஸ்­மா­யில் டிடே இப்­ரா­ஹிம், தம்­மீது சுமத்­தப்­பட்ட குற்­றச்­சாட்­டு­களை ஒப்­புக்­கொண்­டார்.

இஸ்­மா­யிலும் அப்­பெண்­ணும் 2017ஆம் ஆண்­டில் திரு­ம­ணப் பந்­தத்­தில் இணைந்­த­னர். ஆனால் இரண்டு ஆண்­டு­கள் கழித்து, அவர்­கள் மண­மு­றிவு செய்­து­கொண்­ட­னர். முன்­னாள் மனை­வி­யைப் பழி­வாங்­கும் நோக்­கு­டன் 2020ஆம் ஆண்டு மே மாதம் 12ஆம் தேதி­யன்று தெலுக் குராவ் வட்­டா­ரத்­தில் அப்­பெண்­ணின் வீட்­டிற்கு இஸ்­மா­யில் கார் ஓட்­டிச் சென்­றார்.

அப்­போது அவ­ரி­டம் 'தின்­னர்' திர­வம் நிரப்­பப்­பட்ட போத்­த­லும் கறுப்­புச் சாயத்­தைப் பீய்ச்­சி­ய­டிக்­கும் சிறு கொள்­க­ல­னும் இருந்­த­தாக நீதி­மன்­றத்­தில் தெரி­விக்­கப்­பட்­டது.

அடை­யா­ளம் தெரி­யா­மல் இருக்க மழை­ அங்­கியை அவர் உடுத்­திக்­கொண்­டார்.

இஸ்­மா­யில் தமது காரின் பின் பகு­தி­யில் வைக்­கப்­பட்­டி­ருந்த 'தின்­னர்' போத்­த­லை­யும் கறுப்­புச் சாயத்­தை­யும் கலந்து, எரி­பொ­ருள்

தயா­ரித்தது அந்த இடத்­தில் பொருத்­தப்­பட்­டி­ருந்த கண்­கா­ணிப்பு கேம­ரா­வில் பதி­வா­னது.

பிறகு மழை அங்கி அணிந்­த­வாறு தமது முன்­னாள் மனை­வி­யின் வீட்டை நோக்கி நடந்­து

சென்­றார்.

கடன்­மு­த­லை­கள் செய்­வ­து­போல், 'கடன் வாங்­கி­னால் அதைத் திருப்­பிக் கொடுக்க வேண்­டும்' என்ற வாச­கத்தை சாயத்­தால் அவர் அப்­பெண்­ணின் வீட்­டுச் சுவ­ரில் எழு­தி­னார். அதை­ய­டுத்து, எரி­பொருள் குண்­டைப் பற்­ற­வைத்து முன்­னாள் மனை­வி­யின் வீட்டை நோக்கி வீசி­னார். அந்­தப் போத்­தல் விழுந்து சித­றி­ய­போது தீ மூண்­டது. இஸ்­மா­யில் அவ்­வி­டத்­தை­

விட்­டுப் புறப்­பட்­டுச் சென்­றார்.

சம்­ப­வம் நிகழ்ந்­த­போது அப்­பெண்­ணும் அவ­ரது குடும்ப உறுப்பி ­னர்­கள் வீட்­டின் மேல் மாடி­யில் இருந்­த­தால் என்ன நடந்­தது என அவர்­க­ளுக்­குத் தெரி­ய­வில்லை.

ஆனால் தீ மூண்­ட­தைப் பார்த்த அண்­டை­வீட்­டுக்­கா­ரர் ஒரு­வர் தமது குடும்­பத்­தா­ரு­டன் சேர்ந்து அதை அணைத்­தார்.

அதை­ய­டுத்து, அவர்கள் அப்­பெண்­ணி­டம் தக­வல் தெரி­வித்­த­னர். காவல்­து­றை­யி­டம் புகார் செய்­யப்­பட்­டது. தீச்­சம்­ப­வம் கார­ண­மாக இஸ்­மா­யி­லின் முன்­னாள் மனை­வி ­யின் வீட்­டுச் சுவர், தூண்­கள் சேதம் ­அடைந்­தன. அவ­ருக்கு ஏறத்­தாழ $6,000 இழப்பு ஏற்­பட்­டது.

இதை ஈடு­செய்­யும் வகை­யில் தமது முன்­னாள் மனை­வி­யி­டம் இஸ்­மா­யில் $5,000 கொடுத்­துள்­ளார். அப்­பெண்­ணின் வேண்­டு­கோ­ளுக்கு இணங்க $3,000ஐ இஸ்­மா­யில் அற­நி­று­வ­னங்­க­ளுக்கு நன்­கொ­டை­யாக வழங்­கி­னார்.

இஸ்­மா­யில் வீசிய எரி­பொ­ருள் குண்­டால் யாருக்­கும் காயம் ஏற்­ப­ட­வில்லை. ஆனால் அவ­ரது முன்­னாள் மனைவி மன­ரீ­தி­யாக மிகவும் பாதிக்­கப்­பட்டு மனநல ஆலோ­ச­

க­ரின் சேவையை நாடும் நிலை ஏற்­பட்­டது. சம்­ப­வத்­துக்­குப் பிறகு, பாது­காப்பு உணர்வு இல்­லா­த­தால் அவ­ரது குடும்­பம் $600 செல­வ­ழித்து வீட்­டைச் சுற்றி கண்­கா­ணிப்பு

கேம­ராக்­க­ளைப் பொருத்­தி­யது.

இஸ்மாயில் நேற்று $20,000 பிணையில் விடுவிக்கப்பட்டார். சிறைத் தண்டனையைத் தொடங்க அடுத்த மாதம் 14ஆம் தேதியன்று அரசு நீதிமன்றத்தில் அவர் சரணடைய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!